பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 29, 2010

புதுக்காதலி........


‎24-12-2010-ல் வாங்கிய புத்தம் இது.

"ரஜினியின் பன்ச் தந்திரம்"

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் இது.ரஜினிகாந்த் திரையில் பேசிய 30 பன்ச வசனங்களைத் தொகுத்திருக்கின்றார் பி.சி.பாலசுப்ரமணியன்....


உதாரணமாக 'படையப்பா' திரையில் ரஜினியின் வசனம் ; 'என் வழி தனி வழி'.வியாபாரம் & வாழ்க்கை என இரண்டுக்கும் இந்த வசனம் எவ்வாறு பயன்படும் என விளக்கப்பட்டுள்ளது. அதே போன்று ரஜினியின் பல வசனங்களை இரண்டு கோணங்களில் பிரித்து; எப்படி பயன்படுத்தலாம் என்பதை விளக்குவதே இந்த புத்தகம்.


"ரஜினி ஒரு நடிகன் மட்டுமே; நமக்கும், தமிழ்க்கும் அந்த நடிகன் பெரிதாக ஒன்னும் செய்யவில்லை நாம்தான் அந்த கிழவனை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடுகின்றோம்"


இப்படி சொல்கின்றவர்களுக்கும் ; சொல்லத் தயாராகின்றவர்களுக்கும் சின்ன நினைவுருத்தல்.


நடிகனால் என்ன கிடைத்தது என 'நோண்டாமல்'; என்னவெல்லாம் பெற்றுக் கொள்ளலாம் என 'தோண்டுவதே'

எனது பாணி.......


இந்த புத்தகம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல; படிக்கின்ற யாவருக்கும் நன்மை செய்தால் நல்லது.

டிசம்பர் 14, 2010

புத்தகக்காதலிகள்....


‎13-12-2010-ல் வாங்கிய புத்தகங்கள்;

1.ருத்ரவீனை(பாகம் 1 & 2)

-இந்திரா சௌந்தரராஜனின் புகழ் பெற்ற நாவல்களில், குறிப்பிடும்படியான நாவல்.ருத்ரவீணை.புதுமையான ஆன்மீக மர்ம நாவல்.'இசையும் ஒரு மருந்து' என்பதை பலங்காலத்து நம்பிக்கை சார்ந்து நாவலாக்கியுள்ளார். இந்த நாவல், சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சிச் தொடராக வந்து பெறும் வரவேற்பை பெற்றது. ...இந்த நாவல் பாகம் ஒன்று ; பாகம் 2; பாகம் 3 என வெளிவந்துள்ளது. விரைவில் மூன்றாம் பாகத்தை வாங்கிவிடுவேன். அதையும் பதிவு செய்கிறேன்.

2. நேற்று மனிதர்கள்

-'சாகத்ய அகாதமி'விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன்-னின் சிறுகதை தொகுப்பு இது.மொத்தம் 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது.1986-ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசு முதற்பரிசு பெற்ற சிறுகதை தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகமும் நானும் ஒரே ஆண்டில் பிறந்திருக்கின்றோம்.அதோடு இந்த புத்தகம் பல தன்னாட்சி கல்லூரிகளில் பாடமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றுக்காக சந்திதித்துள்ளேன்.

3.துணையெழுத்து
4.கேள்விக்குறி

- இவை இரண்டும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது.ஆனந்த விகடனின் தொடராக வந்தது. இவரின் 'சிறிது வெளிச்சம்' புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன்; இவர் மீதும் என் ஈடுபாடு திரும்பியுள்ளது. 'நிச்சயம்' படிக்கவேண்டிய புத்தகங்கள் பட்டியலில் இவரின் புத்தகங்கள் 'நிச்சயம்' இடம்பெறும்.


5.மூன்றாம் பரிமாணச் சிந்தனை.

-தோற்ற்றுவிட்டோம் என்ற ஒதுங்கிய நிலையிலிருந்து மனதை மீட்டெடுத்து; வெற்றியடைய வைக்கும் மந்திரத்தை சொல்லித் தருவது....... எனத் தொடங்குகின்றது இந்த புத்தகம்.எதையும் அணுகும் மாறுபட்ட முறையே ஒருவனை வெற்றியாளனாக்குகின்றது. வெற்றி முதல் பரிணாமம்; தோல்வி இரண்டாம் பரிணாமம்; மூன்றாம் பரிணாமம் என்ன என்பதனை வெற்றியாளர்களுக்கு வேதம் போல்; உவமானக்களுடன் சில சரித்திர உண்மைகளுடன் சொல்லும் ஒரு பொக்கிஷம், இந்த புத்தகம்.

6. மாத்தனின் கதை (மலையாளச் சிறுகதைகள்)

- மொழிபெயர்ப்பு கதைகளையும் ; கவிதைகளையும் படிப்பதன் மூலம், நாம் புரிந்துக் கொள்ள வேண்டியதும், தெரிந்துத் தெளிய வேண்டியதும் அதிகம் என்பதை உணர்ந்திருக்கின்றேன். அதன் காரணம்தான் இந்த மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு.மொழிபெயர்த்தவர் சுரா.

டிசம்பர் 13, 2010

ரத்தச்சரித்திரம்நிலைகள் மாறனும்; நிஜங்கள் புரியனும்...

நித்திரை மறந்து புறப்படுவோம்......

தோள்மீது தோள் வைத்து தோல்விகளைத் துரத்திடுவோம்...

காலோடு கால் சேர்த்து கஷ்டங்களைக் கடந்திடுவோம்..

வா வா இளைஞனே; வருத்தம் ஏன்..?

வெற்றி நமக்கென்று திருத்தம் செய்...!

நித்தம்நித்தம் யுத்தம் செய்யும்
ரத்தச்சரித்திரம்;

உனக்குமெனக்கும் இருக்கும் பகைதான்;
இந்தச்சரித்திரம்;

யுத்தம்மூலம் பூமி கேட்கும்,
‘ரத்தம்’சரித்திரம்;

துச்சமாக உயிரைக் கேட்கும்,
‘பிச்சைப்’பாத்திரம்;

தீயும்கூட ஆறிவிடும், தீமைமாறுமா;

உடனிருந்தேக் குழி பறித்தால்,
உதிரம் தாங்குமா..

கத்தி கையில் வந்தபின்னே,
கருணைத் தேவையா....?

யுத்த நேரம் வந்தபோதும்
மெத்தைத் தூக்கமா...?

இன்று வீசும் கத்தி ‘என்னை’க்
கொன்று வீசிடும்...

அந்த கத்தி மீண்டும்;
உந்தன் கதவைத் தட்டிடும்..

மீண்டும் மீண்டும் இந்தநிலைதான்;
தொடர வேண்டுமா..?

விட்டுசென்ற தடயங்களின்
தரத்தில் குறைவில்லை...

தன்னை நம்பி தானே செல்ல
ஏனோ மனமில்லை...

உந்தன் அனுக்கள்,
உந்தனோடு மறையவேண்டுமா.....?

விட்டுச் செல்ல பாவம் தவிர
வேறு இல்லையோ..!

நீ;

கத்தி குத்தி செத்துப்போனால்;
கண்கள் தாங்குமா..?
தாயின் மார்பும் தூங்குமா..?

நிலைகள் மாறனும்; நிஜங்கள் புரியனும்...

நித்திரை மறந்து புறப்படுவோம்......

தோள்மீது தோள் வைத்து தோல்விகளைத் துரத்திடுவோம்...

காலோடு கால் சேர்த்து கஷ்டங்களைக் கடந்திடுவோம்..

வா வா இளைஞனே; வருத்தம் ஏன்..?

வெற்றி நமக்கென்று திருத்தம் செய்...!

ராக்கூத்துச் சாமிகள்....ராக்கூத்து ஆடும்,
ரங்கன் மகனைத் தெரியுமா..?
என்னோடு அவன்,
இரண்டு ஆண்டு பழக்கம்….

கர்ஜித்துப் பேசி,
கண்வாளை வீசி.....
அவன் போடும் வேசம்,
அத்தனையும் நிசம்................

ஆனாலும் அவன் மாணவன்;
அவனப்பனோ சாதாரணாமானவன்....

எங்களோடவன் அமரும் போதும்,
எதிரெதிர் தினம் கடக்கும்போது..
தலைகுணிவான்,
எங்கள் வசைமொழியால்;

கூத்தாடிமகனென குலுங்கிக் குலுங்கிச் சிரிப்போம்..
ஆத்தாடி நாங்க அவ்வளவு மோசம்;

எங்ககிட்டவன் எதுத்துப் பேசமாட்டான்,
ஏண்டான்னு கேட்டா அதுவும் சொல்லமாட்டான்,

ஆனாலுமவன் நல்லாப் படிப்பவன்;

இன்னிக்கோடு சேர்த்து,
ஆறுநாள் அவனைக் காணோம்...

எங்கடான்னு விசாரிச்சோம்;
என்னென்னமோ கேள்விபட்டோம்;

இனி ரங்கன் மகன்தான்..
ராக்கூத்து ஆடனுமாம்...!

அவனாட ஆட்டம்தான்,
இனி;
அவன் குடும்பத்தை காக்கனுமாம்...

சினிமா சின்னத்திரை;
சீரியஸா ஆனபின்னே,

சிந்திக்கவைக்கும் தெருக்கூத்தை,
சிலராச்சும் பார்கனுமே...

அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு;
அதுபோல இனிமேலு;
தெருக்கூத்தும் ஆகிடுமே...

கண்காட்சி பொருள் போல,
காட்சிக்குத்தான் இருக்கும்....

இதை நம்பி பொழச்சவங்க….
இனி எங்கப்போவாங்க...

ரங்கன் மகனுக்கப்பறம்,
ராகூத்தை நான் பாக்கலை...
அதைத் தொடர ஆளில்லை..

என்னைப்போலின்று

எதுகையும் தெரியாமல்..

மோனையும் புரியாமல்..

சீர் வரிசை-யில் நிற்காமல்....

சந்தமும் இல்லாமல்

எழுத்து வரிசையிலும்;

இன்பம் இல்லாமல்...

எண்ணியபடி எழுதி...

மரபுகளை மறந்ததுபோல்...

தெருக்கூத்தும் போயாச்சி...
தெருவெல்லாம் அழுக்காச்சி...

உழைப்புகளை வெறுத்தாச்சி...
உழைப்பவர்களை தொலைச்சாச்சி...

சீ...சீ.....காட்சி
திரைக்கு வந்தாச்சி..

தெருகூத்து ஆட்டம்
கேவலம் என்றாச்சி....

பசிக்கானா ஆட்டம் போய்;
ருசிக்கான நோட்டம்; வந்து...

கண்ணைக் கெடுக்க காட்சி தந்து....
கெட்டுக்குட்டிச் சோறாச்சி...

ரங்கன் மகன் போல;

சொக்கன் மகனுக்கும்
சொல்லவேண்டியக் கதையுண்டு...

சொல்லும் நேரம் வரட்டும்
சொல்லிவிடுகிறேன்........

அதுவரை.............
ராக்கூத்து சாமிக்கு
ரங்கன் மகன் சார்ப்பில்
அவன் கலைக்கு
என்னால் முடிந்த அஞ்சலி.....


இப்படிக்கு தயாஜி

டிசம்பர் 03, 2010

"தங்கமீன்" என இணைய இதழில் இம்மாதம் எனது "நள்ளிரவு மணி பன்னிரெண்டு " என்ற சிறுகதையும் முதல் முதலாக நான் எழுதும் பேனாக்காரன் என்ற 'பத்தியும்' வெளிவந்துள்ளது. வாசித்தவர்கள் கருத்துகளைப் பதியுங்கள். விமர்சனம் படைப்புகளைச் செம்மைபடுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி.........


http://www.thangameen.com/contentdetails.aspx?tid=௧0௯
http://www.thangameen.com/contentdetails.aspx?tid=௧0௨

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்