- அழுவாச்சி கவிதைகள் -
சகாவே
உன் அழுகையை நான்
அறியாமலில்லை
ஆனாலும் உன்னை
அழவைக்கும் கவிதைகளையே
நானும் எழுதுகிறேன் என
கோவிக்காதே
என் சகாவே
நீ தனியாக அழவில்லை
என்கிற ஆறுதலை
உனக்கு கொடுப்பதற்கே
நாங்கள்
அழுவாச்சி கவிதைகளை
எழுதி
உனக்கு அனுப்பி வைக்கிறோம்
படித்ததும் அழுகிறாயா
மீண்டும்
பரவாயில்லை
கூட்டுப்பிரார்த்தனை போல
கூட்டாய்ச் சேர்ந்து அழுவதும்
ஏதோ ஒருவகையில்
நல்லதுதானே
அழுத கண்ணில்
தூசும்
அழுத நெஞ்சில்
மாசும்
தங்கியிருக்காதென
நம்பிக்கொள்வோம்
0 comments:
கருத்துரையிடுக