புத்தகவாசிப்பு_2020_ 1 'பிரபஞ்சனின் நேர்காணல்கள்'
நேற்று ஆரம்பித்து இன்று நிறைவு செய்த புத்தகம். 'பிரபஞ்சன் நேர்காணல்கள்' . எழுத்து ந.முருகேசபாண்டியன். மொத்தம் 72 பக்கங்களைக் கொண்ட நேர்காணல் தொகுப்பு.
'படைப்பு என்பதே அரசியல் செயல்பாடுதான்' , 'பிரபஞ்சன் எனும் படைப்பாளி' என்று இரு தலைப்புகளில் பிரபஞ்சனின் நீண்ட நேர்காணல்கள் இடம்பெறுகின்றன. புத்தகத்தின் நிறைவு பகுதியாக 'என் இலக்கிய நண்பர்கள் - பிரபஞ்சன்' என்ற தலைப்பில் ந.முருகேசபாண்டியனின் கட்டுரையும் இடம்பெறுகிறது.
தமிழ்ச்சிறுகதை உலகில் பிரபஞ்சனின் சிறுகதைகளை கடந்து வராதவர்கள் குறைவு. எப்படியும் அவரின் சில கதைகளையாவது வாசித்து அது குறித்து பேசியிருப்பார்கள். சிறுகதைகள் நாவல்கள் மட்டுமின்றி பிரபஞ்சனின் கட்டுரை தொகுப்புகளும் முக்கியமானவை.
இந்த புத்தகம் மீண்டும் ஒரு முறை பிரபஞ்சனின் கதைகளை மனதில் அசை போட வைத்தது. அவரது குணங்களை கேள்விகளுக்கு கொடுக்கும் பதில்கள் வழி அறிய முடிகிறது. நிச்சயம் புதியவர்களுக்கு நல்லதொரு அறிமுகம் கொடுக்கும் புத்தகமாக இத்தொகுப்பு அமையும் என நம்புகிறேன்.
நேர்காணல்களில் ஆங்காங்கு அவர் கொடுக்கும் பதில்களில் இருக்கும் நிதர்சனம் வாசிப்பவர்களை அது குறித்து சிந்திக்க வைக்கும்.
2010-ஆம் ஆண்டில் பிரபஞ்சனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவம் குறித்தும் அதன் பிறகு நான் வாசித்து என் மனதை பாதித்த அவரது சிறுகதை புத்தகம் குறித்தும் முன்னமே வலைப்பூவில் எழுதியுள்ளேன்.
நா.முருகேசபாண்டியன் தொகுத்திருக்கும் 'பிரபஞ்சன் நேர்காணல்' புத்தகம் குறைவான நேரத்தில் வாசித்து நிறைவான பதில்களைப் பெற உதவும்.
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக