- என்நிற பட்டாம்பூச்சி -
பெயர் இல்லாத
பட்டாம்பூச்சி நீ
இல்லை
பெயர் சொல்லாத
பட்டாம்பூச்சி நீ
அதுவும் இல்லை
பெயர் சொல்ல விரும்பாத
பட்டாம்பூச்சி நீ
ஒருவேளை இப்படியிருக்கலாம்
என்னிடம்
பெயர் சொல்ல விரும்பாத
பட்டாம்பூச்சி நீ
அல்லது இப்படியாகவும்
இருக்கலாம்
உன்னை பட்டாம்பூச்சி என
அறிந்து கொள்ளக்கூடியவனிடம்
மீண்டும் மீண்டும்
உன்னை அறிமுகம் செய்வது
நமக்கு நேரவிரயமே
குறைந்த ஆயுளுக்குள்
குறையா காதலுக்குள்
சிறகடிப்போம் வா
0 comments:
கருத்துரையிடுக