பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 08, 2026

- என்னிடம் உள்ளன ஏராளமான கடிதங்கள் -



என்னால் புகைப்படமாக எடுக்க முடியாதவற்றை எழுத்தில் எழுதி சேமித்து கொள்கிறேன்.

என்னால் புகைப்படமாக எடுக்க முடிந்தவற்றின் பின்னணியில் இருக்கும் அனுபவத்தையும் எழுத்தில் சேமித்து கொள்கிறேன்.

மொத்தத்தில் எழுதுவதுதான் எனக்கு எல்லாம். இதுவொரு முகவரியற்ற கடிதம். என் எழுத்தை வாசித்து முடித்து அது உங்களுக்கானது என நீங்கள் நினைத்தால் உங்கள் பெயரை அதில் எழுதி, அக்கடிதம் உங்களுக்கானதாய்ப் பாவித்து கொள்ளுங்கள்.

என் எழுத்து உங்களுக்கானது அல்ல என நீங்கள் நினைத்தால், யாரோ ஒருவரின் கடிதம் உங்களுக்கு வந்துவிட்டதாகப் பாவித்து அதனை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். 

என்றாவது ஒருநாள் அந்தக் கடிதத்திற்கான நபரை நீங்கள் சந்திப்பீர்கள் என எழுதியவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஏனெனில் என்னிடமும் அப்படி பல கடிதங்கள் இருக்கின்றன. அதற்கானவர்களை நான், தினம் தினம் சந்தித்தபடி இருக்கிறேன்.....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்