பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 04, 2026

- எழுதாத கவிதை -

நீ
தலை சாய்த்து
வாசிக்கும் வீணையில்

உன் விரல் பட்டு
கேட்கும் இசையைவிட

உன் கூந்தல் பட்டு
சிலிர்க்கும் தந்தியின்
இசை

நான்
இதுவரை
எழுதாத கவிதையாய்க்
கேட்கிறது....

- வைர வேட்டை -


மலேசிய வானொலி மின்னல் பண்பலையில்.....

'வைர வேட்டை' தீபாவளி சிறப்பு வானொலி குறுநாடகம்.
எழுத்து தயாஜி.
தயாரிப்பு காயத்திரி கண்ணம்மா.

நவம்பர் 3 தொடங்கி நவம்பர் 7வரை, ஒவ்வொரு நாளும் பிற்பகல் மணி 1.30க்கு ஒலியேறுகிறது. 

தினம் மூன்று நிமிடங்களுக்கு ஒலியேறும் இந்நாடகத்தில் நம் நாட்டின் புகழ்பெற்ற வானொலி கலைஞர்கள் நடித்திருக்கின்றார்கள்.

'காலம்' இந்த நாடகத்தில் ஒரு கதாப்பாத்திரமாக வருகிறது. மூத்த கலைஞர் கே.எஸ்.மணியம் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்து உயிர் கொடுத்திருக்கின்றார். 

மாயாஜால வைரத்தைத் திருட செல்லும் நான்கு நண்பர்களுக்கு என்ன ஆனது... ? 
இது வைர வேட்டையா..?  அல்லது அந்த வைரத்தின் வேட்டையா..? என்பதனை நாடகத்தைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்....

💥கேள்வி பதில் பரிசும் உண்டு💥

வாய்ப்புள்ளவர்கள் நாடகத்தைக் கேட்டு உங்கள் கருத்துகளைச் சொன்னால் மகிழ்வோம்..

அன்புடன் 
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#மின்னல் 
#MinnalFM 
#RTM


நவம்பர் 03, 2026

- சொல்லிவிட்டு போ -


- சொல்லிவிட்டு போ -

என் 
புத்தக அடுக்கில்
உன் தாடையை வைத்து
நான் சொல்லும் கதைகளை
கேட்டு இரசிக்கின்றாய்

நீ இரசிப்பதைக்
கண்டுகொண்ட புத்தகங்கள்
அதனதன் கதைகளையே
மாற்றி கொள்கின்றன

உன் இரசனையை
தனக்குள்
ஏற்றி கொள்கின்றன..

இப்போது நான்
அந்தப் புத்தகங்களோடு 
போராடுகின்றேன்

யாரின் இரசிகை நீ?
சொல்லிவிட்டு போ......

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- கூடடைதல் -



- கூடடைதல் -

கொஞ்சம்
அருகில் வா
தயங்காதே
யாரும் இல்லை
இன்னும் கொஞ்சம் வா

இடைவெளியின்றி
நெருங்கி கொள்ளேன்

வேகமின்றி
உன் இதயக்கூட்டை திற
வெட்கத்தோடு
மெல்லமெல்ல என்னை அனுமதி

நான் கூடடைய வேண்டும்
நீயும் அடைய வேண்டும்தானே..?

அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்