பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

என் முதல் தவறு..






எப்படியெனத் தெரியவில்லை,
அது....!!
நடந்துவிட்டது

இன்னமும் எனக்கு குழப்பம் ஒயவில்லை....
என்ன செய்வது
நம்மை மீறிய
பல விசயங்களை
நாம்தான் சந்திக்கின்றோமே....

எனக்கு இது..!
தேவைதானா...
நானா இப்படி...??

இது என்ன,
தொற்று நோயா..?

பரம்பரை வியாதியா...?

இதன் ஆரம்பம் எங்கே..?

எல்லா கேள்விக்கும்ஒரே பதில்

""தெரியாது""

தற்காலிக பதில் மட்டுமல்லஎன் தற்காப்பு பதில்....

வெளியில் தெரிந்தால்
.....?.....?.........?......??...........

என்ன செய்ய...?
மறக்கவா...??
மறைக்கவா....?

தலைமறைவாகிவிட்டால்
எப்படி..?

சரி,,!
நடந்தது
நடந்துவிட்டது.....
என்னால் எப்படியோ,

இது என் அடையாளமாகட்டும்..
இதை அடைக்காக்கப் போவதும் இல்லை,

துணிவோடு ஏற்கின்றேன்
எதிர்ப்பையும் சமாளிகின்றேன்...

ஆம்..!!


"அது என் முதல் கவிதை"


இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா

எப்படி வெல்வது...


இங்கே வெளிச்சம்,
தேவையானதால்....
இருட்டு இல்லாமல் போய்விட்டது....

இப்படித்தான்
இங்கு பணம்
தேவையானதால்
என் குணம் நிராகரிக்கப்பட்டது......

விழிகள் தோறும்
வாசனை தெளித்தாள்...
என் விழியின் ஓரம்
வலியை விதைத்தாள்.....

கண்ணாடியும் என்னை
ஏளனம் செய்கிறது முன்னாடி....

என் காதலைஎப்படிச் சொல்ல....!!??

பணம் தந்தால்
பஞ்சணையில்.......
இல்லையெனில்
நஞ்சணையில்........

"மனைவியாகிவிடு"
என்றேன்

""ஒரு இரவுக்கு 100 வெள்ளி"
என்றாள்
அவளுக்கு தேவை
தாலியல்ல
ஆணுறை!!???


ஏன் இன்னமும் அவள் நினைவாய் நான்.

எப்படி ஜெயிப்பேன்..

"என் ஐம்பது வெள்ளி கொண்டு"



இப்படிக்கு,
தயாஜி வெள்ளைரோஜா

நண்பனுக்கு ஒரு கடிதம்.....




அன்புள்ள நண்பனுக்கு,
நலமா..........??


இக்கடிதம் ஒரு வேலை,
இன்று அவசியம் அற்றதாய்,
இருக்கலாம்...
ஆனால் இதன் தேவை,
தொலைவில் இல்லை.....


நண்பா,!
நீ வெற்றி பெறுகின்றாய்
என் வாழ்த்துகள்,
உன் வெற்றிக்கு உன்னைக் காட்டிலும் உழைத்தவன்
"நான்"
என்பதை மறந்துவிட்டாயே.........


உன் திறமைகளை வெளிகொண்ர,
என் வேலைகளை நிராகரித்தேன்,
அது என் தவறுதான்
என்ன செய்வது....??

படியாய்....ஏணிப் பாடியாய்
நான் மாறி உன்னை ஏற்றினேன்
மேலே ஏறியதும் எனக்கு கைக்கொடுக்காமல்

''ஏறிவிட்டேன்''

என,
இரு கைகளையும் மேலே
உயர்த்திவிட்டாயே....!!!

சேர்ந்தே நாம் பல
சாதனை செய்திருந்தாலும்....
இது நாம் பிரியவேண்டிய கட்டாயம்....
பிரிவு..!!
இயற்கையாய் ஏற்பட்டதோ, நமது
செயற்கையாய் ஏற்பட்டதோ..??

என யோசிப்பது அநாவசியம்....

என் முடிவுதான் ,
இருந்தும் உன் நன்மைக்கும் சேர்த்துதான்....
இருவர் திறமையிலும்
வித்தியாசம் உண்டு..
நான் பயனாவேன்.......
நீயும் பயனாவாய்...


புரியாவிட்டால் பரவாயில்லை
தெரியக்கூடவா இல்லை
உனக்கு ?

இனி நம் பயணத்தை
இரண்டாக்குவோம்....!!
நீ தனியாய் செல்
நானும் இனி தனியாய்

தனித்தன்மையை வளர்க்க...
நம் நட்பை பலி கொடுக்கவில்லை,
கொஞ்ச காலம்......
அடமானம் வைக்கின்றோம்....


ஓடும் குதிரையில்
முன் குதிரைக்குதான் மதிப்பு
குழுவுக்கு எந்த நாளும் கிடையாது,,,,,,


அலுவலகத்தில்,
என் எதிரில் நீ அமர்ந்தாலும்...
என் கண்ணுக்கு இனி தெரியப் போவது..
என் பாதையும்
என் பயணமும்....


உன் வாய்ப்பைக் காட்டி மகிழும்
உனக்கு
என் தோல்விகள்
புரியாத போது ...!


இந்த கடிதம் மட்டும்
எப்படி புரியும்... நண்பனே.....?

எங்கோ படித்தேன்

"நானும் அவனும் நகமும் சதையும்தான் வெட்டி விட்டான் என் வளர்ச்சி பிடிக்காமல்"


நம்மில் யார் நகம்
நம்மில் யார் சதை....


இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா

டிசம்பர் 19, 2009

ப(பி)டித்த ப(மு)த்து கட்டளை.... சுஜாதாவிடமிருந்து....


சுஜாதாவின் பத்து கட்டளைகள் (இது அவரின் முத்து கட்டளைகள்)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும்

(பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்).
எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.


தொகுப்பு தயாஜி வெள்ளைரோஜா

டிசம்பர் 18, 2009

x-சும் y--யும்










அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள…
அப்போதுதான் அவள் பிறந்தாள். அவள் அவளான ஒரு பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கணம். மறுதினம் அம்மா காலை எழுந்து காப்பி போட்டு, மூத்தவனைப் படிக்க எழுப்பி, பாத்திரம் தேய்க்கப் போட்டு, வாசல் தெளிக்த்துக் கோலம் போட்டு, பாட்டிக்கு ஓட்ஸ் கஞ்சி வைத்து, வென்னீர் போட்டு, அப்பா பேப்பர் படித்து, ரேடியோவில் பக்தி கேட்டு, பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டு, குளித்து கந்தனை முணுமுணுத்து விட்டு…
அவர்கள் தினசரி அவசரங்களில் அதை முழுவதும் மறந்து விட்டார்கள். அந்த முட்டை பேராசை பிடித்தது போல் வளர ஆரம்பித்தது.

- (நன்றி) எப்போதும் பெண், மங்கையர் மலர் – 1982.

(கரு, உரு, பெறுதலையும், மனித மறதிகளையும்,..... சுஜாதாவால் மட்டுமே இப்படி சொல்ல முடியும்...!)

சுஜாதாவுக்கு...ஜே....

படித்ததை பகிர்கின்றேன்,,,


படித்ததைப் பகிர்கின்றேன்.....



எப்படி எழுதணும்?



– சுஜாதா தமிழ் எழுத்துலகில் பலருக்கும் ஆதர்ஸ நாயகன் அமரர் சுஜாதா அவர்கள். அவரிடம் ஒரு மணிநேரம் பேசிய அனுபவத்தை மட்டுமே மூலதனமாக வைத்து எழுத்துலகில் ஜெயித்த பலரை அடையாளம் காட்ட முடியும். மிகச் சிறந்த உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். அவரும் இந்த உண்மையை எந்த மேடையிலும் தயக்கமின்றி ஒப்புக் கொள்வார். அப்படி என்னதான் சொன்னார் சுஜாதா…


புதிதாக எழுத வருபவர்கள்…


அல்லது ஏற்கெனவே எழுதியும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என துவண்டு போகிறவர்களுக்காக அவர் தந்த சில குறிப்புகள்.


இதை ப்ரேம் போட்டும் வைத்துக் கொள்ளலாம், தப்பில்லை!



1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி’க்கு அனுப்பாதீர்கள்.



2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.



3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி…



4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.



5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.



6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.



7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதை மாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித் தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.



8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.



9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.



10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.



11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.



-சுஜாதா எழுதிய ‘தோரணத்து மாவிலைகள்’ புத்தகத்திலிருந்து!



.......தயாஜி வெள்ளைரோஜா.......

சுஜாதா சொன்னது....


கீழ்க்காணும் கேழ்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள்.
(பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது )

1. 01.சம்பளத்தில் தர்ம காரியங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

2. 02.எத்தனை கடிதங்களுக்கு பதில் எழுதுகிறீர்கள்?

3. 03.எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து சுத்தப் படுத்துகிறீர்கள்?

4. 04.எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள் ?

5. 05.எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

6. 06எத்தனை முறை வாக்களித்துள்ளீர்கள்?

7. 07.அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் உண்மையாக வேலை செய்கிறீர்கள்?

8. 08.உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?

9. 09தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செயகேறீர்கள்?

10. 10.எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?

11. 11.எத்தனை மணி நேரம் தொலைக் காட்சி பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?

12. 12.போனவருடம் எத்தனை பேருக்கு புத்தாண்டு,பொங்கல் வாழ்த்து அனுப்புநீர்கள்?

13. 13.பாடல்கள் மட்டும் எத்தனை மணி நேரம் கேட்கிறீர்கள்?

14. 14.தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிக்கை படிக்கிறீர்கள்?

15. 15.எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறீர்கள்?

16. 16.தினம் எத்தனை மணி நேரம் பேருந்து,ஈருருளிகளில் பயணிக்கிறீர்கள்?

17. 17. பாடசாலையில் உங்களுக்கு பிடித்த பாடம் எது?

18. 18. இப்போது, தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை யார்?


இந்த பதினெட்டுக் கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிட்டு ஒருவாரம் கழித்து அவற்றைப்பாருங்கள், உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.


1. 01.சோம்பேறி


2. 02.சாதாரண மனிதன்


3. 03.நல்ல குடிமகன்


4. 04.அறிவு ஜீவி


(என்னங்க கண்டுபிடிச்சாச்சா......???? பார்த்துங்க யாருக்கும் 5-வதா ஏதும் வந்திட போகுது........!!)


நன்றி : ஆனந்த விகடன்


தொகுப்பு . தயாஜி வெள்ளைரோஜா......

சுஜாதா....


சுஜாதா பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...

1935ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தார். மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவிலும் பங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் ப்போது இரண்டு நிறுவனங்களில் ஆலோசகராக பணிபுரிந்தார். அம்பலம் என்னும் இணைய இதழுக்குப் பொறுப்பாசிரியராக தனது இறுதிக் காலம் வரை பணிபுரிந்தார். தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். 1993இல் மைய அரசின் அறிவியல், தொழில்நுட்ப விருதானNCTC விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையை பரப்பியதற்காக சுஜாதாவிற்கு அளிக்கப்பட்டது. தனது மகத்தான படைப்பாற்றலால் 50 ஆண்டுகாலம் தமிழ் வாசக பரப்பை ஆக்ரமித்திருந்த சுஜாதா 27.2. 2008ல் சென்னையில் மறைந்தார். அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன். மகன்கள்: ரங்க பிரசாத், கேசவ பிரசாத்.

(நன்றி உயிர்மை)

இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா..

சுஜாதாவின் வழி, தனிவழி புது வழி...





சுஜாதாவின் "சிறு சிறுகதைகள்" என்ற புத்தகத்தில், என்னைக் கவர்ந்தவற்றை இங்கே இடுகின்றேன்..... இது கொஞ்சம் சுவாரஸ்யமான ஒன்று நீங்களும் முயற்சிக்கலாம்.....(நான் இன்னும் ஆரம்பிக்கலை.. வேலை அதிகம்) கதையின் தலைப்பு நீளமாக இருக்கலாம்..


ஆனால் கதை இரண்டே இரண்டு வரிகளில்தான் இருத்தல் வேண்டும்.. கவனியுங்களேன்.. இரண்டு வரிகளின் தான் கதை எழுதப்பட வேண்டும்........ இரண்டு வார்த்தை கதைகள்:



1. தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்

கதை : "ஐயோ சுட்டுடாதே!"


2.தலைப்பு : சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்.

கதை : "கன்சீல்ட் வயரிங்ப்பா"


3.தலைப்பு : ஆராய்ச்சி சாலையிலஇருந்து ரோபோ வெளியே வந்தது

கதை : "டாக்டர் க்ளோஸ்"


4.தலைப்பு : வசந்தாவின் கணவன்

கதை : "சுசீலாவோடு எப்படி?"


5.தலைப்பு :விடுமுறைக்கு வந்த கார்கில் வீரனும் கிராமத்து

நண்பர்களும்

கதை : "ரம் கொண்டாந்திருக்கியா?"


6.தலைப்பு : மகன் தந்தைகாற்றும்

கதை : "இ.மெயில்"


7.தலைப்பு : என்னை யாரோ பார்க்கிறார்கள்

கதை : கண்ணாடி



8.தலைப்பு : ஆபிஸில் எத்தனை ஆம்பளைங்க?

கதை : முதலிரவில் கேள்வி.

டிசம்பர் 17, 2009


21 வயதில் "கெடா மாநில எழுதாளர் சங்கம்" நடத்திய சிறுகதை போட்டியில் "ஆறுதல் பரிசு" கிடைத்தது, ஆறுதல் அடையாத "கை" இன்னமும் எழுதுகோளை இயக்குகின்றது.....

அம்மா காட்டிய அடையாளம்....


அன்று வாங்கிய முத்தம்...இன்னமும் ஈரம் காயாமல் ...இதயத்தை இயக்கிக்கொண்டு இருக்கின்றது...அம்மா

நம்பிக்கை என்பது நம்புவது மட்டுமல்ல.... நம்பிக்கையோடு இருத்தல்...

டிசம்பர் 11, 2009


டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கிய விருது, இளம் கவிதை துறைக்காக எனக்குக் கொடுத்த மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கு நன்றி...
௨௦௦௯ (23வயதில்//)

எழுத படிக்க தெரியாதா அம்மா...
நான் பிறக்கும் முன்னே எழுத ஆரம்பிச்சா அப்பா.....
என் எழுத்து இவர்களுக்கு சமர்ப்பணம்...

இப்படிக்கு ,
தயாஜி வெள்ளைரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்