உலகின் அபாயகர ஆயுதம்
ஏன் அக்கறை
காட்டுகிறீர்கள்
ஏன் பயப்படுகிறீர்கள்
உங்கள் நினைவுகள்
உங்களுக்குத்
தரும்
கொண்டாட்டங்களை
நானும்
அனுவிக்க வேண்டாமா
நினைவுகளைச்
சேர்த்து வைப்பது
அத்தனை எளிதா
சொல்லுங்கள்
வாழ்நாளை கடக்க
நினைவுகள் தானே
நிச்சயித்த
கட்சா பொருள்கள்
எதனை நீங்கள்
சாதிப்பீர்கள்
நான் கடக்கமறந்து
வழி
தடுமாறி நின்றால்
என்னை நான் தாங்கிப்பிடிக்க
பிரபஞ்சம் கொடுத்து
வைத்திருக்கும்
நினைவுகளை ஏன்
உதாசினம் செய்கிறீர்கள்
எல்லாமே என்
நினைவில்
இருக்கும் என்பதாலா
எப்போதாவது
நான்
சொல்லிவிடுவேன்
என்பதாலா
என் நினைவின்
சிறு வெளியில்
நீங்கள் சிக்கிக்கொள்வீர்கள்
என்ற அணுமானமா
பழகிப்போன முன்னெச்சரிக்கையா
அல்லது
திடீரென கர்மாவின்
மீது
நம்பிக்கை மொட்டு
துளிர்த்துவிட்டதா
எனக்கு என்
நினைவுகள் வேண்டும்
நித்தம் நடந்துவிட்டதை
என் சித்தம்
நினைவுகளாகத்தான்
பித்து
பிடிக்க வைத்திருக்கிறது
ஒரு முறை
எப்போதோ ஒரு
முறை
நான் ஓடிவந்த
பந்தையத்தில்
இரண்டாவது இடத்தை
முதலும் கடசியுமாக
பெற்றுள்ளதற்கு
என் நினைவுகளே
ஒற்றை ஆதாரம்
அன்று கைத்தட்டியவர்கள்
யாவர்க்கும்
இன்று என் ஞாபகமே
இல்லாத போது
என் நினைவுகளின்
துகள்களையா
அவர்களின்
மூளையின் ஓர
நினைவுகள்
அடியில்
சேமித்து வைத்திருக்கப்
போகிறார்கள்
கடைசிவரை நான்
தோற்றுக்கொண்டே
இருந்த எந்த
பரிட்சை
முடிவுகளையும்
என் நினைவுகள்
மிக
பத்திரமாகத்தான்
வைத்துள்ளதாக
நினைத்தேன்
கடைசி முடிவை
யோசிக்கும் வரை
ஆனால் ஏனோ
அந்த நரம்புகளின்
ஏதோ
கோளாறு போலும்
தோல்வி கொடுத்த
எந்த
மதிப்பெண்களும்
என்னால்
யூகிக்கவும்
முடியவில்லை
இருந்தும் சிக்கல்
இல்லை
இன்றும் கூடா
யார்யாரோ
அந்த மதிப்பெண்களை
மிகத்துல்லியமாக
சொல்லிக்காட்டி
நகைச்சுவை செய்கிறார்கள்
உங்கள் துரோகங்களை
அழிப்பதற்கும்
மன்னிப்பு கேட்பதற்கு
பதில்
செலவு செய்து
நினைவுகளை அழிக்க
எண்ணிக்கைச்
சேர்ந்திருப்பது
உங்கள் ஆள்பலத்தையும்
உங்கள் பண எலும்புத்துண்டுகளின்
வாலாட்டிகளையும்
காட்டிவிட்டது
உலகின் அபாயாகர
ஆயுதம்
மனிதனின் நினைவுகள்
என்பதை
மிச்சமீதியிருக்கும்
என்
நினைவுகளின்
வழி எனக்கு
கற்றுக்கொடுத்துவிட்டீர்கள்
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக