பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 26, 2012

வார்த்தைகள் தொலைத்து வழிப் பயண மனிதர்கள்



வழி நெடுக்க வார்த்தைகள்
கவனிக்க மறந்த கொவத்தின்
வெளிப்பாடாய்
வாசல்வரை ஆயுதங்களுடன்
அதன் அணிவகுப்பு
காலம் காலமாக
சொல்லிக் கொண்டிருந்த
‘அன்பு’
எனும் வார்த்தை
இதுநாள் வரை தான்
பூசிக் கொண்டிருந்த
மென்மை உடன் உண்மை என
ஏமாற்று பூச்சிகளை
அழித்து
ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமான
இருண்ட விழிகளுடன்
கொலையும் கலையுடன்
நடையும்
நிர்வாண உடையும்
சேர
ஒவ்வொரு வீட்டுக்
கதவின் இடுக்கில்
படுக்கையை மொய்க்கிறது
முனகல் சத்தத்தை
தானும்
முனுமுனுத்தவண்ணம்
கூரைக்கும் பூமிக்கும்
குதியாய் குதிக்கிறது
மூச்சுவாங்க
வியர்த்து வடிய
வெளிவரும் உருவங்களின்
எந்த
உறுப்பிலும்
எந்த
கீறலிலும்
எந்த
பசையிலும்
தான் இல்லாதது
‘அன்பு’-பின்
ஆக்ரோஷத்தை கூட்டுகிறது
உடன்
‘கருணை’
‘பாசம்’
‘நேசம்’
‘நட்பு’
‘நம்பிக்கை’
போன்ற
தோழமை வார்த்தைகளென
தாங்களும் குதித்தலில்
பங்கேற்கின்றன...
குதித்து குத்தித்து கூரைமேல்
இன்னமும்
எந்த ஒரு
பிசகும் இல்லாத
‘காமம்’
வார்த்தைக்கு
கடவுள் என
பெயரிடுகின்றன..
இதுவரை
செய்ததையும்
இனிமேல்
செய்வதையும்
இனியும்
செய்கிறதையும்
பட்டியலிட்டு
குதித்துக் கொண்டிருந்த
வார்த்தைகளை
ஒரு முறை
படிக்க பணித்தது
படித்த வார்த்தைகள்
தாங்கள்
இல்லாத இருப்பிடத்தின்
வெட்டவெளியை
ஒப்புக்கொண்டன
இருக்கைகள் இழந்த
வார்த்தைகள்
கடவுளுக்கு சேவகனாக
விண்ணப்பித்தன
‘காமம்’
கையெழுத்து போடும் முன்பு
பூமியில் எங்கோ ஒரு மூலையில்
அழுகுரல்
குழந்தை பிறந்த அடையாளம்
சேவகம் செய்ய வேண்டிய
வார்த்தைகள்
கொஞ்சம் பெருமூச்சி விடுகின்றன
‘காமம்’ வார்த்தையும் சிரிக்கிறது
வெற்றி யாருக்கு
பிறந்த குழந்தையில்
கதவில்
வாசலைத் தேடி
குதித்துக் குதித்துக் கொண்டே
பயணிக்கின்றன
இதுவரையில் நாம்
கவனிக்க மறந்த வார்த்தைகள்


-----தயாஜி------

ஜனவரி 17, 2012

சிவப்பு கம்பளம்


யார் போனாலும்
யார் வந்தாலும்
சிவப்பு கம்பளம் மட்டும்
தொடர்ந்து புத்தாக்கம் செய்யப்படுகிறது
வருகையை சிறக்க அல்ல
தத்தம்
வருமானத்தை தற்காக்க.......

'நகம்' நான்


நீங்கள்
வெட்ட வெட்ட
வளர்ந்துக் கொண்டிருப்பதால்
எனை
மயிறென நினைக்காதீர்கள்
'நகம்' நான்
கழுத்துவரை வந்துவிட்டேன்
கவனிக்கவும்......

வார்த்தைகளை புணர்கிறேன்


சாக்கடை ஞாபகங்கள்
தடை செய்யவே
காகிதவார்த்தைகள்
கற்றுக் கொடுக்கின்றன......

சில மட்டும்
வார்த்தைகளோடு
வாக்குவாதம் செய்கின்றன.....

பாவம் நானல்ல
எனக்கான
வார்த்தைகள்.......

மீட்கவே
வார்த்தைகளை புணர்கிறேன்......

தீ

தீ
காட்சியாக்கப்பட்டு
போதிக்கப்படுகிறது - அனைக்க

கற்றவர்
காட்சியினை
போதிக்கிறார்
சோதிக்கிறார் - கொளுத்த

தீ
எரிந்துக்கொண்டே
வலிக்கிறது

தொடர்ந்து
காட்சியாக்கப்பட்டு
போதிக்கப்படுகிறது
சோதிக்கப்படுகிறது
தீ - குறைந்தால்
கொளுத்தப்படுகிறது

எல்லோரும் கற்றோம்
தீ - அனைக்க

எதனையும் கிழித்திடவில்லை
போதனை மட்டும்
செய்கிறோம்

எரியும்
தீ - எரியட்டுமே
எவன் செத்தால் நமக்கென்ன

ஜனவரி 13, 2012

இப்பொழுது வாசிப்பில்

(13.2.2012)
ற்போது படிக்கத் தொடங்கியிருப்பது
'புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்'. எழுத்து ஜெயமோகன். நண்பர் நவின் முன்மொழிந்திருந்த மிக முக்கிய புத்தகம் இது.

சமகாலத்தில் கவனிக்கவேண்டிய ஆக்கங்களும் அதனை எழுதியவர்கள் குறித்தும் ஜெயமோகன் இதில் சொல்லியிருக்கின்றார்.

இப்போதுவரை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'உறுபசி', 'யாமம்' ஆகிய நாவல்கள் குறித்து ஜெயமோகன் சொல்லியிருப்பதை படித்து முடித்தேன். இப்போது எஸ்.ரா-வின் 'நெடுங்குருதி' பற்றி ஜெ.மோ சொல்லியுள்ளதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.


இந்த வரிசையில் ;
யுவன் சந்திரசேகர், மனுஷ்ய புத்திரன் , எம்.கோபலகிருஷ்ணன், ஜோ டி குரூஸ், சு.வெங்கடேசன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், சாரு நிவேதிதா - ஆகியோர் குறித்தும் அவர்கள் ஆக்கங்கள் குறித்தும் சொல்லியுள்ளார் ஜே.மோ.
நிச்சயம் பயனுள்ள புத்தகம்தான்.

இப்படிக்கு ;
-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்