பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 10, 2026

- வித்திர பறவை -

- விசித்திர பறவை -

அது ஒரு
விசித்திர பறவை
உயிர்ப்போகும்
பசியில் கூட
வாய்க்குள் சிக்கிய தட்டானை
முழுதாய் தின்னாது

சலனமற்று ஓடும்
ஆற்றோரத்தில்
சிதைந்த தட்டானைப் போட்டு
நீண்ட நேரம் காத்திருக்கும்

சட்டென எழுந்த சலனத்தின்
அதிர்வில்
தட்டானைப் பார்க்க
நீந்தி செல்லும்
மீன்கள் ஒவ்வொன்றையும்
நின்றபடி
கொத்தியபடி
தின்றபடியிருக்கும்

அது ஒரு விசித்திர பறவை
அப்படியே
அவள் ஒரு விசித்திர பெண்

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்