2026-ம் ஆண்டில் நான்கில் மூன்று (4/3)
2026-ம் ஆண்டில் நான்கில் மூன்று (4/3)
ஓராண்டின் புத்தக வாசிப்பை ஒவ்வொரு மூன்று பகுதியாக பிரித்து கொள்வேன். வாசிப்பை வேகப்படுத்தவும் புத்தக தேர்வில் சோர்வடையாமல் இருக்கவும் வாசித்ததை மனதில் நிறுத்தவும் இவை உதவுகின்றன.
ஜனவரி முதல் மார்ச், ஏப்ரல் முதல் ஜூன், ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர் என வாசித்த புத்தகங்களை வரிசைபடுத்தி எழுதி கொள்வேன். சில ஆண்டுகளாக இந்தப் பழக்கத்தை கொண்டிருக்கிறேன்.
இதுவரை வாசித்தவை;
ஜனவரி முதல் மார்ச் வரை 16 புத்தகங்கள்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை 29 புத்தகங்கள் என ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 25 புத்தகங்களை வாசித்திருந்தேன்.
இந்த நான்கில் மூன்று (4/3) ஜூலை முதல் செப்டம்பர் வரை வாசித்த புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் வாசித்தவை;
46. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு
47. செம்மண்ணும் நீலமலர்களும் - எம்.குமரன்
48. செலாஞ்சார் அம்பாட் - கோ.புண்ணியவான்
கவிதைகள்
49. பாடிகூடாரம் - கண்டராதித்தன்
50. பெருந்தச்சன் - பாலைவன லாந்தர்
51. எரியும் தீப்பிழம்புகளின் நூறு நாக்குகள் - மணிப்பூரிக் கவிதைகள் - தமிழாக்கம் பா.இரவிக்குமார் & ப.கல்பனா
52 . அம்புயாதனத்துக் காளி - பிரபு கங்காதரன்
53 . காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும் - யாழன் ஆதி
54 . மாயா மது உதயா - பாண்டிதுரை
55 . சாவுகளால் பிரபலமான ஊர் - தர்மினி
56 . ஆண்கள் இல்லாத வீடு - இமையாள்
57 . இரவைக் கிழிக்கும் ஓநாய்கள் - சிவா லெனின்
58. நிகழும் நிகழ்விலிருந்து - காந்தி முருகன்
59 . நாளை பிறந்து இன்று வந்தவள் - மாதங்கி
60. சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி
61 . சிறகில் அசையும் பெருங்காடு - மகேந்திரன் நவமணி
62. ஐக்கூ அந்தாதி - அமுத பாரதி
63. கொலை குலவை - வசுமித்ர
64. மனப்பத்தாயம் - யுகபாரதி
சிறுகதைத் தொகுப்பு
65. ரோவெல் தெரு மனிதர்கள் - உமா கதிர்
கட்டுரைகள்/பிற
66 .மொழிவழிக் கனவு - அழகுநிலா
67 . புன்னகைப் பூக்கள் - இரா.இராமராவ்
68. அன்பேற்றுதல் - டாக்டர் ம.சண்முகசிவா
69. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் - தொகுப்பு சுப்ரபாரதிமணியன்
70. டான் டூனின் கேமொரா - எஸ்.ராமகிருஷ்ணன் (சிறார் நாவல்)
ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரையில் இந்த ஒன்பது மாதங்களில் 70 புத்தகங்களை வாசித்துள்ளேன்.
வாசிப்பு வாழ்வை புரிந்து கொள்ள ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவுவதை நான் முழுமையாக நம்புகிறேன்.
அடுத்த மூன்று மாதங்களில் வாசிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து வழக்கம் போல அதற்கான பெட்டியில் அடுக்கியுள்ளேன். அவற்றை வாசித்து முடிப்பதும் அல்லது புதுப்புது புத்தகங்களை அதில் இணைப்பதும் என் கைகளில் இல்லை.
வாசிப்பை இப்படி நமக்கு ஏற்றபடி திட்டமிட்டு கொள்வது வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுவதோடு அதற்கான சூழ்நிலைகளையும் நமக்கு உருவாக்கிவிடும்.
ஒரு புத்தகத்தைக் கூட வாங்காமல், வாங்கிய புத்தகத்தை அடிக்கடி நம் கண் படும் இடத்தில் வைக்காமல் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது புத்தகத்தை எடுத்து சில பக்கங்களை வாசிக்காதவரை நம்மால் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முடியாது.
இந்த அக்டோபரில் ஒரு புத்தகத்தை வாங்குங்கள், முன்னமே வாங்கி வாசிக்காமல் இருந்தால் அதனை எடுத்து கொள்ளுங்கள். இன்று தொடங்கி தினம் ஐந்து பக்கங்களையாவது வாசிக்க ஆரம்பியுங்கள்.
அந்தப் பழக்கம் நாளாக நாளாக பக்கங்களைத் தானாய் கூட்டி கொண்டே போகும். சீக்கிரமே அந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்து முடித்துவிடலாம்.
வாசிப்போம்.... நேசிப்போம்... வளர்வோம்....

0 comments:
கருத்துரையிடுக