பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 30, 2010

படித்ததைப் பகிர்கின்றேன்


என்னை கவர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய புத்தகங்களை சமீபத்தில் வாங்கினேன். பட்டாம்பூச்சி விறபவன், கண் பேசும் வார்த்தைகள், பாலகாண்டம் என்று முறையே கவிதைகள், பாடல் பிறந்த கதை, கட்டுரைகள் தொகுப்பு . தற்போது படித்து முடித்தது 'பால காண்டம்' எனும் கட்டுரை நூல். குங்குமம் வார இதழில் இவர் எழுதிய இவரின் பால்ய வயது அனுபவம்தான் இந்தக் கட்டுரையின் சாரம்.

பால்யம் என்பது தனக்கு ஏற்படுத்திய பாதிப்புகளையும் தனக்கு விடை கிடைக்காத கேள்விகளையும் நம்மோடு பகிர்கின்றார் நா..முத்துக்குமார் சினிமா பாடல்கள் மூலமும், கவிதை தொகுப்புகளின் மூலமும் என்னைக் கவர்ந்தவர் இந்த கட்டுரைத் தொகுப்பிலும் வழக்கம் போல் கவர்கின்றார்.

இவரின் சொல்விளையாட்டு (சொல் நயம்) இவரின் கட்டுரை தலைப்புகளில் தெரிகின்றது. இளமை நினைவுகளி மாய சிலேட்டுப்பலகை என்றும் சாலைக் குழிகளை, நிலா மிதக்கும் பள்ளம் என்றும் வர்ணிக்கின்றார்.

அதிலும் அக்காவை இரண்டாம் தொப்புள் கொடி என்று தனக்கு இல்லாத அக்காவால் தனக்கு அக்காக்களான தோழர்களில் அக்காக்களைப் பற்றிக் கூறுகின்றார். இவரின் பால்ய நண்பன் கேசவனைச் சொல்லும் போது, எனது பால்ய நண்பன் கேசவனை நினைக்கமுடிகின்றது.

காலம் எழுதும் கடிதம் என்ற தலைப்பில் இவர் கடிதத்தூது சென்ற காதல் கடிதம் பற்றி சொல்லி இப்போது அந்த காதலர்களை சொல்லும் போழுதினில் நம் முன்னும் சிலரைக் காணமுடிகின்றது.

கடவுளைக் கண்ட இடங்களில் என்ற தலைப்பில் இவரின் எழுத்து நடை இப்படி வருகின்றது........

"சில சமயம் விளையாட நண்பர்கள் இல்லாத நேரங்களில் என் பொழுதுபோக்கு எறும்புகளைக் கொல்வதாய் இருந்தது, ஒரு பேரரசன் போல என்னை உருவக்கித்துக் கொண்டு சுவற்றில் ஊறும் எறும்புகளை என் கோட்டைக்கு வருகிறாயா..? என்ன செய்கிறேன் பார் உன்னை...? என்று கர்ஜித்தப்படி ஒவ்வொன்றாக பிடித்து தரையோடு தேய்த்து கொன்றுவிடுவேன் " இதை படிக்கும் போது என் கண்முன் ஒரு காட்சி ஒலி/ளி-யேறியது. அதில் நான் எங்கள் வீட்டின் பின் புறத்தில் அமர்ந்து எறும்பு புத்தை கலைத்து அதிலிருந்து பெரிய உருவம் கொண்ட எறும்புகளைத் தேடிப்பிடித்து கொல்கின்றேன். அம்மா; இது பற்றி அப்பாவிடம் புகார் சொல்லும் போது , அப்பா வெகு சாதாரணமாய் நானும் அப்படித்தான் என்கிறார்..........

நாய் வளர்த்ததையும் நா.மு. இப்படி சொல்கின்றார். புலி வளர்க்க காடும்,காசும் இல்லாததால் நாங்கள் நாய் வளர்த்தோம். அதற்கு டைகர் என்றே பெயரிட்டோம். இந்த வரியில் நான் கொஞ்சம் சத்தமாகத்தான் சிரித்தேன்.

மொத்தம் பதினைந்து தலைப்புகளில் தனது பால்ய காலத்திற்கு நம்மை அழைத்து சென்ற நா.மு. அதன் கடைசி அத்தியாயத்தில் இப்படி சொல்கின்றார், ஒரு சம்பவத்தை மேற்கோள்காட்டி;

"ஒரே சம்பவம் பால்யத்தில் இரண்டு வெவ்வேறு விதமாக பதிவாகின்றது. பாலகாண்டம் ஒரு நதியைப் போன்றது. தண்ணீர் வற்றிவிட்டாலும் மணலுக்கடியில் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது"


இந்த புத்தகம் என் பாலகாண்ட பயணத்திற்கு பாதை கொடுத்துள்ளது. நீங்களும் படித்துப்பாருங்கள் என்று சொல்லமாட்டேன். நீங்களும்படித்து உங்கள் பாலகாண்ட பாய சிலேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவுகளை நினைவுக்கூறுங்கள்.

நன்றி

வணக்கம்.

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்,


இப்படிக்கு தயாஜி

ஆகஸ்ட் 14, 2010

புத்தகக்காதலிகள்....


கொஞ்ச இடைவேளைக்கு பிறகு "காத்திருந்து" வாங்கிய புத்தகங்கள் இவை.

# சிவமயம் பாகம் இரண்டு

- என் அபிமான எழுத்தாளர் இந்திராசௌந்திரராஜன் எழுதிய புத்தகம் இது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த முதல் பாகம் படித்து மிகவும் அதிசயித்தேன்.அதன் பின் இதன் இரண்டாம் பாகம் இருப்பத்தை சமீபத்தில்தான் இணையம்வழி தெரிந்துக் கொண்டேன்.இப்போது வாங்கியும்விட்டேன்.சிவமும் சித்தர்களும் செய்யும் விளையாட்டில் மனிதர்களின் பங்களிப்பு குறித்து தனக்கே உரிய எழுத்தாளுமையில் சொல்லியிருப்பார் இந்திரா சௌந்திரராஜன்.


# ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க


- இந்த தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்தேன் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி . இதன் எழுத்தாளர் கோபிநாத். விஜய் தொலைக்காட்டி தொகுப்பாளர். இவரின் 'நீயும் நானும்' எனும் ஆனந்த விகடன் இதழ் தொடரின் தீவிர வாசகன் நான்.


#அம்பலம்


-நம்ப தலைவர் சுஜாதா வழிநடத்திய இணைய இதழின் தொகுப்பு இந்த நூல். இணையத்தில் தவறவிட்ட நான் இப்போது வாங்கிவிட்டேன். கடைக்காரர் ஒவ்வொரு சுஜாதாவின் புத்தகத்தை காட்டும்பொழுதும் "வாங்கிட்டேன்".."வாங்கிட்டேன்" எனும் என் பதிலுக்கு அவர் "அப்போ இந்தா நீங்களேத் தேடிக்கோங்க.." என்று தந்த ஆசிவாதத்தால் கிடைத்த புத்தகம் இது.


# பட்டாம்பூச்சி (பரிசு பெற்ற கவிதைகள்)

# பாலகாண்டம் (கட்டுரைகள்)

# கண்பேசும் வார்த்தைகள் (பாடல் பிறந்த கதை)


இவை மூன்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். பாடல்களின் வரிகள் மூலம் என்னைக் கவர்ந்த இவர் இதிலும் கவர்வார் என்பதில் ஐயமில்லை.


# பூமிப்பந்தின் புதிர்கள்


- எழுத்து க.பொன்முடி. நமது பூமியில்..! ஆங்காங்கே நடக்கும், இருக்கும் அதிசயம் , ஆச்சர்யம் குறித்து சொல்லும் புத்த்கம் இது. நான் எழுதும் கதைகளில் வரும் அமானுஷ்யங்களுக்கும், ஆச்சர்யங்களுக்கும் இவ்வகை புத்தகங்கள் உதவும். என கதையில். கதையையும் தாண்டி ஏதோ தகவல்கள் இருப்பதாக படித்தவர்கள் சொல்கின்றார்கள்.


# உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி


-இதன் படைப்பாளர் அரிந்தம் சவுத்ரி. வாழ்வில் போராடவும் தொடர் வெற்றிக்கும் தேவையான ஒன்பது குணங்களைச் சொல்லும் நூல். இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த புத்தகங்களை ஒரே கோட்டில் வைக்க முடியாது. அதே போல்தான் என் வாசிப்பையும் என்னால் வகைப்படுத்த இயலவில்லை.சில புத்தகங்கள் என் கொள்கைக்கு முரணானவை சில புத்தகங்கள் என்னையே எனக்கு வேறாகக்காட்டுது.. எது எப்படியோ நான் தேடி வாங்கிய புத்தகங்களைவிட என்னை தேடிய புத்தகங்கள்தான் அதிகம். எதற்கும் ஒரு காரணம் உண்டு என்ற என் சிந்தாந்தத்தை நோக்கியே என் தேடலை வைக்கின்றேன் இப்போதும்.

விரைவில் இந்த புத்தகங்களை வாசித்து நேசித்து... வழக்கம்போல் உங்களோடு பகிர்கின்றேன். நன்றி


தயாஜி

ஆகஸ்ட் 13, 2010

தமிழன்.....

தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
தாய்க்கு மகனாய் பிறந்தவன் தமிழ்........
தாய்க்கு தன் உயிர் கொடுப்பவன்....
மொழியே இல்லா பொழுதினின் இலக்கணம் வளர்த்தவன்,
தொல்காப்பியன்...
எழுத்தாய் இருந்த இலக்கணத்தை ஈரடியாக்கி.....
நேரடிச் சொன்னான் திருவள்ளுவன்...
உலகப் பொதுமுறை..
திருக்குறள் உண்மையின் விதை....
ஈரடி விதைதான் காவியமானது இளங்கோவடிதான்,
மீண்டும் புதுமைப் படைத்தது...
ராஜராஜாக்கள் ஆண்ட காவிய உலகை....
குடியானவன் ஆண்டான்...
அவன் கோவலன் ஆவான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
சிலம்பும் செய்தான்..
பெண்ணின் உரிமை சொன்னான்...
விஞ்ஞானம் பிறக்காத போதே...
மெஞ்ஞானம் பெற்றான்...
அண்டம் என்றான்..
பிண்டம் என்றான்...
ஆணும் பெண்னும் ஆதிசிவன் என்றான்...
ஆணுக்கு பெண்ணும்..
பெண்ணுக்கு ஆணும்..
சரிசமம் செய்தான்.. ஏறாத போதே....
இளனியின் தண்ணி கண்டான்...
கிரகம் ஒன்பது என்றான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
தேய்பிறை குறித்தான்...
பேய் மழைத் தடுத்தான்...
காடுகள் காத்தான்..
மரங்களை மதித்தான்....
உண்மையை சொன்னான் அதை.....
உறுதியால் வென்றான்....
எமனையும் எதிர்த்தான்..
பரம் பொருளையும் துதித்தான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
பொக்கிஷம் பல பார்த்தவன் இன்று..
பொருளுக்கு வழியின்றி தவிக்கிறான்...
பொருமையும் இன்றி திரிகிறான்...
பிறர் பார்த்தால் கூட,
ரத்தம் கொதிக்கிறான்...
அடுத்தவன் ரத்தம் வர ரசிக்கிறான்...
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
இயலாமையிக்கு அடிமைதான்...
காரணம்,....
முயலாமை என்பதை மறந்திட்டான்....
எங்கே செல்கின்றோம் மறந்திட்டான்...
உயிரை மதியாது மறிக்கிறார்....
இன்னும் இருக்குது...
இருந்தும் என் கண்ணீர் தடுக்குது...
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
இந்த நிலமை மாறனும்..
இனிதே விரைவில் நடக்கனும்...
அசைக்க முடியாதிருக்கனும்....
ஆண்டவெனும் தமிழனை மதிக்கனும்....
மீண்டும் இமயம் தொட்டிட......
தமிழனின் பயணம் தொடரனும்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
...........தயாஜி..........

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்