- காயத்தின்னிகள் -
தன்
மனக்காயத்திற்கு
ஏதோ ஒருவகையில்
தானே மருந்திடும் மனிதனிடம்
கவனமாக இருங்கள்
அவனுக்கு
எந்தக் காயத்திற்கு
எந்த மருந்தென தெரியும்
எப்போது கொடுப்பது
எவ்வளவு கொடுப்பது
எனவும்
நன்றாகவே தெரியும்
அதிலும்
தன் காயத்தை
தானே சிதைத்து சிதைத்து
காயக்காய அதன்
பக்குகளைப் பிய்த்தெடுத்து
சரிசெய்யும் மனிதனிடம்
ரொம்பவும்
எச்சரிக்கையாக இருங்கள்
மருந்திடுவற்கு பதிலாக
உங்கள் காயங்களை மேலும்
காயப்படுத்தி அதனை
மீண்டும் மீண்டும் சிதைத்து
உங்கள் வேதனையின் சதவிதத்தை
தன் தேவைக்கேற்க
கழிக்கவும் முடியும்
கூட்டவும் முடியும்
அவன் பசிக்கு
அடுத்தவர் காயங்களே தீனி
0 comments:
கருத்துரையிடுக