- நொடிப்பொழுதில் ஞானம் -
- அக்டோபர் மாத நிறைவு புத்தகம் -
சம்பாதிக்க ஆரம்பித்த பின் அதிகமாக புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். எது கிடைத்தாலும் வாசிப்போம் என்கிற கன்னிவாசகராக இருந்த காலம். வாய்ப்பாடு புத்தகம் தவிர (நமக்கு கணக்கு அவ்வளவா வராது) வாங்கவும் வாசிக்கும் கிடைக்கும் எல்லா புத்தகங்களையும் வாங்கிவிடுவேன்.
தொடர்ந்து வாசிக்க வாசிக்கத்தான் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் சூட்சுமம் நமக்கு பிடிபடும். அப்படி அது பிடிபட்ட பின் வாங்கும் புத்தகங்கள் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்தே அமைந்திருந்தன.
அப்படி ஆரம்பகால வாசக மனநிலையில் எதார்த்தமாக பல முக்கியமான புத்தகங்களையும் வாங்கியுள்ளேன் வாசித்துமுள்ளேன். வாசிக்கும் மனநிலையை உருவாக்கவும் அதனை வளர்க்கவும் கிடைக்கின்ற எல்லாவற்றையும் குறிப்பாக வாசிப்பை நொந்து போக செய்யாத எதையும் தொடர்ந்து வாசித்து நமக்கு நாமே பயிற்சி கொடுக்க வேண்டியுள்ளது.
இதில் ஒரு சிக்கல் இருக்கிறது அப்படி வெறும் சுவாரசியமானவற்றையே வாசித்து பழக்கமாக்கி கொண்டால் அதைத் தாண்டி வருவது நமக்கு சிரமத்தைக் கொடுக்கும்படி ஆகிவிடும். ஆக மெல்ல மெல்ல நம் வாசிப்பிற்குள் முக்கியமான புத்தகங்களையும் இணைத்து கொள்ளா வேண்டும்.
அப்படி ஆரம்பத்தில் வாங்கி புத்தகங்களை அவ்வப்போது அலமாரியில் இருந்து எடுத்து பார்த்து சிலவற்றை வாசிக்கவும் செய்வேன். வாசிக்க இலகுவாக இருக்கும் அதே சமயத்தில் இன்றைய வாசிப்பு அனுபவத்தால் இன்னொரு புரியலையும் அந்தப் புத்தகம் கொடுக்கத்தான் செய்கிறது.
'நொடிப்பொழுதில் ஞானம்' ; One Minute Wisdom' என்ற புத்தகத்தின் தமிழாக்கம். அந்தோணி ட் மெல்லோ எழுதிய புத்தகத்தை லயன் எம்.ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்திருப்பார். கண்னதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.
ஏறக்குறைய ஜென் கதைகள் போல தத்துவங்களையும் வாழ்க்கைக்கு தேவையான செய்திகளையும் சின்னச்சின்ன கதைகளாகவும் சொல்லியிருப்பார் ஆசிரியர்.
அவற்றில் இருந்து ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
தலைப்பு ; மன்னிப்பு
கதை ;
"நான் குற்றம் செய்த ஒருவரை எப்படி மன்னிப்பது என்பதைச் சொல்லுங்கள்?"
"நீ ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிக்காமல் இருந்தால் நீ மன்னிக்க வேண்டிய தேவையே இருக்காது."
இரண்டே உரையாடலில் எவ்வளவு பெரிய செய்தியை சொல்லிவிடுகிறர் ஆசிரியர். இந்த வடிவத்தை நாங்கள் குறுங்கதைகளாகவும் எங்கள் கதை வகுப்பில் கலந்துரையாடியுள்ளோம்.
நாம் மன்னிப்பையே நம்மிடம் இருக்கும் பெரிய மாண்பாக பாவித்து கொண்டிருக்கும் சமயத்தில் நாம் ஒருவரை குற்றவாளி என சொல்லுவதையே கேள்விக்குள்ளாக்குகிறது இந்தக் கதை.
மன்னிப்பது மன்னிப்பு கேட்பது என இரண்டில் எது சிறந்தது என பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் இரண்டையும்விட ஒருவனை ஏன் குற்றவாளியாக்க வேண்டும் என்கிற கேள்வியைக் கொடுத்து இன்னொரு பக்கமாக நம்மை சிந்திக்க தூண்டுகின்றார் ஆசிரியர்.
இந்த அக்டோபர் மாத புத்தக வாசிப்பை இந்தப் புத்தகத்தோடு நிறைவு செய்யவுள்ளேன். பிறகு நவம்பர் மாதத்திற்கான புத்தக வாசிப்பிற்கான புத்தகங்களைத் தயார்ப்செய்ய வேண்டும்.
தீபாவளி மாதம் வேறு, வரவுகளையும் கூடுதல் செலவுகளையும் நாம்தான் பார்க்க வேண்டும். நம் குடும்பத்தையும் நாம்தான் பார்க்க வேண்டியுள்ளது. அதற்கிடையில் நம்மையும் நாம்தான் பார்க்க வேண்டியுள்ளது.
#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக