- கருணை கொல் -
சகாவே
சொல்வதைக் கேள்
கருணையை ஒருபோதும்
நம்பாதே
அதற்கென யாரிடமும்
எந்த வரையறையுமில்லை
அதற்கெந்த
விதிமுறையும் இல்லை
பெற்றுக்கொள்பவன்
பசி பொருத்து
கருணைகள்
சில சமயம் தாயாகவும்
சில சமயம் பேயாகவும்
தன்னை மாற்றிக்கொள்ளும்
விசித்திர உணர்வெழுச்சி
கருணையென சொல்லி
இங்கு
கண்ணீர் சிந்தலாம்
கருணையெனச் சொல்லியே
இங்கு
கொலையும் செய்யலாம்
கடற்தாயின்
கருணை என்பது
தன்னையே நம்பி சுவாசிக்கும்
மீன்களைத் துடிக்கத்துடிக்க மீனவர்களுக்கு
அள்ளிக்கொடுப்பதுதானே
2 comments:
Vera level bro,
the last explanation…
தொடர்ந்து வாசித்து வருவதற்கு... அன்பும் நன்றியும்
கருத்துரையிடுக