- ஆளுக்கொரு விசை -
- ஆளுக்கொரு விசை -
எவ்வளவோ தூரம்
சென்றுவிட்டோம்
எனக்கு எட்டாத
தூரத்தில்
நீயும்
உனக்கு எட்டாத
தூரத்தில்
நானும்
இந்தத் தூரம் போதவில்லைதான்
இன்னும் கூட
கொஞ்ச தூரம்
ஆளுக்கு ஒருவழியில்
செல்லலாம்
எல்லைகளென
எதுவும் வைக்காத போது
எவ்வளவு தூரத்தில்
இருக்கின்றோம்
என்பதை எப்படி
புரிந்து கொள்வது
ரொம்ப தூரத்தில்
நீ அங்கு
ரொம்ப தூரத்தில்
நான் இங்கு
அதனாலென்ன
இன்னும் கூட
கைகள் கூடாத
கண்ணுக்கே தெரியாத
யாரையும் நினைக்க வைக்காத
தூரத்திற்கு போகலாம்
எந்தக் கவலையும் வேண்டாம்
எவ்வளவு தூரத்தில் இருந்தும்
புன்னகைக்கலாம்தானே
உன் புன்னகை எனக்கும்
என் புன்னகை உனக்கும்
அடையாளம் தெரியாமலா
போய்விட போகிறது...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை .
0 comments:
கருத்துரையிடுக