- சொந்த கடவுள் -
மிகவும் பிடித்த முருகனுக்கு
கூப்பிட்டால் கேட்கும் குகனுக்கு
நம்பிவிட்டால்
குழந்தையும் அவன் தான்
குமரனும் அவன் தான்
குடுகுடு கிழவனும் அவனேதான்
கும்பிட்டால் கந்தகடவுள்
அவன்
கூப்பிட்டவரின் சொந்த கடவுள்
குன்றிலும் இருப்போன்
நற்குணத்திலும் நிற்போன்
சொல்லச் சொல்ல அழகாகும்
அந்தச் சொல்லே
அவனால் அழகூறும்
என் மொழியின் இறையே
என் வழியின் துணையே
உன்னைப்பாடவும்
உன்னைத்தேடவும்
உன்னிடம்
பாடி ஆடி தேடி ஓடவும்
பூத்துக்குலுங்குகிறது
இப்பூசம்
நேர்த்திக்கடன்களை நேர்செய்யும் தைப்பூசம்
எங்களுக்கு எப்போதும்
அது புகழ் மணக்கும்
தமிழ்ப்பூசம்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்
0 comments:
கருத்துரையிடுக