பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 30, 2026

- டிசம்பரில் சந்திப்போம் -


- டிசம்பரில் சந்திப்போம் -

நவம்பர் இன்றோடு நகர்ந்து போகப் போகிறது. வந்து சேரும் டிசம்பர் நிக்கப்போகுதோ நடக்கப் போகுதோ இல்லை உண்டு ஓட போகுதோ என இன்னும் முழுதாகத் தெரியவில்லை.

அதற்கென்ன..  நாம் நம் வேலைகளைப் பார்த்துதானே ஆக வேண்டும்.

டிசம்பர் 6-ம்  நாள் - 'முக்கோண கதைகள் - 2' என்னும் இவ்வாண்டுக்கான வல்லினத்தின் கலை இலக்கிய விழா இருக்கிறது.

டிசம்பர் 10-ம் நாள் - எனக்கு மருத்துவ பரிசோதனை இருக்கிறது.

டிசம்பர் 27-ம் நாள் - எழுத்தாளர் ஸ்ரீகாந்தனின் 'ஈரம்' சிறுகதைத் தொகுப்பு வெளியீடு இருக்கிறது.

இப்போதே காலெண்டரில் குறித்து கொள்ள இவை இருக்கின்றன. மற்றதை போகிற போக்கில் பார்க்கவோ அல்லது சமாளிக்கவோ வேண்டியுள்ளது.

ஜனவரி புத்தக அறிமுகத்தை எழுதுவதற்கு டிசம்பரே ஒரு மலேசிய புத்தகம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் என எடுத்து வாசிக்க தயாராக வேண்டும்.

அதோடு மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் இவ்வருடத்தின் 12வது நாவலை தேர்வு செய்து வாசிக்க வேண்டும்.

ஆண்டு தொடங்கி திட்டமிட்டபடி புத்தகப் பட்டியலில் உள்ள புத்தக எண்ணிக்கையில் புத்தக வாசிப்பு வந்துள்ளதா என கவனிக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு தொடங்கி, நாவல் வாசிப்பில் மேலும் ஒரு முயற்சியைக் கூட்ட வேண்டும். அதாவது குறைந்தது 500 பக்க நாவலாக இருக்க வேண்டும். ரொம்பவும் முக்கியமான படைப்பாக இருக்க வேண்டும். எனக்கு பிடித்த நான் வாசிக்கும் எழுத்தாளர் பரிந்துரைக்க வேண்டும், என இன்னும் சிலவற்றை சேர்த்துள்ளேன்.

அடுத்த ஆண்டில் எழுத்திலும் ஒரு நாவல் எழுத ஆசை உண்டு.  குறைந்த பட்சம் முதல் வரைவையாவது தயாரிக்க வேண்டும். பார்க்கலாம்.

மற்றபடி எப்போதும் மகிழ்ந்திருப்போம்.

டிசம்பரில் சந்திப்போம்..

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்