பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 30, 2011

தண்ணீர் தேசம்
(29-09-2011 )
கண்ணதாசனின் 'சுருதி சேரதாக ராகங்கள்' படித்து முடித்துவிட்டேன். அது குறித்து பகிர்ந்தும் விட்டேன் என் வலைத்தளத்தில். அடுத்ததாக வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்' புத்தகத்தை எடுத்திருக்கிறேன். 8/11/2009-ல் வாங்கிய புத்தகம் இன்று காலைதான் அலமாரியில் இருந்து எடுத்திருக்கிறேன். தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் என சொல்லப்படும் புத்தகம் இது. வைரமுத்துவின் ஆரம்பகால படைப்புகள் கவனிக்கத்தக்க ஒன்று. 1996-ல் இந்த புத்தகத்தின் முதற்பதிப்பைச் செய்திருக்கிறார்கள்.
படித்ததும் இப்புத்தகம் குறித்து பகிர்கின்றேன்.....
இப்படிக்கு தயாஜிபடித்தப் பிறகு பார்வை


4.10.2011 பின்னிரவு மணி 12.30.

"தண்ணீர் தேசம்" தன்னைத்தானே தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் என்று சொல்லும் புத்தகம்....!! இதனைப் படித்துவிட்டேன். இது குறித்து என்ன சொல்வது............. முகநூலில் இப்புத்தகம் குறித்து நான் எழுதியதையும் நண்பர்களுடன் பேசியதையும் கொடுப்பதே போதும் என நினைக்கிறேன்.

நண்பர்களுடன் ஏற்பட்ட உரையாடலில் சில………….

Tharmarajan Gunasekaran
படித்துப் பாருங்கள். அருமையாக இருக்கும்.
தமிழ் ரோஜா & கலைவண்ணன் காதலும், சலீம், இசக்கி, பாண்டி இவர்களின் பாத்திரப் படைப்பும் படிப்பதற்கு ஆர்வமூட்டும்.

Tayag Vellairoja
பாதி படித்துவிட்டேன்........... நண்பர்கள் நீங்கள் எதிர்ப்பார்த்ததுபோல் அது குறித்து எழுத மாட்டேன்....
Tharmarajan Gunasekaran நண்பா.... எல்லோர்க்கும் அருமையாக இருக்கும் என்பதிற்கில்லை சிலருக்கு அறுவையாகவும் இருக்கலாம்... தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் என சொல்லியிருக்கின்றார் அதன் படைப்பாளர். வெறும் புள்ளிவிபரங்களை உரையாடலின் ஊடே சொல்லிவிட்டால் விஞ்ஞானக் காவியம் ஆகிவிடுமா….?

ஸ்ரீவிஜி விஜயா
இந்த புத்தகத்தை கதைக்காக படித்தால் தலை வலிக்கும்.. தமிழை சுவைப்பதற்காகப் படித்தால், ரசிப்பீர்கள்.சிறிய சிறிய தகவல்கள் கண்களை அகல விரியவைக்கும்..சுவாரிஸ்யம்

Tayag Vellairoja
உண்மைதான் அக்கா... விஞ்ஞானக் காவியம் என சொல்லி.......... தகவல்களை கொடுத்திருக்கின்றார்.......

வட்டாரக் கல்வி வேறு; அறிவியல் வேறு...............

ஸ்ரீவிஜி விஜயா ‎
:)))))))))) there u r.

Tayag Vellairoja

நன்றி அக்கா...... படித்த பிறகு என் பார்வை என்ன என்பதனை இப்படித்தான் எழுதப்போகிறேன்.... வெறுமனே வைரமுத்துவைக் காப்பாற்ற நினைக்காமல்.......... அவரை ஒதுக்கிவைத்து விட்டு... விஞ்ஞானக் காவியம் என சுயவிளம்பரம் செய்யும் இந்த தன்முனைப்பு படைப்பாகவே இந்த தண்ணீர் தேசத்தைப் பார்க்கிறேன்.
இதில் விஞ்ஞானத்தை விடவும் தகவல்கள் அதிகம், தகவல்களை விடவும், தன்முனைப்பு வாக்கியங்கள் அதிகம் , தன்முனைப்பு வாக்கியங்களை விடவும் பாடல் வரிகளும் கவிதை நயங்களும் அதிகம்….
இதை எழுதியவர் வைரமுத்து என்பதை கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து அல்லது மறந்து உண்மையான வாசிப்பை இந்த படைப்பின் மீது செலுத்தினால் மேற்சொன்னதுதான் பதிலாக கிடைக்கிறது…..


ஸ்ரீவிஜி விஜயா

உங்கள் பார்வை எதார்த்தம்.வாழ்த்துகள். நான் மேலோட்டமாகத்தான் தம்பி.. எனக்குப் புரிய கஷ்டமாக இருந்தது


Tayag Vellairoja
நன்றி அக்கா.... நீங்கள் எதார்த்தம் என்கிறீர்கள் சிலர் "நீ என்ன வைரமுத்துவை விட பெரியவன்ன்னு நினைப்பான்னு" கேள்வி கேட்கறாங்க.....:) பாவம் அவர்களின் மைல்கல் அவ்வளவுதான்...

ஸ்ரீவிஜி விஜயா
சும்மானாலும் கிளப்பி விடுவார்கள்... உங்க பாணியிலே தொடருங்கள். உங்க வாசிப்புத் திறன்..பெருமைபட வைக்கிறது. இன்னுன் 20திலே இருக்கும் நீங்கள், எங்க வயதிற்கு (40+) எங்கியோ போயிடுவிங்க தம்பி. சிறந்த படைப்பாளியாவீர்கள்.. விழுந்து விழுந்து எழும் போது எழுத்தில் பக்குவம் வரும்..தொடருங்கள் உங்கள் பணியை உங்க பாணியிலே... வாழ்த்துக்கள்.

..............................................................................................................


ஒருவேளை இந்த தண்ணீர் தேசம் எழுதபட்ட ஆண்டுகளின் விஞ்ஞானக் காவியமாகத் தெரிந்திருக்கலாம்….. ஆனால் இப்போது படிக்கும் போது வெறும் புள்ளிவிபரங்களு தன்னம்பிக்கையும் தமிழின் அழகே தெரிகிறது……..
உங்களுக்கு என் கருத்தில் மாற்றுக் கருத்து இருக்கலாம்; சிலர்க்கு இருக்கும்;வாருங்கள் கருத்து பறிமாறுவோம் ஆனால் படித்து முடித்த பிறகே முன்வாருங்கள்; உங்கள் விஞ்ஞான எதிர்ப்பார்பையும் தண்ணீர் தேசம் ஏமாற்றும்…………..

இப்படிக்கு தயாஜி………

செப்டம்பர் 29, 2011

சுருதி சேராத ராகங்கள் - ‘படித்த பின் பார்வை’


சுருதி சேராத ராகங்கள் - ‘படித்த பின் பார்வை’கண்ணதாசனின் ‘சுருதி சேராத ராகங்கள்’ படித்தேன். நான்கு மாறுபட்ட குடும்பத்தில் நடக்கும் பாலியல்தான் கதைக்களம்.


முதல் குடும்பம். கணவனின் உடல் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறாள் மனைவி. என்னதான் அவர்களுக்குள் நெருக்கத்தில் குறைவில்லையென்றாலும்; இரவில் கணவனின் கணம் மனைவிக்கு தாங்கமுடியாத வலியைக் கொடுக்கிறது. கணவனின் உடல் பசிக்கு மட்டுமாவது ஒருத்தி தேவை என தேடுகிறாள்.


இரண்டாவது குடும்பம். பல நாள் பேசாமல் இருந்த மனைவியிடம் தானே பணிந்து பேச ஆரம்பிக்கிறான் கணவன். அதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் தன் தவறுகளை உணர்ந்து பேச ஆரம்பிக்கின்றார்கள். மனைவி கர்பமாகிறாள். கணவனுக்கு; அவனையும் மீறிய சந்தேகம் எழுகிறது. இதற்கு முன்பு வரை மனைவி செய்த்தெல்லாம், இப்போது சந்தேகத்தை ஆழப்படுத்துகிறது. குத்தலாக பேச ஆரம்பிக்கும் கணவனின் சந்தேகம் மனைவியை மேல்மாடியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்ல காரணமாகிறது.


மூன்றாவது குடும்பம். கணவன் மீது தீராத காதல் வைத்திருக்கிறாள் மனைவி. தினமும் கணவன் தன் அருகிளேயே இருக்க வேண்டும் என விரும்புகிறாள். ஒவ்வொரு இரவையும் கணவனுடன் கட்டிலில் கழிக்கவே ஆசை கொள்கிறாள். கணவனுக்கோ உடல் பசி மட்டுமே குடும்பத்திற்கு முக்கியமல்ல. காம்ம் ஓர் அங்கமாகவே படுகிறது. மனைவியில் இந்த கட்டில் ஆசையை எப்படி சமாளிப்பது என யோசித்தே அவளுக்கு அறிவுறைகள் சொல்லி; அவளை வருத்தப்பட வைக்கிறான்.


நான்காவது குடும்பம். குடும்பம் என சொல்வதைவிட ஒரு இளம் விதவை எனவே சொல்லலாம். அவள் ஆதரவற்றவள். ஆசிரியை. அவளைவிட பதினைந்து வயது குறைந்த ஒரு இளைஞனை சில ஆண்டுகளாக வளர்த்து வருகிறாள். என்னதான் அவள் மனம் அவளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் புற சூழல் அவள் மனக்கட்டுப்பாட்டை தகர்க்கிறது. ஒரு நாள் உனர்வுக்கு அடைமையாகி வீட்டு வாசலில் படுத்திருந்த இளைஞனை உள்ளே வந்து படுக்க சொல்கிறாள். பின்னர் நேரம் ஆகா ஆகா அவளை அறியாமல் அவளது கால்கள் அந்த இளைஞனின் பாய்வரை செல்கிறது. மறுநாள் நன்கு யோசித்து ஊருக்காக ஏன் வழவேண்டும் நாம் நமக்கா வாழ்வோம் என அவளும் அந்த இளைஞனும் முடிவெடுக்கின்றார்கள்.


இந்த நான்கு குடும்பத்தினருக்கும் நெருக்கமான மனோவியல் மருத்தவரிடம் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு எப்போதும் தீர்வை பெறுகின்றார்கள். அவரின் உரையாடல் நடைமுறைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன.


உதாரணமாக ;


கணவனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பலத்தால் பாதிக்கப்படும் மனைவி, பலம் கொண்ட தன் கணவனை பலவீனப்படுத்த வேண்டும். அல்லது வலியை தாங்கித்தான் ஆகவேண்டும்.


ஊருக்கு பயந்து வாழ்வது ஒன்று. தனக்கான வாழ்க்கையை ஊருக்க பயப்படாமல் வாழ்வது ஒன்று. வெளியில் ஊருக்கு பயந்த்து போல் இருந்து உள்ளுக்குள் ரகசிய வாழ்க்கை வாழ்வது ஒன்று.


கணவன் மனைவியிடையே எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மனைவிதானே சொன்னாள் அதனால் என்ன..? கணவன்தானே சொன்னான் அதனால் என்ன..? போன்ற எண்ணங்கள் பிரச்சனைகளை குறைக்கும்.


கணவன் மனைவி கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது இரவுப் பொழுதில் கட்டிலில் செய்வது பிரச்சனைகளை குறைக்கவல்லது.


நான்கு குடும்பத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக கடைசியில் மனோவியல் மருத்துவர் மூன்று பக்கங்கள் பேசி தீர்த்து வைக்கின்றார்.


ஒரே நாளில் இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். இதற்கு முன் மூன்று நாள்களாக ‘நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது’ என்ற புத்தகத்தைப் படித்து தீர்க்கத்தரிசி குறித்து தெரிந்தும் குறிப்பெடுத்தும் கொண்டேன்.


படித்து முடித்த பிறகு ஏதாவது சின்ன களைப்பு ஏற்படட்து. சில சமயம் இப்படி எனக்கு ஏற்படுவதுண்டு. அதனைத் தீர்க்கவே எளிமையான புத்தகங்களை எதையாவது படிப்பேன். சின்ன சின்ன கவிதைகள் வாரா மாத சஞ்சிகைள் நகைச்சுவைகள் அடங்கும்.


அப்படி ஏற்பட்ட களைப்பை கலைவதற்கு புத்தக அலமாரியில் புத்தகங்களைத் தேடும் போது கண்ணதாசனின் இந்த புத்தகம் கையில் கிடைத்தது. தொடக்கத்தில் இருந்து இவர்பால் ஈர்ப்பு உள்ளதால் இந்த புத்தகத்தை படிக்க எடுத்தேன். பக்கங்கள் குறைவு.ஈருப்பு.ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கை.


இந்த மாதிரியான புத்தகங்கள் நேரத்தை வீணடிக்கலாம்; இதற்கு செலவிட்ட நேரத்தை தமிழில் முக்கியமாகக் கருத்தப்படும் நாவல்களுக்கு செலவிட்டிருக்கலாம்; இந்த நாவல் என் அடுத்தக் கட்ட எழுத்து பயணத்திற்கு பெரியாத பயன்படாது என்கிற ரீதியில் என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் சொன்னார்கள்.


அவர்கள் கூற்றிலும் உண்மை இல்லாமலில்லை.


இந்த நாவலை இப்போது நான் படித்ததன் காரணம் என் களைப்பை தீர்க்கவே அன்றி; என் முன்னேற்றம் கருதி அல்ல. 28 தேதி தொடங்கி மறுநாள் காலையில் 29.9-ல் படித்து முடித்துவிட்டேன். இரவு வேலை என்பதால் படிக்க முடிந்தது. அப்படி இப்படி என மொத்தமே செலவான நேரம் ஏறக்குறைய 3 மணி நேரமே இருக்கும். ஆக நேரமும் அதிகம் வீண் போகவில்லை.


இந்த நாவலைப் பற்றி சொல்லவேண்டுமெனின்; சிறுகதை ஒன்றில் சொல்ல வேண்டியதை நீட்டிக்கொண்டு போய் நாவல் என்று சொல்லியிருக்கின்றார்கள். இது குறுநாவல்.


இன்னமும் கூட ஆழமாக இந்த நாவலில் சொல்லியிருக்க முடியும். ஆனால் அப்படி எழுதப்படவில்லை. மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கின்றது. மருத்துவரின் ஆலோசனையையும் கதையின் ஊடே சொல்லியிருக்க முடியும். அப்படி செய்யவில்லை. எழுதியவர் கண்ணதாசன் என்பதாலும்; நான் கண்ணதாசனின் விரும்பி என்பதாலும் இதனைப் படித்ததாக வைத்துக் கொள்ளலாம். இருந்தும் வழக்கம் போல இந்த ‘சுருதி சேராத ராகங்கள்’ குறுநாவல் மூலம் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது.

சுருதி சேராத ராகங்கள்

(26.9 முதல் 28.9 ) 'நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது!' என்ற புத்தகத்துடன் மூன்று நாள்களைக் கழித்துவிட்டேன். நாஸ்டர்டாமஸ் என்கிற தீர்க்கதரிசி குறித்தும் பல வியப்பான சம்பவங்களையும் படித்து குறுப்பெடுத்துக் கொண்டேன்.

(28.9.2011) இப்போது படிக்க வேண்டிய புத்தகமாக கண்ணதாசன் எழுதிய 'சுருதி சேராத ராகங்கள்' என்ற நாவல் ஒன்றினை எடுத்திருக்கிறேன்.

கிட்டதட்ட 6 ஆண்டுகளாக அப்பாவின் புத்தக அலமாரியில் இந்த புத்தகம் இருந்தது. எடுப்பேன்;திறப்பேன்;சிலவரி
கள் படிப்பேன்;மூடி வைத்திடுவேன்;மறந்திடுவேன்.

சென்ற முறை வீட்டிற்கு சென்ற சமயம் சில புத்தகங்களுடன் இதனை எடுத்து வந்தேன்.

கண்ணதாசனை ரொம்ப பிடிக்கும் என்பதால் என் அலமாரியில் வருசையாக இருந்த கண்ணதாசன் புத்தகங்களில் ஒன்றை படிக்க எடுத்த போது மீண்டும் கண்ணில் பட்டது இந்த புத்தகம்.

படித்ததும் பகிர்கின்றேன்; வழக்கம் போல

////////பாலியல் பிரச்சனையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுநாவல்.////////

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்