பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 21, 2009

ஞானப்பார்வை

சூரியன் விழிப்பதற்குள், விழிப்பவர்களால் பல காரியங்கள் சாதிக்க முடியும் என்பதை ஏதோ புத்தகத்திலிருந்து படித்து........
கவனிக்க..! படித்துதான் தெரிந்துக்கொண்டேன்.

இது என் தந்தையின் பழக்கம், இன்று என்னால் புத்தகத்தை அனைக்காமலும் படிக்காமலும் துங்குவது இயலாத காரியம்.
இயன்ற காரியம் கைத்தொலைபேசியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது இல்லையேல் என் புத்தகக்காதலிகள் கோவம் வந்துவிடும்.
அப்புறம் திருப்பும் பக்கமெல்லாம் புரியாத மொழிகளைக் காணநேரும்.

இப்போதெல்லாம் இரவில் மூக்கடைப்பு பிரச்சனை இருப்பதால், சுவாசத்தை சீராக்கும் முயற்சிக்குப் பின் துங்க மணி இரண்டுக்கு மேல் ஆகும். புத்தகக்காதலிகள் இதற்கு பேருதவி புரிகின்றார்கள்.

அப்படி ஒரு நாள் விடிந்து விட்டதென அறியாமல் தூங்கிய என்னை, அதிரடியாக எழ வைத்தது ஒரு குறுஞ்செய்தி (கடுஞ்செய்தி..!)

‘இன்று அலுவலகச் சந்திப்பில் அனைவரும் 9.00க்கு வந்திவிடவேண்டும், சில முக்கிய முடிவுகள் எடுக்க................’

அதை தொடர்ந்து படிக்க நேரமில்லை, இன்னும் எஞ்சி இருப்பது முப்பது நிமிடம் மட்டும். சாதாரணமாக எப்படியும் இருபது நிமிடப்பயணம். பத்து நிமிடத்தில் தயாராக வேண்டும்..!

சாத்தியமா..?
யோசிக்காமல் அதீத வேகத்தில் புரப்பட ஆயுத்தமானேன்.

எடுக்க வேண்டிய பொருட்கள்பற்றி கவலையில்லாமல் மோட்டாரில் பயணிக்கத் தொடங்கினேன்

(ஏனோ என் வாழ்க்கை பயணம் நிறைந்ததாகவே இருக்கின்றது)

வீட்டிலிருந்து ஐந்தாவது நிமிட தூரத்தில் இருக்கும் அந்த பெரிய மரம் என் தலையில் விழ்ப்போவது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியாத ஒன்றுதான்....

இதோ இன்னும் ஐந்து வினாடியில் அச்சம்பவம் அரங்கேற்றம் காணப்போகின்றது. இன்னும் மூன்று வினாடிகள்....
........................................................................................................சில தினங்களுக்கு முன்பு,

“அத்தை கதை தெரியுமா..?”
“என்ன கதை...? ஆரம்பிச்சிட்டியா..!”

அத்தைக்கு எப்பவும் நான் பேச ஆரம்பிச்சா கொஞ்சம் பயம் தானாகவே வந்துவிடும். அதும் அவங்களோட நம்பிக்கையைப் பற்றி பேசிட்டா...... அவ்வளவுதான்.
அவங்களும் என்னதான் செய்வாங்க.., ஆரம்ப காலத்திலிருந்தே ஊறிப்போன நம்பிக்கைகள். சடங்கு சம்பிரதாயம் , காணிக்கை... இன்னும் சிலர் அவங்க ஏமாற அவங்களே பணம் தரும் சின்னப்பிள்ளைத்தனம். இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம்.

எதைக் கேட்டாலும் ஒரே பதில்...'.எல்லாம் அவன் செயல்’
இங்கு எல்லாம் ‘அவனவன் செயல்’ என்பதை எப்போ புரிந்துக்கப் போறாங்க...

கடவுளே....! பாருங்க அவங்களோட பழக்கம் எனக்கும் தொத்திக்கிச்சு. எல்லாத்திக்கும் ஆகாயத்தைக் காட்டி தன் மேல் தப்பில்லைங்க.. கோழைத்தனம். வேற என்ன சொல்ல..?
அங்கப் பாருங்க எங்க அத்தையை அவங்களோட குரு படத்துக்கு பூஜை போடப்போறாங்க..!

ஒரு கூட்டம் கடவுள்னு சுத்துது.. மற்றது இப்படி மனுஷங்க பின்னை குருன்னு சுத்துது.

பள்ளியில் ஆரம்பக்கல்வியை கத்துக் கொடுத்த ஆசானை தெரியாது, எங்கயோ ஒரு மூலையிலெ இருக்கிற கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத மனுஷனுக்கு இங்க இருக்கறவங்க செய்ற வேலை இருக்கே,, கேட்டா சேவையாம்....

அன்னிக்கு அப்படித்தான் வேலை முடிஞ்சி வரும்போது ஒரு விபத்து. நானும் யாரா இருக்கும்னு பார்க்கபோனேன். ரத்தவெள்ளத்தில் துடிக்கிறவனுக்கு தூக்கிவிட ஒருத்தர்தான் முயற்சி செய்தாரு.

மத்தவங்கெல்லாம் அங்க பேசின வார்த்தை என்ன தெரியுமா.. அந்த பையன் அந்த ரோட்டிலே வேகமா மோட்டரை ஒட்டிகிட்டே இருப்பானாம் , அங்கவுள்ளவங்க கொடுத்த சாபம்தான் இப்படி பலிச்சிருச்சாம். இதே உயிர் பொயிட்ட சொல்லுவாங்களா சாபம் பலிச்சிருச்சி தான்தான் சாபம் கொடுத்தேன்னு ஒப்புக்குவாங்களா...?
சாமி பேரை சொல்லி உயிரை பலி கொடுக்கும் இவங்களைப் பொருத்தவரை...இதெல்லாம் சாதாரணம்.. காச்சள் வந்தா கண்ணாரு.. வீடு எரிஞ்சா செய்வினை.. காணாபோனா வெத்தலை பார்த்து தேடறது..

“அத்தை நீங்க குரு..குருன்னு சொன்றிங்களே..அவரைப்பத்தத இனையத்துல ஒருத்தர் எழுதியிருக்காரு”

“ம்...அப்படியா என்ன எழுதியிருக்காரு.... அவரோ சீடரா..?”

“ஆரம்பிச்சுட்டிங்களா..? முழுசா கேளுங்க அப்புறம் தெரியும் அவர் சீடரா.. நல்ல மனுசனான்னு”

“புரியும்படியே நீ பேசமாட்டியா..? எப்பப்பாரு ஏதோ சாமியாரு மாதிரி பேசர..!!”

“அத்தை என்னை அந்த பட்டியலில் சேர்த்துடாதுங்க.. சரி சொல்றேன் கேளுங்க, உங்க குரு கையில் விபூதி எடுக்கிறது மோதிரம்... தங்க சங்கிலி.. எடுக்கிறது எல்லாம் எப்படி தெரியுமா..? ”

“அது அவங்க.. செய்த தவத்துக்கு கடவுள் தந்த அருள்.. மறந்துட்டியா உங்க மாமா சாவபொழைக்க இருந்தாரு அவரை குணமாக்கினது அந்த குரு கொடுத்த விபூதிதான்.. ”

“மருந்து கொடுத்த டாக்டரை மறந்துட்டிம்க்களே.. அத்தை..?”

“உன்கிட்ட பேசமுடியாது..”

“நல்லது ,! அப்போ கேளுங்க. சில ஒரு மூலிகை வேர் இருக்கு அதை அரச்சி கையில் பூசி காயவைச்சா... அது கையில் இருக்கிறது கண்ணுக்குத் தெரியாது.. ஆனா... அதை தடவனப்பிறது ரெண்டு கையையும் உரசினா.. விபூதி வரும்..!!”

“அப்படின்னா... அவரு செய்றது கண்கட்டு வித்தைன்னு சொல்றயா..? நான் நம்பலை”

“எப்பதான் நம்பறிங்க..? அடுத்ததா இன்னொன்னு சொல்றேன்.. சொல்றேன் என்ன காட்டுறேன் பாருங்க.. அந்த குரு செய்ற வேலையை..”

அத்தையிடம், எனது மடிக்கனினியில் நண்பன் அனுப்பியுள்ள வீடியோப் படத்தைக் காட்டினேன். அதில் ஒருவர் காவியுடையுடன் மக்களுக்கு ஆசி வழங்கியப்பின் ஒருவருக்கு தன் கையில் தங்ககிலியை வரவைத்துக் கொடுத்தார்.... பொருமை இழந்த அத்தை.

“இது எப்பவும் நடக்கிறது தானே இதில் என்ன இருக்கு,,?
அவருக்கு கிடைக்கனும்னு விதி இருக்கு..”

“விதி இருக்கா,..? இதெல்லாம் சதி அத்தை சதி..! நல்லாப் பாருங்க.. ஒருத்தர் இவர் கையில் தட்டை கொடுக்கறாரா..?”

“ம்”

“இவரும் தட்டை வாங்கி நிக்கிறாரா..?”
“ம்”

“நல்லா பாருங்க.. அத்தை அந்த தட்டின் கீழ் இருந்துதான் ஏற்கனவே ஒட்டி வைச்சிருந்த சங்கிலையை இவர் எடுத்து கையில் வச்சி..... கொஞ்ச நேரம் ஏதோ பேசி திடிர்னு சங்கிலி வந்த மாதிரி வந்தவருக்கு கொடுக்கிறாரு தெரியுதா..?”

“அப்படின்னா....???!!!”

“அதான் தெரியுதே இதெல்லாம் ஏமாத்து வேலைன்னு .. இப்பவாவது நம்பறிங்களா..?”

“எது எப்படியோ , எல்லாத்திற்கும் காரணம் இருக்கும் குரு இப்படி செய்றானுன்னா.. கண்டிப்பா காரணம் இருக்கு உனக்கு தெரியலை அவ்வளவுதான்..”

“உங்களுக்கு தெரியுதா..?”

“நான் நம்பறேன் அவரை. அதனால அதைப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை”

“ஆமா அத்தை காரணம் இருக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்ற...........அதோ அங்க பாருங்க அந்த பயித்தியக்காரனை...! எப்பவும் இந்த ரோடிலேதான் சுத்துது அதுக்கும் ஏதும் காரணம் இருக்குமா...?”
எங்கள் பேச்சை முற்றவிடாமல் மாமா வந்ததால் பேச்சை அத்தோடு நிறுந்தினோம்.
.....................................................................................................


இன்னும் இருப்பது இரண்டு வினாடிதான். வேகாமாக மோட்டாரில் சென்றுக் கொண்டடிருந்த சமயம் சட்டென்று அந்த பயித்தியக்காரன் குறுக்கே வந்து தடுத்தான்..!!!

அவனை மோதாமல் இருக்க மோட்டாரை நிறுத்த அதும் கொஞ்சம் இழுத்தவாரு அவனருகில் நின்றது. அப்போது அவனுக்கு பின்னால் அந்த பெரிய மரம் விழுந்தது..!

இன்னும் நான் இரண்டு அடி முன்பு சென்றிருந்தால் நிச்சயம் அந்த மரம் என் தலையில் விழுந்திருக்கும்.
இவனுக்கு எப்படித் தெரியும்..? யாரிவன் பயித்தியம்தானே..?

ஒரு வேலை அத்தை சொல்வது போல அனைத்திற்கும் எதாவது காரணம் இருக்குமா..?
அதை எப்படித் தெரிந்துக் கொள்வது..?


...................தயாஜி வெள்ளைரோஜா....................

செப்டம்பர் 18, 2009

கேசவன்............

கேசவன்............


யார் இந்த கேசவன்..? என்பதை தெரிந்துக் கொள்ளும் முன்பாக..... என்னைப் பற்றி சொல்லிவிடுகின்றேன். சமீக காலமாக, என் பார்வைக்கு தெரிபவர்கள் எல்லோரும் ஏற்கனவே பழகிய முகமாய் தெரியத்தொடங்கினர். அதை நம்பி சிலரைப் பார்த்து... முறைப்பை பரிசாகவும் பெற்றுள்ளேன்.

சாப்பாட்டு கடையில் ஒருவரை பார்த்து எங்கோ பார்த்த நினைவில் சிரித்து வைத்தேன் .அவரும் பதிலுக்கு அருகில் இருப்பவரிடம் ஏதோ சொல்லிவைத்தாள்.இதற்க்குப் பிறகு அதைப்பற்றி விவரிக்கவேண்டாம், (மானப்பிரச்சனைதான்..!)

என் பள்ளிக் காலம் முதல் இன்று வரை நான் நினைவில் வைத்துக் கொள்ளாத முகங்கள் எத்தனையோ.... என் முகமே எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.


சிலர் செய்யும் செயல்களும் ,நடவடிக்கைகளிலும், பேசும் மொழியிலும் என்னால் பழைய முகங்களை கொஞ்சம் மயக்கநிலையில் உணர முடிகின்றது. நீங்களே கூட என்னுடன் பேச ஆரம்பித்தால், உங்கள் செயலோ,நடவடிக்கையோ எனக்கு என் பழைய முகங்களை நினைவுக்கூரும்.அதிலிருந்து உங்கள் முகம் மாறுபடும். நாளை வேறு முகம் தேவை உங்கள் முகத்தை எனக்கு நினைவுப்படுத்த..!

அப்படி எனக்கு பல முகங்களை நினைவுப்படுத்தியது கேசவனின் முகம். நம்புவீர்கலா.... எட்டு வயதில் நான் பார்த்து, பழகி, சண்டையிட்டு, சேர்ந்து, கிண்டல்செய்து, அடிவாங்கி, அடித்து, ......... விளையாடிய முகம் ,மீண்டும் பார்க்கின்றேன் பதினைந்து வருடம் கழித்து.....!

இவனை மீண்டும் பார்த்தது.. பெர்ரிரிரிரிரியய்யய
இ டை வே ளை யிலிருந்து மீண்டு பார்த்தது.....12.9.09 RTM-ல் நடைபெற்ற தீபாவளிக்கான ஓலி/ஒளிப்பதிவில்.

அந்த வயதில் அதிகம் பேசிய நான் இன்று அறிவிப்பாளராக பேசி உங்களோடும் இப்போது பேசுகின்றேன்..

அந்த வயதில் அதிகம் ஆடிய அவன் இன்று புகழ்பெற்ற நடனக்குழுவில் நடனமாடுகின்றான்.

அவனோடு பேசிய நான் மறுபடியும் நினைவால் பள்ளி சீருடை அணிந்தேன். இரண்டு வாரம் தோய்க்காத சப்பாத்து.
(நினைவில் மட்டும் சுத்தம் எதற்கு)........

எங்கள் உரையாடல்
“அதாண்டா காதுக்கு வெளியெகூட முடி இருக்குமே..?”

“அது ராமச்சந்திரன் சார்...... அவருகிட்ட வாங்காத அடியா..? என்னா அடி வாங்குவோம்”

“அந்தாளு பரவாயில்லை அந்த ‘சொட்டை’ (ஐயா மன்னிக்கவும் நண்பருடன் இப்படித்தான் உரையாடினேன்) அடிப்பாகப்பாரு... முதுகிலயே .. கடவுளே... சாவடிச்சாருடா.. ”

“ஞாபகம் இருக்கா அப்பவே நாம பாட்டுக்கு டான்ஸெல்லாம் ஆடினோம்.”

“ம்....அதான்....ம்.. ஆ... ‘நீ கட்டும் சேலை மடிப்பிலே’ அந்த பாட்டுக்குதானே நீ, நான் காளிதாஸு,திலகா, சரோஜினி அப்புறம் இன்னொரு பிள்ளை ..!பேரு மறந்துட்டேண்டா..!!!”

“விடு,..விடு.. அப்பயே ஆடினவண்டா நீ இப்பவும் ஆடற..ஓகேதான்..!”

“நீ மட்டும் கதை சொல்லி கதை சொல்லியே இப்போ கதை எழுதற..”

“எப்படா கல்யாணம்..?”


இதற்குமேல் எங்கள் அந்தரங்கம் .அது வேண்டாம் உங்களுக்கு.

பள்ளியில் நாங்கள் ஆடிய நினைவு மட்டுமல்ல அந்த நிழற்படமும் (மன)கைவசம் உள்ளது. என் வரையில் என்னை சுற்றிலும் நடப்பவைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது..!
யாரால் என்பது தெரியாது..
நானாகக் கூட இருக்களாம்..
ஏன் நீங்களாகவும் இருக்களாம்..?

பார்த்த அவன் முகம் எனக்கு பல முகத்தைக் காட்டியது..

மலர் - இவள் அழகானவள் . கேசவன் யோசிச்சன் நடக்கலை.
காதலிக்கத்தான் ,!

கோமதி - இவளுக்காக இவளின் தம்பிக்கெல்லாம் சாப்பாடு வாங்கி
தந்திருக்கேன்

புஸ்பா - என் மீது அதிக அக்கறைக் கொண்ட ஆசிரியை

சுப்ரமணியம் - எங்கள் செல்ல ஆசிரியர்.

இன்னும் இருக்கின்றது பல முகங்களும் பல மனங்களும்.....

இதைப் படிக்கும் நீங்கள், என் நினைவிற்கு வர வாய்ப்புள்ளது. தேடிக் கொண்டிருக்கின்றேன். நீங்களாக இருந்தால் வேலை மிச்சம்..!

யோசித்துப்பாருங்கள் நான் உங்களுக்கு எதையும் நினைவுப் படுத்துகின்றேனா..?

................................தயாஜி வெள்ளைரோஜா........................................

செப்டம்பர் 17, 2009

அடுத்தது நீ......

...... #3/8 முதல் 14/8 வரை மின்னல்fm (மின்னல் பன்பலையில்) நாள் ஒன்றுக்கு 2 நிமிடம் முதல் 3 நிமிடம் வரை ' எண்ணங்கள் வண்ணங்கள் ' தொகுப்பில் பிற்பகல் மணி 2.30க்கும், ' நட்சத்திர மேகம் ' தொகுப்பில் இரவு மணி 9.55க்கும் ஒலியேறிய தொடர் குறு நாடகம் இது. இதன் கடைசி முடிவை நேயர்கள் அழைத்து சொல்லவேண்டும்...அவர்களின் முடிவும் இக்கதையின் முடிவும் ஒத்துப்போகுமனால்... சொன்னவருக்கு மடிக்கனினி கிடைக்கும் (எழுதியவருக்கு .......?????? )இதற்கு சிரமம் பாராமல இசையாக்கம் செய்து மேலும் மிரட்டியவர் நண்பர் ஆனந்த....நடித்தவர்கள் தேன்மொழி.லோகேஷ்வரி கணேசன்,பொன் கோகிலம், சரஸ், சித்ரா.ஆனந்த.... அவரோடு கதைசொல்லியாக "நான்".
மர்மக்கதை எழுதும்படி மேலதிகாரிக் கேட்டுக் கொண்டதற்கினங்க.... ஒரே நாள் இரவில் எழுதி முடித்தேன்..! எனக்கே இது சற்று ஆச்சர்யம்தான். இருந்தும் , என் வாழ்வில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தால் ........இதுபோன்ற கதைகள் பெரிய ஆச்சர்யத்தை எனக்கு ஏற்படுத்துவதில்லை.....
என் கதைகளிலும் கவிதைகளிலும்..... ஏதாவது ஒரு மூலையில் 'நான்' (நானாகா முயற்சிக்கும் நான் ) ஒலிந்திருப்பேன்.......
படைத்தவன் இத்துடன் விடைபெறுகின்றேன்.... இனி படியுங்கள்......வாய்ப்பிருந்தால் கருத்து சொல்லுங்கள்இல்லையேல் விடைபெறுங்கள்.......! .............................#

#....................................#....................................................#
அடுத்தது நீ.............(1)


யாரும் எதிர்ப்பார்க்கவில்லை இப்படி நடக்குமென . அவளைத்தவிர.இது ஒன்றும் அவளுக்கு புதிதும் அல்ல....!
ஆரம்பத்திலிருந்தே அவளால் பலவற்றைச் சரியாக யூகிக்க முடிந்தது.
சில உதாரணங்கள்..........
சிலரைப் பார்த்ததும், அவர்களின் பிறந்த தேதிகளைச் சரியாகச் சொல்லுவாள்.திரைப்படங்களும், வெற்றி பெறுமா இல்லையா என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவாள்.சாலையில் செல்லும் போது அது விபத்துக்குள்ளாகும் என இவள் சொல்லும் ஐந்தாவது நிமிடம் குறிப்பிட்ட வாகனம் விபத்துக்குள்ளாகும்.
இவ்வாரு பலவற்றை சரியாக யூகித்தவள்தான் தேவி
அவள் நடப்பதை யூகிக்கின்றாளா..?அவள் யூகிப்பது நடக்கின்றதா...?
என்ற கேள்வி அவளது தோழிகளுக்கு வந்தது ........ அபாயம்....... அன்றுதான் ஆரம்பித்தது..
அபாயம் எப்படி ஆரம்பித்த்து என்பதை தெரிந்துக் கொள்ள காத்திருங்கள் நாளைவரை....................

#-------------------------------------#-----------------------------------------------#அடுத்தது நீ .........(2)


அன்று ஞாயிறு, தேவியும் அவளின் இரண்டு தோழிகளான....
கஸ்தூரியும் கவிதாவும் தேவியின் வீட்டில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அந்த இரண்டு தோழிகளின் பேச்சு எங்கோத் தொடங்கி தற்சமயம், முழுக்க முழுக்க தேவியின் அந்த அபூர்வ சக்தியை சுற்றியே இருந்தது. ஆம் அன்றுதான் அவர்கள் தேவிக்கு இருக்கும் யூகிக்கும் சக்திக்கு அபூர்வ சக்தி என்று பெயரிட்டனர்.
அவர்களின் பேச்சு இப்படியாக தொடர்ந்தது, “ சரி தேவி இப்போ நான் இந்த புத்தகத்திலே ஒரு பக்கம் திருப்புவேன்,........ அது எத்தனையாவது பக்கம்னு நீ சரியா சொல்லனும்....அப்படி சொல்லிட்டா..... உனக்கு அபூர்வ சக்தி இருக்குன்னு 100% நாங்க ஒப்புக்கொள்வோம் இல்லைனா..... அது அப்படி ஒன்னும் அபூர்வ சக்தி கிடையாது....எதார்த்தமா நடக்கறதை நீ சொல்றே அவ்வளவுதான்...சரியா..?’
என கேட்டாள் கஸ்தூரி.
அதற்கு கவிதா, “என்ன கஸ்தூரி அப்படின்னா நீ தேவியை நம்பலையா..?”
“சும்மாதான்..... நாமும் சோதிச்சுதான் பார்ப்போமே.... என்ன தேவி சம்மதமா..?”
தேவி சிரித்தவாரே,
“ஆமா பெரிய கண்டுபிடிப்பு உனக்கு என்ன நோபல் பரிசா கொடுக்கப் போறாங்க.......இந்த அபூர்வ சக்தியால நான் படும் கஷ்டம் எனக்குதான் தெரியும்...... ” “அப்படியென்ன பொல்லாத கஷ்டம்..?”
என இருவரும் வினவ....
அதற்கான பதிலை அந்த இருவரோடு செர்ந்து நாமும் தெரிந்துக்கொள்வோம்..
அதற்கு நாளைவரை காத்திருங்கள்.........
#-------------------------------------#-----------------------------------------------#அடுத்தது நீ.....(3)சமையல் அறையில் இருந்து மூவறும் வரவேர்பறைக்கு வருகின்றனர்.
கஸ்தூரி, “ஆமா ஏதோ கஷ்டம்னு சொன்னியே என்ன தேவி அது..?அந்த சக்தியால் நீ நடக்கறதை சொல்லிடற.....
அவ்வளவு ஏன் பரீட்ச்சைக்கு வரும் கேள்விகளைக் கூட சரியா கணிச்சு படிச்சு ‘பாஸ்’ ஆகிடற......
(சாப்பாட்டு தட்டின் சத்தம்.வானொலி சத்தம்)
உன் புண்ணியத்தில நாங்களும் ‘பாஸ்’ ஆகிடறோம்..!”
கஸ்தூரியின் இந்த கேள்விக்கு,
“ஹலோ நாங்கன்னு எதுக்கு என்னையும் சேத்துகற..நான் படிச்சுதான் பாஸ் ஆகிருக்கேன்..!” என்றாள் கவிதா.
அதற்கு தேவி,(லேசாக இருமிவிட்டு)
“படிச்சுதான் பாஸ் ஆகிருக்கியா...... சொல்லவே இல்லை....”
கவிதா,
(சிரித்தவாரே)
“இல்ல நாம் எல்லாம் படிச்சுதான் பாஸ் ஆகிருக்கோம்னு வேளியே சொல்லியிருக்கேன் அதான்..”
சட்டென்று தேவி,(அதிர்ச்சியுடன்,நடுக்கமானக் குரலில்) “அதான்..... அதான்...... என்னோட கஷ்டம் அதான் என்னோட பயம்........ ”
கஸ்தூரி,
“அப்படி சொல்றதுல என்ன கஷ்டம்..பயம் உனக்கு....... அதுக்கு ஏன் உன் கை இப்படி நடுங்குது.....?”
கவிதாவும் கஸ்தூரியும், (கத்துதல்)
“தேவி...தேவி..”
தேவிக்கு என்ன நடந்தது , அவளின் பயத்திற்கு என்னதான் காரணம்....
தெரிந்துக் கொள்ளக் காத்திருங்கள் பயமில்லாமல் நாளைவரை..........
#-------------------------------------#-----------------------------------------------#

அடுத்தது நீ.....(4)


ஏதோ பேச ஆரம்பித்த தேவி, பேச்சுத் தடுமாற மயக்கமடைந்து விழுகிறாள்.
இருவரும் , “தேவி.... தேவி....”
கஸ்தூரி , “கவிதா நீ பார்த்துக்கோ நான் போய் தண்ணி கொண்டுவறேன்..”
கஸ்தூரி,
“முருகா..முருகா தேவிக்கு ஒன்னும் ஆகக்கூடாது... ஒன்னும் ஆகக்கூடாது..காப்பாத்து ... காப்பாத்து.....”
கஸ்தூரியின் மடியில் படுத்திருந்த தேவியின் எடை கூடியது. அவள் தன் சுயத்தன்மையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள்.
கஸ்தூரி,
“கவிதா...... கவிதா..... தண்ணி எடுக்க அவ்வளவு நேரமா.. சீக்கிரம் இங்க வா......?”
(பக்கத்தில் இருக்கும் கடிகாரம், சட்டென்று கீழே விழுகின்றது.....)
(சூழ்நிலை மிக பதட்டமாக மாறுகின்றது......)
மீண்டும் கஸ்தூரி,
“கவிதா..கவிதா.. சீக்கிரம் வா.....” (காற்றின் வேகம் ஜன்னலை மோதியது..விசித்திர சத்தம் அறை முழுக்க பரவியது.....கண்ணாடிக்கிண்ணம் விழுந்து சுக்கு நூறாகின்றது.)
அப்போது தேவி கொஞ்சமும் தனக்கு சம்பந்தம் இல்லாதக் குரலில்,
“அவ..வரமாட்டா..அவ வரமாட்டா....”
பேசியது யார்..? தேவிக்கு என்ன ஆனது..? கவிதா எங்கே..?தெரிந்துக்கொள்ள கத்திருங்கள் நாளைவரை.....

#-------------------------------------#-----------------------------------------------#
அடுத்தது நீ.....(5)(காற்றின் அழுத்தம் ஜன்னலை வேகமாக மோதியது...)
சட்டென்று வானொலியும் தொலைக்கட்சியும் மாறி மாறி இயங்க ஆரம்பித்தது.....
எதிர்பாராத வண்ணம் மின்சாரத்தடை ஏற்படுகின்றது
சமையல் அறையில் இருந்து கவிதாவின் குரல்.... “கஸ்தூரி எங்கே இருக்கே..... ”
தேவியிடமிருந்து விசித்திர சிரிப்புச் சத்தம்.
(சிரிப்புச் சத்தம் அறையெங்கும் எதிரொலித்தது )
கவிதா,
“கடவுளே இங்கே என்ன நடக்குது... ஒன்னுமே புரியலையே”
கவிதா தன் மடியில் படுக்கவைத்திருந்த தேவியை தள்ளிவிட்டு எழுந்தாள்.
(சத்தம் கெட்டல்)
அவள் செய்வதறியாது ,கஸ்தூரியையும் காணாது வெளியே ஓடத் தொடங்கினாள்,
வாசலை நெருங்கியவள், ஓடும் வேகத்தில் எதோ கால் தடுக்கி....கீழே விழுந்தாள்.. மின்சாரத்தடையால் சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருந்தது.
(இடி இடிக்கும் சத்தம்,அடை மழை சட்டென்று தூறும் சத்தம்)
மின்னலின் வெளிச்சத்தில் அவள்..அவள்... பார்த்தது....!
ஏதோ ஒரு உருவம் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துக் கிடந்தது.இவளுக்கு மிக நெருக்கமான..பழக்கப்பட்ட ஒரு உருவம்தான் அது....
அந்த உருவம் கஸ்தூரியா..?
தேவியா..?
இல்லை வேறு யார் அந்த நேரத்தில் ரத்தவெள்ளத்தில்..?
தெரிந்து கொள்ள காத்திருங்கள் நாளைவரை......

#-------------------------------------#-----------------------------------------------#
அடுத்தது நீ.....(6)


(அலுவலக மதிய உணவு வேலை..)
“எங்க தேவா நீ சொல்லு அது யாரா இருக்கும்..? கேசவன் உனக்கு தெரியுமா அது யார்னு...? தெரிஞ்சா சொல்லேன் பார்க்கலாம்...?”
தேவா, “எங்களுக்கு எப்படி மணி தெரியும் ..! நீயே சொல்லேன்..”
மணி,“அட..அது எப்படி முடியும்....நான்தான் அப்பவே சொன்னேனே..கதை மட்டும்தான் சொல்லுவேன் முடிவை பேப்பர்ல கதை பிரசுரம் ஆனதும் வந்த நீங்களே படிச்சு பார்த்து தெரிஞ்சிக்கோங்கன்னு.. சரின்னுதானே சொன்னிங்க....... நீங்களே கண்டு பிடிங்க..?”
கேசவன், “மணி.....” (முடிப்பதற்குள்)

மணி தொடர்ந்து,
“உனக்கு மட்டும் என்ன ஹிந்தில சொல்லனுமா..? கதை பேப்பர்ல வந்ததும் படிச்சுப் பார்த்து தெரிஞ்சிக்கோ..என்ன..!”
கேசவன்
“அதுல்ல மணி.. ” மணி கொஞ்சம் சிரித்தவாறே
“அதுல்லனா வேற எது.....?”
தயங்கியவாறு கேசவன்,
“ஒன்னு கேட்கனும்..?”
“கடனைத்தவிற வேற என்ன வேணும்னாலும் கேளு நண்பா..?”
கேசவன், “இந்த மதிரி கதை உன்னால எப்படி யோசிக்க முடிந்தது..?அதும் நீ சொல்லும்போதே அப்புறம் என்ன நடக்கும்னு..எங்க மனசு பதபதக்கற மாதிரி எப்படி எழுத முடிந்தது..?”
மணி, “சொன்னா நம்புவியா..?”
“ம் சொல்லு..!”

“எனக்கும் அந்த அபூர்வ சக்தி இருக்கு.....!”
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
மணி சொல்வது உண்மையா..?
அபூர்வ சக்தி இருக்கின்றதா..?
இப்படி ஒரு கதை எழுத அந்த அபூர்வ சக்திதான் காரணமா..?ஒருவேளை அப்படியொரு அபூர்வ சக்தி மணியிடம் இருப்பது..
அவன் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்காதா..?
அதன் விளைவைத் தெரிந்துக் கொள்ள காத்திருங்கள் நாளைவரை......

#-------------------------------------#-----------------------------------------------#அடுத்தது நீ.....(7)

(மோட்டார் சத்தம்)
மணி மனதிற்குள் பேசக்கொண்டே மோட்டாரில் பயணிக்கத்தொடங்கினான்.
(மணி மனதில்,)
கேசவனின் கேள்வி அவன் மனதில் அலைமோதத் தொடங்கியது
(அடுத்தது நீ 6)
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
(கேசவனின் குரல் எதிரொலித்தது..மோட்டார் சத்தத்தோடு..)
மணி,“ஆமா எப்படி எனக்கு இப்படி ஒரு கதை சாத்தியம்..? நான் இந்த மாதிரி கதைகளை படிக்கிறதும் இல்லை இந்த மாதிரி திகில் படங்களையும் பார்க்கிறதும் இல்லை..?
..ஆம்.. அன்னிக்கு இப்படித்தான் கதை எழுதலாம்னு.. உட்கார்ந்தேன்..! என்னோடக் கை... ம்.....என்னோடக் கை சொந்தமாவே எழுத ஆரம்பிச்சது..! ”மீண்டும் கேசவனின் குரல்,
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
மணி,
“ஒரு வேலை உண்மையாவே எனக்கு அந்த அபூர்வ சக்தி வந்திருச்சா..? கூடவே ஆபத்து வருமா...? என் உயிருக்கு ஏதும்..?”
குழப்பத்தில் மோட்டாரில் பயணித்தவனின் கண்ணில் பட்டது அந்த கைபேசி,
பேருந்து நிலையம் காலியாக இருந்தது, மணி இரவு வேலை முடிந்து செல்வதால்... அந்த கைபேசியின் வெளிச்சம் அவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தியது..
அந்த கைபேசி இவன் கண்ணில் பட என்ன காரணம்..?ஒருவேளை அபூர்வ சக்தியின் விளையாட்டா..? கேசவன் சொன்னது பலிக்கப் போகின்றதா...?
அதன் சூட்சுமம் அறிந்துக்கொள்ள காத்திருங்கள் நாளைவரை.....

#-------------------------------------#-----------------------------------------------#


அடுத்தது நீ...(8)

(மோட்டார் சத்தம் ,மோட்டர் நிறுத்தும் சத்தம்)
அந்த பேருந்து நிலையத்தில் யாரும் இருக்கவில்லை.. தனியாய் இருந்த கைபேசியை மணி கையில் எடுக்கவும் அது அதிர்ந்து ஒலியெழுப்பவும் சரியாக இருந்தது....
(கைபேசியின் சத்தம்)
மணியின் கைபேசி உரையாடல்,
“ஹலோ .....ஹலோ....!”
கொஞ்சநேரம் கழித்து, மறுமுனையில், தயங்கி தயங்கி..ஒரு பெண்ணின் குரல்....
“ஹலோ யார் பேசரா....ஹலோ..?”
“நான் மணி பேசறேன்.. இது உங்க ‘போனா..’?”
“ஆமா அது என்னோட ‘போன்’தான்.. நான்தான் தவறவிட்டுட்டேன்..? நீங்க எங்க இருக்கிங்க நான் உடனே வரேன்...பிலீஸ்..கொடுத்துடுங்க... ”
“இது என்னங்க வம்பா போச்சி...? ஏதோ கீழேகிடந்த போனை எடுத்தா..இப்படிப்பெசறிங்க..?”
(அழுதவாறு) “மன்னிச்சுடுங்க..மன்னிச்சுடுங்க.. நான் எங்க வரட்டும் சொல்லுங்க வரேன்”
(கடுப்புடன்) “சரி சரி .... அங்காசாப்புரி வழியா வந்திங்கன்னா ஒரு ‘பஸ் ச்தோப்’ இருக்கும் பாருங்க அங்க வாங்க ..சீக்கிரமா வாங்க.. காத்திருக்கேன்..என்ன... ”
“நன்றிங்க ...நன்றிங்க... உடனே வரேன்..”
“ஆமா உங்க பேரு..?” “தேவி......! காத்திருங்க வந்திட்றேன்...!!”
“தேவியா..?!”
மணி அதிர்ச்சியடைந்தான்..
அந்த தேவி இவன் கதையில் வந்தவளோ..? அவளும் அபூர்வசக்தி கொண்டவள்தானே.. இவனை ஏன் காத்திருக்கச் சொல்கின்றாள்...
அந்த காத்திருத்தலில் நோக்கமும் ,அந்த அபூர்வ சக்தின் பாதிப்பையும் தெரிந்துக்கொள்ளக் காத்திருங்கள் நாளைவரை...
#-------------------------------------#-----------------------------------------------#அடுத்தது நீ.....(9)

மணி காத்திருந்தான்...அவனது காத்திருப்பின் நீளம் அதிகரித்தது..சாலையில் வாகனங்கள் வேகமாக செல்ல ஆரம்பித்தன.
இவனும் மேலும் காத்திருக்காமல் மோட்டாரை நோக்கி நடக்க அந்த கைபேசி மீண்டும் ஒலித்தது.
(விபத்துக்குள்ளாகும் சத்தம்)
அவனின் பார்வை இருண்டது..ஏதோ பிகைமண்டபத்தில் தான் இருப்பதாக உணர்ந்தான்..இரு கண்ணையும் நன்றாக தேய்த்துக் கொண்டு பார்க்க ஆரம்பித்தான்..
தன் கண் எதிரில் தனது மோட்டார் ஒரு பெரியா கனரக வாகனத்தின் கீழ் ஒரு உருவத்தோடு ரத்தவெள்ளத்தில் கிடந்தது.
அது யார் என எட்டிப்பார்க்க எழுந்தவனின் தோளில் ஒரு மெண்மையானகை பட்டது..
அந்த மெண்மையானக் கைக்கு சொந்தமான பெண்ணின் குரல்
“பதட்டப்படாதே அது வேரயாரும் இல்லை..........??????”
அந்த கைக்குச் சொந்தாக்காரர் யார்.....? என்ன சொன்னார்..?விபத்துக்குள்ளாகி ரத்தவெள்ளத்தில் கிடப்பது யார்..?கைபேசியை வாங்க தேவி வந்தாளா..?

#................................#....................................................#
......இதுவரை படித்தவற்றின் முடிவு எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்..?நீங்கள் எதிர்ப்பாராத முடிவைத் தரத்தான் என் ஆவல்...........அதில் எனக்கு வெற்றியா... என்பதை நீங்கள்தான் சொல்லனும்.....தொடர்ந்து முடிவைப் படியுங்கள்....................
#................................#.....................................................#அடுத்தது நீ----முடிவு (10)

“பதட்டப்படாதே அது வேரயாரும் இல்லை.. நீதான்...!”
அதிர்ச்சியில் மணி,
“இல்லை..இல்லை.. நீ பொய் சொல்ற...யார் நீ..”
(சிரித்தவாறே) “நான் தான் தேவி நேத்து இங்க அடிப்பட்டு செத்து என்னோட போனைத் தொலைதச்சேன்..?
எங்க என் போன்..?கொடு நான் போகனும்...!!!!!
நீயும் வாயேன்...?இனி உனக்கு இங்க வேலை இல்லை.....?”ஆக்கம் ,................தயாஜி வெள்ளைரோஜா..................
ஊக்கம் ..............படித்து கருத்துரைப்போர்....................
ஏக்கம்...............அடுத்த வாய்ப்பு.....................
தாக்கம்....................சுஜாதா.............................

செப்டம்பர் 06, 2009

தேவதையானவள் (நிரந்தரமானவள்..)தோழியே,
என்னைக் 'கரு'வாக்கியவள்...
அன்னை;
என்னை 'உரு'வாகியவள்...
நீ..;


பாறையென இருந்தவனை;
வார்த்தை உளியால்,
பல சிற்பம் காட்டியவள்....
நீதான் தோழியே..!


உன்னின் இருந்துதான்;
காதலைவிட மேலான ,
நட்பை உணர்ந்தேன்......!

அன்று அடைக்கலமின்றி,
இருந்தவன் நான்...?
தங்களை "சமுதாயம்" என,
அடையாளம் காட்டி
வசைபாடினார்கள்...!


இன்று,
உன் மொழியால்தனி
அடையாளமே...!
உருவாக்கியுள்ளேன்......

இதற்கும்;
அதே பெயரில் ;
வசைபாடுகின்றனர்.....!

இவர்கள்;பார்வையில்...
இல்லையில்லை....

"இதுக்கள்"
பார்வையில் நீயும் நானும்

"காதலர்களாம்...?"

விட்டித்தொலைப்போம்...!
ஜந்துக்களுக்கு தெரியுமா...?
நட்பின் ஆழம்;


இதுக்கள் தாயைகூட ;
சந்தேகிக்கும்

கேவலங்கள்...

நீயாக நீ......
நானாகும் நீ..........
நீயாகும் நான்...........

நாமாகும் நட்பு......................தயாஜி வெள்ளைரோஜா.............

செப்டம்பர் 05, 2009

வேண்டுதல் .... வேண்டாமை....!!

'போகச்' சொல்லும்,
உதடு;
'வரச்' சொல்லும்;
கண்கள்

எதை நான்கேட்க...?

நான் 'இருக்கும்' போதும்,
'இறக்கும்' போதும்....
அருகில் நீ;
இருந்தால் போதும்....

உனது ஸ்பரிசங்கள்தான்
எனது தற்போதைய
சுவாசம்;

உறங்காததாலோ,
என்னமோ;
உளறலாய் உன் பெயர் இல்லை....!!

இருந்தும் முயற்சிக்கின்றேன்,
உறங்க அல்ல..

உன் பேர் சொல்லிஉளற...!

என் இதயக் கருவறையில்நீதான்
கடவுள்...!?

இங்கு என்னைத் தவிர..
யாரும் உட்பிரவேசிக்கக் கூடாது.....

நான் பூஜிக்கநீதான்

தகுதியானவள்;

உன்னை பூஜிக்க ;

தகுதியானவனாக.......

நான் மட்டுமே வேண்டும்....!!

வரம் கொடு.......!...............தயாஜி வெள்ளைரோஜா................

விழிமொழியுடையாள் (எனக்கானவள்..!)
"உன்னை நான் காதலிக்கின்றேன்"

வெறும் மூன்று வார்த்தைகள்தான்;
வெளியில் இருந்துப் பார்க்கும்வரை.......

உன்னைப் பார்த்தவுடன் இந்த வார்த்தையின் விலாசம் தொலைந்துவிடுகின்றது.....!

கண்ணாடி முன்னாடிநின்றும்;
நண்பர்கள் பின்னாடிநின்றும்;

தினம்............
தினம்............

நான் பழகும் 'வக்கியம்';
இன்னும் உன்னை சேரவரவில்லை
அதற்கான 'பாக்கியம்'

சொல்லியேவிடுகின்றேன்..!

முடிவுடன் வந்தால்

வேர்க்கின்றது...வெடவெடக்கின்றது....
எனக்கல்லைஅந்த வார்த்தைக்கு....

உனக்கும் தெரியும்..!
ஆனால்;
என்னை சொல்லவிடுவதில்லை..
உன் விழிகள்

உன் ' விழியின் ' முன்
என் ' மொழியின் ' பலம் எடுபடவில்லை....

எப்படியும் சொல்லிடுவேன்....;

அதற்காகத்தான்,
பழகத் தொடங்கியுள்ளேன்..

வாய்மொழி பேச அல்ல..
உன் போல்

" விழிமொழி " பேச

காத்திரு......

...............தயாஜி வெள்ளைரோஜா...............

ஐந்தாவது மனிதன் (தேடிப்பாருங்கள்)


ஐவர்;
தியானம் மேற்கொள்கின்றர்

....................................................
.................................
......................
...........
...
..
.


எங்கும் அமைதி....
எல்லாம் ஆனந்தம்.....

.
..
.....
.................
............................
.....................................
............................................


கொஞ்ச நேரம் கழித்து...

முதல் மனிதன்;
கண்திறக்கின்றான்...!
இரண்டாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' இவனும் '
கண்மூடுகின்றான்..!

இரண்டாம் மனிதன்;
கண்திறக்கின்றான்....!
மூன்றாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' தானும் '
கண்மூடிகின்றான்...!

மூன்றாம் மனிதன்;
கண் திறக்கின்றான்...!
நான்காம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' மீண்டும் '
கண்மூடுகின்றான்.....!

நான்காம் மனிதன்;
கண்திறக்கின்றான்...!
ஐந்தாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' தியானம் ' தொடர்கின்றான்

....................
...........................
...........................
.........
..............

இவர்கள்;
நால்வரும் இனி....!
இப்படித்தான் இருப்பார்கள்

அந்த;
'ஐந்தாம் மனிதன்'
தூங்கிவிட்டான்;
எனத் தெரியும்வரை........


..............தயாஜி வெள்ளைரோஜா..................

ஆறாவது விரல்....(இன்னும் முளைக்கும்)


இப்போதெல்லாம்
என்னைப் பின்தொடரும்;
நிழலை...
நான்....
அழிக்கவிரும்புகின்றேன்...!

பழைய முகங்கள்,
மீண்டும்;
இன்னொரு ஜனனம்....
எடுக்க வேண்டாம்......

இருக்கின்ற முகங்களே....
உருப்படியான ;
அடையாளம் தொலைத்தப் போது....?


,உத்தமானாய்
நான்;
இருந்திருந்தால்...!
வந்த பாதையைக் காட்டியிருப்பேன்.....!!

ம்......!

எனக்கு இனி...
போகும் இலக்கு மட்டும் தெரிந்தால் போதும்...


பழையத் தழும்புகளுக்கு
மீண்டும்வலி கொடுக்க...
தயாராகின்றது

"ஒரு கூட்டம்"

இவன்;முளைக்கமாட்டான்,
என்றோரே......!!
கேளுங்கள்....

நான் தழைத்தேக் காட்டுகின்றேன்.......

குட்டுபட்டவன் குணிந்தேதான்
இருக்கவேண்டுமா;
என்ன....?

'பூ' தோட்டம்
என
கை
நீட்டாதீர்....
இது
'தீ' தோட்டம்.....
எரித்திடுவோம்
கண்
அசைவால்.....!

இது ஆள்காட்டி விரல்;
அல்ல....

ஆறாவது விரல்...
இன்னும் முளைக்கும்......


.................தயாஜி வெள்ளைரோஜா.................

செப்டம்பர் 04, 2009

பெற்றால் மட்டும் போதாது.....
அந்த மீசைக்காரருக்கு அன்று,
அவ்வளவுக் கோவம்...
இருக்காதா..?

பெத்தப் பிள்ளை;
அப்பன் பேச்சைக் கேக்காட்டி....?

ஒரேக் குழப்பம்

"ஏன் கேக்கனும்...அவர் மட்டும் என்ன யோக்கியமா...?"

அவன்,
கேள்வியும் ஞாயம்தானே...!

அப்பன் வழியில் சுப்பன்....
தும்பை விட்டு,
வாலைப் பிடிக்கு;
இப்படி பலர் ,உண்டு.......
வளரும்போதுகண்டுக்கொள்ளாமல்...!
படிக்கும்போது பாசம் காட்டாமல்....!

பிள்ளைப் பெற்றும் ;
கல்யாணக்காளையாகத்திரியும்
'இந்த அப்பாக்கள்.....!?
பிள்ளைகளுக்கு,
அறிவுரைச் சொல்ல ,
அருகதையற்றவர்கள்....?


தன் கோவத்தைமனைவியை அடித்தும்...
வீட்டுப் பொருட்களை ஒடித்தும்.....
சேதப்படுத்தும் இவர்கள்;
என்று ;
புரிவார்கள்....?

தான் மாறினால்தன் சுற்றமும் மாறுமென்று....!

பெற்றால் மட்டும் போதாது...???

அவனில் செயல்களுக்குப்பொருட்பேர்க்கும் ப்க்குவமும் பொறுப்புணர்ச்சியும்வரவில்லையெனில்.......?

இவர்கள் தீருந்தும்காலமும்
அருகிள் இல்லை.........??

............தயாஜி வெள்ளைரோஜா.................

மழைச் சாரளும் மனிதக் கீறளும்....?
மழை வேகமாகவும்...
கொஞ்சம் மெதுவாகவும்...?!?!?
பெய்துக் கொண்டிருந்தது;

நான் மட்டும்,
தனியாய்
இருப்பதால்இந்த ஆசை!!!


....ஆசை மட்டும்தான்அதை யாரும்,
பேராசையாக்க முயற்சிக்காதவரை.........
அது ஆசை மட்டும்தான்...

தனியாய் இருப்பதால்;
சூடானத் தேநீருக்கு,
உத்தரவு போட இயலவில்லை....!
போட்டால் மட்டும்உடனே வந்துவிடும் ,
என்ற எந்த...

உத்தரவாதமும் இல்லை....

அட...
மழை இப்போதுவேலை நிறுத்தம் ,
செய்யத் தொடங்குகின்றது....!!
இதைவிட,
சந்தர்ப்பம் வேறு வாய்க்காது,

ம்ம்ம்...,,.,...ம்ம்..ம்.ம்.ம்.ம்.
மழையில் நனைந்தால் சந்தோஷம்தான்...!

கூடவே அந்த பாழாய்ப்போன,
ஜலதோஷ்மும் வந்துவிடும்;

அப்புறம் தொல்லை எனக்குத்தான்.....??
இருந்தாலும்,
இன்று வேறு வழியில்லை..

அப்புறம் என்ன..?
நேற்றைக்கு வந்தவன்;
புது "வாடிக்கையாளன்"....??
எதுவுமேத் தெரியலை...

அங்கங்கே கடிச்சிவைச்சிட்டான்...!!
நகக்கீறல் வேறு...?
வயது பதினாறுதானே..!!!
அவனும் என்ன செய்வான்..

தினம் தினம் ;
இந்த ஆண்கள் கொடுக்கும்..!
அடையாளங்களுக்கும்... காயங்களுக்கும்.....

இது போன்ற;
லேசான,
மழைத்தூறல்கள்தான் என்
போன்றோருக்கு'மருந்து'

ஆண்களுக்கு விருந்தாகும் எங்களுக்கு
ஆண்டவன் தரும் மருந்து....

நனைய வேண்டி ;
கதவைத் திறக்கின்றேன்.....

இரண்டு வாடிக்கையாளர்கள்..!
இன்றும் எனக்கு;

மருந்து இல்லை....................தயாஜி வெள்ளைரோஜா.............

காத்திருங்கள்............ஸ்.....
சத்தம் போடாமல் அழுங்க....
அவன் தூங்கறான்....
பாருங்களேன் சிரித்த முகமாய்..

அவனின் தூக்கம்.....
என்ன,
குறட்டைதான்காணோம்...?!


.ம்........ம்.......ம்........ம்..
நீ இருந்து,
எனக்கு செய்யனும்..
நான் உனக்கு
செய்யும்படி செய்துட்டியே..?!?!?!!!?

ராத்திரிக்கு வரும்போது
....
இரகசியமாய்.......
ஒளிஞ்சிருப்பே.....
இனி எந்த கதவுக்குப் பின்னால்;
நான் வந்துப் பார்க்க....?

உனக்கு எப்படிதீ வைப்பேன்....?
உன் தூக்கம் கலைந்திடாதா....?

நேத்துக்கூட எனக்கு;
வேலை;
அப்போ......;


"அப்பா இன்னிக்கும் வேலையாநாளைக்காவது என்கூட இருப்பியா...?"


பெத்த மகன் கேட்டகடைசி வார்த்தை

ஏம்பா உன் ,
அம்மா தனியா...
இருக்காள்னு...;
துணையாய் போயிட்டயா..?


ஆமா....
அவளுக்கு தனிமைனா பயம்....??!!
சரி; நான்
வரவரைக்கும் அம்மாவை
பத்திரமாய் ;

...பார்த்துக்கோ..........!!!??..................தயாஜி வெள்ளைரோஜா..............

திகைப்பு

என்றும் இல்லாமல்,
அன்று மழைபெய்தது.....

வழிநெடுகிலும்
சமிக்ஞை விளக்கு
வழிவிட்டது......

வீட்டிற்கு வந்ததும்
சாப்பாடு,

தயாராய் இருந்தது.....

அப்பா என்னை
அதிகக் கேள்விகள்
கேட்கவில்லை.......

அண்ணி கூட,
சிரித்தார்..

உறவினர்கள் சிலர் வந்தார்கள்....
அழைப்பிதல் கொடுத்து,
என்னையும்

"வா'
என அழைத்தனர்....!

மேலதிகாரி...
என் கருத்துக்கு
செவிசாய்த்தார்...!

எல்லாம் வழக்கத்துக்கு...
மாறாக நடக்க....

...........இன்றளவும்.........

ஒன்று மட்டும் நேராய்
நடந்தது....?

அவள் கடக்கின்றாள்
நான் திகைக்கின்றேன்....
........................தயாஜி வெள்ளைரோஜா...................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்