பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 18, 2009

கேசவன்............

கேசவன்............


யார் இந்த கேசவன்..? என்பதை தெரிந்துக் கொள்ளும் முன்பாக..... என்னைப் பற்றி சொல்லிவிடுகின்றேன். சமீக காலமாக, என் பார்வைக்கு தெரிபவர்கள் எல்லோரும் ஏற்கனவே பழகிய முகமாய் தெரியத்தொடங்கினர். அதை நம்பி சிலரைப் பார்த்து... முறைப்பை பரிசாகவும் பெற்றுள்ளேன்.

சாப்பாட்டு கடையில் ஒருவரை பார்த்து எங்கோ பார்த்த நினைவில் சிரித்து வைத்தேன் .அவரும் பதிலுக்கு அருகில் இருப்பவரிடம் ஏதோ சொல்லிவைத்தாள்.இதற்க்குப் பிறகு அதைப்பற்றி விவரிக்கவேண்டாம், (மானப்பிரச்சனைதான்..!)

என் பள்ளிக் காலம் முதல் இன்று வரை நான் நினைவில் வைத்துக் கொள்ளாத முகங்கள் எத்தனையோ.... என் முகமே எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.


சிலர் செய்யும் செயல்களும் ,நடவடிக்கைகளிலும், பேசும் மொழியிலும் என்னால் பழைய முகங்களை கொஞ்சம் மயக்கநிலையில் உணர முடிகின்றது. நீங்களே கூட என்னுடன் பேச ஆரம்பித்தால், உங்கள் செயலோ,நடவடிக்கையோ எனக்கு என் பழைய முகங்களை நினைவுக்கூரும்.அதிலிருந்து உங்கள் முகம் மாறுபடும். நாளை வேறு முகம் தேவை உங்கள் முகத்தை எனக்கு நினைவுப்படுத்த..!

அப்படி எனக்கு பல முகங்களை நினைவுப்படுத்தியது கேசவனின் முகம். நம்புவீர்கலா.... எட்டு வயதில் நான் பார்த்து, பழகி, சண்டையிட்டு, சேர்ந்து, கிண்டல்செய்து, அடிவாங்கி, அடித்து, ......... விளையாடிய முகம் ,மீண்டும் பார்க்கின்றேன் பதினைந்து வருடம் கழித்து.....!

இவனை மீண்டும் பார்த்தது.. பெர்ரிரிரிரிரியய்யய
இ டை வே ளை யிலிருந்து மீண்டு பார்த்தது.....12.9.09 RTM-ல் நடைபெற்ற தீபாவளிக்கான ஓலி/ஒளிப்பதிவில்.

அந்த வயதில் அதிகம் பேசிய நான் இன்று அறிவிப்பாளராக பேசி உங்களோடும் இப்போது பேசுகின்றேன்..

அந்த வயதில் அதிகம் ஆடிய அவன் இன்று புகழ்பெற்ற நடனக்குழுவில் நடனமாடுகின்றான்.

அவனோடு பேசிய நான் மறுபடியும் நினைவால் பள்ளி சீருடை அணிந்தேன். இரண்டு வாரம் தோய்க்காத சப்பாத்து.
(நினைவில் மட்டும் சுத்தம் எதற்கு)........

எங்கள் உரையாடல்
“அதாண்டா காதுக்கு வெளியெகூட முடி இருக்குமே..?”

“அது ராமச்சந்திரன் சார்...... அவருகிட்ட வாங்காத அடியா..? என்னா அடி வாங்குவோம்”

“அந்தாளு பரவாயில்லை அந்த ‘சொட்டை’ (ஐயா மன்னிக்கவும் நண்பருடன் இப்படித்தான் உரையாடினேன்) அடிப்பாகப்பாரு... முதுகிலயே .. கடவுளே... சாவடிச்சாருடா.. ”

“ஞாபகம் இருக்கா அப்பவே நாம பாட்டுக்கு டான்ஸெல்லாம் ஆடினோம்.”

“ம்....அதான்....ம்.. ஆ... ‘நீ கட்டும் சேலை மடிப்பிலே’ அந்த பாட்டுக்குதானே நீ, நான் காளிதாஸு,திலகா, சரோஜினி அப்புறம் இன்னொரு பிள்ளை ..!பேரு மறந்துட்டேண்டா..!!!”

“விடு,..விடு.. அப்பயே ஆடினவண்டா நீ இப்பவும் ஆடற..ஓகேதான்..!”

“நீ மட்டும் கதை சொல்லி கதை சொல்லியே இப்போ கதை எழுதற..”

“எப்படா கல்யாணம்..?”


இதற்குமேல் எங்கள் அந்தரங்கம் .அது வேண்டாம் உங்களுக்கு.

பள்ளியில் நாங்கள் ஆடிய நினைவு மட்டுமல்ல அந்த நிழற்படமும் (மன)கைவசம் உள்ளது. என் வரையில் என்னை சுற்றிலும் நடப்பவைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது..!
யாரால் என்பது தெரியாது..
நானாகக் கூட இருக்களாம்..
ஏன் நீங்களாகவும் இருக்களாம்..?

பார்த்த அவன் முகம் எனக்கு பல முகத்தைக் காட்டியது..

மலர் - இவள் அழகானவள் . கேசவன் யோசிச்சன் நடக்கலை.
காதலிக்கத்தான் ,!

கோமதி - இவளுக்காக இவளின் தம்பிக்கெல்லாம் சாப்பாடு வாங்கி
தந்திருக்கேன்

புஸ்பா - என் மீது அதிக அக்கறைக் கொண்ட ஆசிரியை

சுப்ரமணியம் - எங்கள் செல்ல ஆசிரியர்.

இன்னும் இருக்கின்றது பல முகங்களும் பல மனங்களும்.....

இதைப் படிக்கும் நீங்கள், என் நினைவிற்கு வர வாய்ப்புள்ளது. தேடிக் கொண்டிருக்கின்றேன். நீங்களாக இருந்தால் வேலை மிச்சம்..!

யோசித்துப்பாருங்கள் நான் உங்களுக்கு எதையும் நினைவுப் படுத்துகின்றேனா..?

................................தயாஜி வெள்ளைரோஜா........................................

Related Posts:

  • பட்டுக்கோட்டை பிரபாகரின் - மைக்ரோ கதை தேடல் சமீபத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகநூலில்; ‘தமிழில் நீங்கள் எழுதும் சிறந்த மைக்ரோ கதைகளுக்கு பரிசளிக்கக் … Read More
  • #கதைவாசிப்பு_2020_6 ‘விலங்கு நடத்தைகள்’ #கதைவாசிப்பு_2020_6 ‘ கதை –  விலங்கு நடத்தைகள் எழுத்து – அம்ரிதா ஏயெம் புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் &… Read More
  • பொங்கல் 2020 அம்மா, பொங்கலுடன் இன்றைய நாளை தொடங்கினார். இனியெல்லாம் நன்மைக்கே என்பதாக இனிப்புடன் நானும் என் நாளை ஆரம்பிக்கிறேன். அனைவருக்கும் ப… Read More
  • 'விலங்கு நடத்தைகள்' குறித்து #கதைவாசிப்பு_2020_6-ல்  'விலங்கு நடத்தைகள்' என்ற சிறுகதைக்கு எழுதியிருந்த வாசிப்பு அனுபவம் குறித்து அதன் எழுத்தாளர் பேராசிரியர்  திரு.அம்ரி… Read More
  • #கதைவாசிப்பு_2020_7 ‘தறு' #கதைவாசிப்பு_2020_7 கதை –  தறு எழுத்து – அம்ரிதா ஏயெம் புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்  (சிறுகதை தொகுப்பு… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்