- தையற்கலை -
எழுத்தென்பது பேராயுதம்
அது போராயுதம்
என்கிறார்கள்
நான் அதை
ஊசியாக்கிக்கொள்கிறேன்
விட்டுவிடுங்களேன்.
இங்கு
கிழிந்து கிடக்கும்
இதயங்களை இணைத்து
தைக்க
அதுதான் வசதியாக இருக்கிறது
மேலும்
வலி கொடுக்காமல் இருக்கிறது
'அமைதியை விரும்புகிறவன்
எப்போதும் போருக்கு தயாராய் இருப்பான்'
என்பதை நான்
இவ்வாறுதான் புரிந்துகொள்கிறேன்
என் தையலும் அதுதான்
என் கலையும் அதுதான்....
0 comments:
கருத்துரையிடுக