- கவிதைகள் காணவில்லை !-
ஒரு கவிதை புத்தகத்தை
வாங்கியதற்காக
ரொம்பவும் கிரியேட்டிவாக
என்னென்னவோ
கொடுத்திருந்தார்கள்
மயில் இறகு
சின்னச்சின்ன பொம்மைகள்
அழகிய எழுதுகோல்
வடிவேலு வசன ஒட்டிகை
வண்ண வண்ண ரிபன்கள்
கைவிரல் அளவு பேனா
யானை முகம் பதித்த அடிக்கோல்
எழுத்துகளை பெரிதாக்கும் பூதக்கண்ணாடி
கவிதைப் புத்தகம்
வாங்கியதற்காக
இவ்வளவையும் கொடுத்தவர்கள்
புத்தகத்தில்
கவிதைகளைக் கொடுக்கவேயில்லை
அதுசரி
அது இருந்திருந்தால்
ஏன் இவ்வளவையும்
நமக்கு கொடுக்கப்போகிறார்கள்
0 comments:
கருத்துரையிடுக