பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 15, 2026

புத்தகச்சிறகுகள் 1

நண்பர்களுக்கு வணக்கம்.

இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், 'புத்தகச்சிறகுகள்' எனும் தொடரைத் தொடங்கியுள்ளேன்.  புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் இதன்வழி உங்களோடு பகிர்கிறேன்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நாளிதழில் தொடர் எழுதுவதில் எனக்கும் மகிழ்ச்சி.

இணையத்தில் வாசிப்பதை தவிர்த்து நாளிதழ்களையும் வார மாத இதழ்களையும் விரும்பி வாசிக்கும் வாசகர்கள் இருக்கவே செய்கிறார்கள். எனக்கும் கூட அப்படி கையில் எடுத்து மடியில் வைத்து நாற்காலியில் சாய்ந்தபடி வாசிப்பதில் அலாதி இன்பம்.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும். 

வாசிப்போம்... நேசிப்போம்... வளர்வோம்...

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை



Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்