- ஒருநாள் கூத்து -
தெருவோரத்தில்
பூ விற்கிறார்கள்
பழம் விற்கிறார்கள்
காய்கறிகள் விற்கிறார்கள்
குளிர்பானம் விற்கிறார்கள்
சமுக வலைத்தளத்தில்
கணக்கு வைக்கத் தெரியாதவர்கள்
சிலருக்கு அது
வாழும் நாளின் வேலை
சிலருக்கு அது
அவ்வப்போதைய வேலை
உங்களுக்கு
காதல் இருக்கிறதோ இல்லையோ
பக்தி இருக்கிறதோ இல்லையோ
விழா இருக்கிறதோ இல்லையோ
தேவை இருக்கிறதோ இல்லையோ
இன்றொருநாளாவது
அவர்களிடம் வாங்குங்கள்
எதையாவது வாங்குங்கள்
வாங்குங்கள்
ஏனெனில்
அவர்களிடம்
உறுதியாய் இருக்கிறது
பசித்த வயிறு
ஒரு நாள் கூத்துதான்
என்றாலும்
ஒருநாளாவது வயிறு நிறைய
சாப்பிடட்டும்
0 comments:
கருத்துரையிடுக