பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 07, 2015

ம.நவீனுடன் உரையாடல் 1


இந்த விமர்சனம் எந்தக் கோட்பாட்டு அடிப்படையில் சார்ந்தது இல்லை. தொடர்ச்சியாகச் சிறுகதைகளை வாசிக்கும் ஒரு வாசகனாக மிக கவனமாக தொகுப்புகளை வாசித்து அத்தொகுப்பில் முக்கியமான சிறுகதைகள் என நான் நம்புபவற்றை முன் வைக்கிறேன். அதை ஓர் உரையாடலாக மாற்ற நினைக்கிறேன். ஒருவேளை உரையாடலுக்கு வர விரும்புபவர்கள் அத்தொகுப்பை வாசித்து இணைந்துகொள்வதே அப்படைப்பாளிக்குச் செய்யும் மரியாதை என நினைக்கிறேன்.

- ம.நவீன்



வல்லினம் ஆசிரியர் கவிஞர் ம.நவீன்


    வணக்கம், நவீன் நாம் அதிகம் பேசியிருக்கிறோம். இன்னமும் பேசவிருக்கிறோம். எந்த நேரத்திலும் உங்களை நானும் என்னை நீங்களும் அழைத்து பேசும் உரிமை நமக்கு இருக்கிறது இருந்தும் இக்கடிதத்தை எழுதுவதற்கு காரணம் உண்டு. நாம் வல்லினம் குழுவில் நண்பர்களுடன் செயல்பட்டுவருகின்றோம். தொடர்ந்து செயலாற்றிவருகின்றோம். ஆரோக்கியமான முறையில் அதற்கான பலன்களை நான் கண்டிருகின்றேன் உணர்ந்திருக்கின்றேன். ஆனால் சமீபத்தில் வல்லினம் குழு குறித்தும் உங்களை குறித்தும் சில அவதூறுகள் வந்தவண்ணம் உள்ளன. எல்லா அவதூறுகளுக்கும் நாம் பதில் கொடுத்திட அவசியமில்லை என்று நம்புகின்றேன். நாம் நமக்கான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டியதுதான். அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றாகத்தான் நமது உரையாடல்களை இப்படி பதிவு செய்ய நினைக்கிறேஎன். அதை தொடரவும் விரும்புகிறேன்.

இனி, 

    சமீபத்தில் நானும் உங்களுடன் சிங்கப்பூர் வந்திருந்தேன். நமது வல்லினம் நண்பர்களின் புத்தகங்களை அங்கு வெளியீடு செய்தோம். நீங்கள் பாண்டியனும் எழுத்தாளர் விழாவின் உரையாற்றினீர்கள். அப்போதுதான் சிங்கப்பூர் இலக்கிய தேவை குறித்தும் அங்குள்ள படைப்பாளர்கள் குறித்தும் தெரிந்துக் கொண்டேன். 

    இன்னும் சொல்லப்போனால், அங்கு நாம் சந்தித்த எழுத்தாளர் அழகு நிலா நம்மிடம் அவரது சிறுகதை நூலை கொடுத்து வாசிக்க சொன்னார். உங்களுக்கு முன்பாக அப்புத்தகத்தை படித்து நான் எழுதப்போவதாக கூறினேன். அப்போது நீங்கள் சிரித்தீர்கள். எனக்கு அதன் சூட்சமம் அப்போது புரியவில்லை. இன்றோடு நீங்கள் மூன்று சிங்கப்பூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் குறித்து எழுதிவிட்டீர்கள். நான் இப்போதுதான் அழகு நிலாவின் ‘ஆறஞ்சு’ சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன்.

   மீண்டும் உங்களின் அந்த சிரிப்பை நினைக்கையில் எனக்கு கொஞ்சம் அவமானம்தான். நீங்கள் இலக்கியம் மீதும் வாசிப்பு மீதும் காட்டும் தீவிரம்தான் உங்களை மீது வசைகள் வர காரணமோ எனவும் தோன்றாமலில்லை. சரி இப்போது விடயத்துக்கு வருகிறேன். எப்போதும் உங்களை கட்டுரைகள் முதலில் படித்திவிடுவேன். ஆனால் தற்போது இச்சிறுகதை தொகுப்பை படித்துவிட்டு, நான் இந்நூல் குறித்து என்ன நினைக்கிறேன் என்பதனை முடிவு செய்த பிறகே உங்களை ப்ளாக்கில் இருக்கும் அழகு நிலா சிறுகதைகள் குறித்த்தை படிக்க முடிவெடுத்தேன். அப்போதுதான் நான் எதனை புரிந்துக் கொண்டேன் , கதையை எவ்வாறு அணுகுகின்றேன் என என்னால் அறிந்துக் கொள்ள முடியும் என முடிவெடுத்தேன். அதன் படி இப்போது உங்களின் உங்களை கட்டுரையை படித்துவிட்டேன். எனக்கு தோன்றுவதையும் நான் புரிந்துக் கொண்டதையும் உங்களுக்கு இதன் வழி எழுதுகிறேன். படிக்கவும். இதன் மூலம் நாம் உரையாடலை நிகழ்த்தலாம். எனது ரசனைக்கும் என் புரிதலுக்கும் பயனாக அமையும்.

   வேர்க்கொடி, உறவு மயக்கம், தோன்றாத் துணை, பங்பங், ஒற்றைக்கண் ஆகியவை சிறுகதைகள் அல்ல , நன்னெறி சொல்லும் கதைகள் என சொல்லியுள்ளீர்கள். இக்கதைகளை படைக்கையில் நானும் அவ்வாறுதான் உணர்ந்தேன். ஆனால், பங்பங் கதையும், ஒற்றைக்கண் கதையும் மெருகேற்றம் காணவேண்டிய கதைகளாக படுகின்றன. நன்னெறி சொல்வதில் இருந்து கொஞ்சம் நகர்ந்திருந்தாலே இவ்விரு கதைகளும் தனித்து தெரிந்திருக்க வாய்புண்டு.
ஒற்றைக்கண் – குற்றவுணர்வுகொண்ட ஒருவன் , அதனை ஈடுகட்ட எதையாவது செய்து மனதை திருப்தி கொள்ள நினைக்கிறான் ஆனால் , மனம் திருப்தியடைவதும் மீண்டும் குற்றவுனர்வுக்கு செல்வதும் அதனதன் தன்மைக்கு ஏற்ற வகையில் மாறுபடுகின்றது. இக்கதையில் இன்னமும் ஆழமாக சொல்லப்படவேண்டியவை சில வார்த்தைகளில் கடந்து சென்றுவிடுகின்றன. அதிலும் கதைக்கு ஆதாரமான இருக்கவேண்டிய கடைசி வரியில் ‘ஒற்றைக்கண் பூனை’ என்று முடித்திருக்க வேண்டும். கடைசி வாக்கியங்களின் தேவையற்ற பூனையின் வர்ணனையில் அக்கதையின் முடிவில் ஏற்படவேண்டிய தெளிவு தடைபெடுகிறது.

   பங்பங் – நான் ரசித்த கதைகளில் ஒன்று. கடைசி பத்தியை தவிர்த்து வேறெங்கும் பங்பங் யார் என்பதை சொல்லாமல் இருந்திருந்திருக்க வேண்டும். அது இக்கதையின் சுவார்ஷ்யத்தை கூட்டியிருக்கும். இதுதான் பங்பங் என தெரிந்த பின் இக்கதையில் வாசிக்க ஒன்றுமில்லாமல் போய், அண்டை அயலார்கள் ஏன் தேவை என போதிக்க முனைகிறது. இயல்பாகவே அழகு நிலாவிற்கு தன் சிறுகதைகளை எங்கே முடிக்கவேண்டும் என தெரிகிறது ஆனா, சந்தேகத்தின் பெயரின் தேவையின்றி எதையெதையோ முடிவில் இணைத்துவிடுகின்றாரோ என தோன்றுகிறது.

   பச்சை பெல்ட் – சாதாரணமாக தமிழ்ப்படங்களில் வரும் கடைசிநேர போலிஸ்கார்ர்களை நினைக்க வைக்கிறது. கதை எங்கோ தொடங்கி எங்கோ சென்று எங்கோ முடிவடைய முயற்சிக்கிறது. கடைசியில் தெரியும் பச்சை பெல்ட, நாயகனுக்கு தோடக்கத்தில் நாசுக்காகவாகவும் தெரிந்திருக்க வேண்டும். அப்பா மகனை நினைவுப்படுத்த எதுமில்லாத வீட்டில் அப்பாவின் ,மரணம் எல்லாவற்றையும் நினைவுப்படுத்தும்தான் ஆனால் அதனுல் இருக்கவேண்டிய சூசகத்தன்மை இல்லாதது கதையை தட்டையாக்கிவிடுகிறது. சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு செல்பவர்களின் கதைதான் இத்தொகுப்பில் அதிகம் என்றாலும் அதனை அப்படியே சொல்ல முயன்றிருக்கிறார் ஆசிரியர்;பாராட்டுகள். ஆனால் வெறும் காட்சிகளும் காலை நேர அவசரமும் ரயிலுக்கான காத்திருப்புமே போதுமென்று நின்றிருக்க வேண்டாம்.

   சுடோக்கு – இக்கதையில் ஆசிரியர் சொல்ல வருவதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கதை அந்தரத்தில் இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளைகதையின் முடிவு வாசகர் கையில் என ஆசிரியர் நினைத்திருக்கலாம். ஆனால் அதற்கான இடைவேளியை அவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

   ஆறஞ்சு – இக்கதையின் தலைப்பைத்தான் புத்தகத்தின் தலைப்பாக ஆசிரியர் வைத்திருக்கிறார். ஆனால் அதன் அட்டைப்படத்தில் 5…6… என இருக்கிறதே..? அதனை 6…5… என வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமே.? மாணவன் தனது கதையை சொல்வதாக கதை நகர்கின்றது. மாணவர்களுக்கான கதையை சிலவாறாக நான் பார்க்கிறேன். முதலாவது மாணவன் தன் மொழியில் சக மாணவனுக்கு கதை சொல்லுதல், அடுத்த்து மாணவன் தன் மொழியில் எல்லோருக்கும் கதை சொல்லுவது அடுத்ததாய் ஆசிரியர் தன்னை மாணவனாக நினைத்துக் கொண்டு கதை சொல்வது. ஆறஞ்சு கதையில் ஆசிரியர் மூன்றாவதை செய்திருக்கிறார். மாணவனின் உளவியலை சேர்த்திருந்தால் கதை தனித்தி தெரிந்திருக்கும். இக்கதையில் கையாலப்பட்ட அங்கம் இப்போதும் என்னை சிரிக்க வைக்கிறது. உதாரணம் , எல்லா பாட்த்திலும் ஏ ஸ்டார் எடுத்துட்டு ஒரே ஒரு பாடத்தில் மட்டும் ஏ எடுத்துட்டு சுஜாதா ஓன்னு அழுதாள். நாம் எல்லாத்துலயும் சி கிரேட்தான் எடுத்திருந்தேன். அதை பார்த்துட்டு அம்மா அழுதாங்க….

    பெயர்த்தி, அவள் அவன் அவர்கள், சிதறல்கள் ஆகிய இரண்டு கதைகளிலும் நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்.

    அலையும் முதல் சுடர் – இக்கதையை குறித்து நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உண்மையில் இக்கதையை படித்த பின் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளை படிக்கலாமா என சந்தேகித்தேன். என்னைக்கேட்டால், இத்தொகுப்பில் தேவையற்ற கதையாகவே இதனை பார்க்கிறேன். ஏற்கனவே சொல்லப்பட்டதை திரும்ப சொல்லலாம் ஆனால் அந்த திரும்ப சொல்லுதலில் இருக்கும் தனித்தன்மைதான் முக்கியம் என நம்புகிறேன். காக்கா வடை கதை எல்லோருக்கும் தெரிந்த கதைதான், அக்கதையை அப்படியே சொல்லி கதையில் காகம் பாடுவதற்கு முன் வாயில் இருந்த வடையில் காலில் பிடித்துக்கொண்டது. நரி ஏமாந்தது என முடிக்கும் போது என்னதான் தெரிந்த கதையாக இருந்தாலும் அக்கதையை தனித்து காட்டுகிறது. இக்கதையில் அப்படியான முடிவும் இல்லை. வெறுமனே தருமன் பார்வையில் கதை நகர்வதாக கொண்டாலும் அதில் முழுமை பெறவில்லை.

   ‘பொழுதின் தனிமை’ – கதையில் மூன்று தலைமுறை காட்டப்படுகின்றது, அதிநவீன வசதிகள் குறித்து அறிந்திடாதவர்கள், அதனை தேவைக்கேற்ப பயன் படுத்துபவர்கள், அதைவிட புதிதாக வந்திருப்பதை பயன்படுத்துகின்றவர்கள் என கொள்ளலாம். முறையே பாட்டி, அம்மா, பேத்தி. இக்கதையை இன்னமும் செறிவாக்கியிருக்கலாம். வெவ்வேறு சூழலில் வாழ்ந்த, வாழுகின்றவர்களை ஒரே கதைக்குள்ளே கொண்டுவரும் வாய்ப்பு இக்கதையில் கிடைத்திருந்த்து. சரியாகவே அதனை பயன்படுத்தியிருந்தார் ஆசிரியர்.

   மொத்ததில் கதைக்கான எல்லா கதைகளும் ஆசிரியர் தெரிந்திருக்கின்றார். அதனை கதையாக்குவதற்கான பயிற்சியினை வாசிப்பின மூலமும் தனக்கு வரும் விமர்சனம் மூலமும் பெற்றுவருகிறார். இன்னும் அவரிடம் இருந்து வெவ்வேறு வகை படைப்புகளை எதிர்ப்பார்க்கின்றேன்.




ஆசிரியர் அழகு நிலாவிற்கு ; இக்கேள்வியின் வழி எனது  ரசனையையும் வாசிப்பையும் மேம்படுத்துவதுதான் நோக்கம். உங்கள் தொகுப்பை விமர்சித்து எனது விமர்சன அறிவை காட்டுவது அல்ல. நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் அடுத்தடுத்த படைப்புகளுக்கு வாழ்த்துகள்.

   சரி, நவீன் நான் சொல்லவந்தை சொல்லிவிட்டேன். ஏதும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும். நீங்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க புத்தகத்தை முழுதும் படித்து முடித்த பிறகுதான் இதனை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்களின் பதிலை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி..

இப்படிக்கு தயாஜி




http://vallinam.com.my/navin/?p=2237
ம.நவீன் எழுதிய விமர்சனத்தை இங்கு வந்து வாசிக்கலாம்.

நாம் நம்பும் வார்த்தைகள் என்ன செய்யவேண்டும்....?




      
          இப்போதுதான் நவீனின் ‘கண்ணீரை பின் தொடர்கிறேன்’ http://vallinam.com.my/navin/?p=2279#more-2279 கட்டுரையை வாசித்து முடித்தேன். சிறையில்,  தூக்கு தண்டனை கைதியை சந்திக்க சென்றிருக்கின்றார். சிறையிலேயே தான் சில நாவல்களை எழுதியிருப்பதாக அந்த கைதி பேச\த் தொடங்கியிருக்கிறார். வல்லினம் குறித்தும், வானொலியில் நவீன் கொடுத்த நேர்காணல் குறித்தும் அவர் தெரிந்து வைத்திருக்கின்றார். அவரிடம் இருந்து நல்லதொரு படைப்பாகம் வெளியவரவிருப்பதை அவர்களின் உரையாடல் வழி புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர்களின் உரையாடலில் நானும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும் கண்ணீரையும் கொடுக்கின்றன. 


“தயாஜி எனக்கு பிடிச்சமான அறிவிப்பாளர். மண்டையில நல்ல விசயம் இருக்கு அவருக்கு……..”    
       என்று என்னை குறித்து அந்த கைதி பேசியிருக்கிறார். ஐந்தாண்டுகால வானொலி அறிவிப்பு பணியில் பணத்தையும் பெயரையும் சம்பாதித்தேனோ இல்லையோ , ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மனிதனின் நினைவில் நான் இருக்கிறேன் என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது. மீண்டும் ஒரு நாள் வானொலி அறிவிப்பாளராக வருவேனா இல்லையா என்பதை விட நான் விட்டுச்சென்ற இடத்தை வேறு யாராலும் பூர்த்தி செய்ய முடியாது. நானின்றி அவ்விடம் காலியாகவே இருக்கும்.

    நாம் நம்பும் வார்த்தைகள் என் சக மனிதனின் துயரத்தை துடைத்திட வேண்டும். நாம் நம்பும் பாடல்கள் என் சக மனிதனை நடனமாட வைக்க வேண்டும். நாம் சொல்லும் கவிதைகள் என் சக மனிதனுக்கு வெளிச்சத்தை கொடுக்க வேண்டும். 

     என் வாழ்வானதும் சரி என் வார்த்தைகளானதும் சரி என் சக உயிரை இன்னல்களில் இருந்து விடுவிப்பதே, எழுந்து நடக்க வைப்பதே, வாழ்வென்னும் பெருந்துயரத்தை சிரித்த முகமாய் கடக்க வைப்பதே…

என்றும் அன்புடன் தயாஜி,…
ம.நவீனின் கட்டுரையை இங்கு வாசிக்கலாம்.


அக்டோபர் 14, 2014

வி-10

 வி-10
 
 
 
 
இதனை தட்டச்சு செய்துக் கொண்டிருக்கும் சமயம்.
என்னுடைய கைவிரலில் இருந்து வழிந்துக் கோண்டிருக்கும் ரத்தத்தினை துடைக்க மனமில்லை.
அதற்கான அவசியமும் இனி இருப்பதாக தெரியவில்லை. கணினிக்கு ஏதும் ஆகிடுமோ என்ற பயமில்லாமல்
எழுத்துகளை தட்டுகிறேன். இவ்வளவு வேகமாக தட்டச்சு செய்ததில்லை. சொல்லவேண்டியது மிக
முக்கியம் அவசியமும் கூட.
 
    அருகில் ஆழ்ந்து உறங்கிகொண்டிருக்கிறாள் மனைவி.
பெட்டியில் இருந்து அவளை இனி எழுப்ப இயலாது. நானும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் பேச்சு
மூச்சற்று போகலாம். இரண்டு பெட்டிகளில் எனக்கான பெட்டியை நான் தான் பூர்த்தி செய்யவேண்டும்.
அதற்கு உங்களுக்கு சிலவற்றை சொல்லியாக வேண்டும். விபத்து எத்தகையானதாக இருந்தாலும்
அதன் பாதிப்பு சம்பத்தப்பட்டவருக்கு வார்த்தைகளில் சிக்காத ஒன்றாக இருந்துவிடுகிறது.
 
   அதனால்தான் என்னவோ விபத்துகள் குறித்த பிரக்ஞையின்றி
வாகனங்களில் செல்கிறார்கள். என்னால் பார்க்கவியலாத அளவுக்கு முகத்திலும் கழுத்திலும்
ரத்த ஒழுகளுடன் இருக்கிறாள் மனைவி. மிகவும் பிரகாசமான முகம் கொண்டிடுந்தவள் அவள். அவளில்
குரலின் இனிமை அத்தனை சுகமானது.
 
   எங்களின் காதல் கதைகள் முழுக்கவும் அவளது முக பிரகாசமாகவும்
, இனிமை குரலாகவும்தான் சூழ்ந்திருக்கிறது. கோவத்தில் கூட அவளின் குரல் ஒலி எனக்கு
காதலையே வளர்த்தது. வழக்கம் பொலவேதான் வீட்டில் சம்மதிக்க மறுத்து சண்டையிட்டு நாங்கள்
கைக்கோர்த்தோம்.
 
   எங்களின் இல்லற வாழ்க்கை தனிக்குடித்தனமாக இருந்தாலும்,
எப்போதும் வீட்டில் மகிழ்ச்சி, வீட்டு இருப்பை அழுத்தமாக்கிகொண்டே இருந்தது. தொலைக்காட்சி
இல்லாததால் எங்களில் இருவரின் முகங்களே வீடு முழுக்க நிறைந்திருந்தன. வானொலி இல்லாததால்
எங்களின் குரல் மட்டுமே வீட்டில் மூளை முடுக்கலில் எல்லாம் தங்கியிருந்தன.
 
   இரவுகளில் நாங்கள் எங்களுக்குள் கிச்சி கிச்சி
மூட்டிக்கொண்டு வித்தியாசமாக சிரித்து ஒருவரை ஒருவர் பயம்காட்டுவோம். இருவரில் யார்
முதலில் பயப்படுகிறார்கள் என்பதே போட்டி. இருவரில் யார் முதலில் பயந்தாலும் இருவருக்கும்தான்
குதூகலாக அன்றைய பொழுது விடியும். இப்படி நாங்கள் ஒருவரை ஒருவர் பயமூட்டி சிரித்து
கொண்டாலும் எங்களை பயமூட்டும் ஒன்றும் அவ்வபோது வீட்டிற்கு வந்து போகும். சிலந்தி.
 
    சிலந்திகளுக்கு
எங்கள் மேல் என்ன கோவமென்று தெரியாது. பல முறை எங்களை கடிக்க வந்திருக்கின்றன. பல வடிவங்களில்
வந்திருக்கின்றன. சிலந்திகளுக்கு பயந்தே வீட்டில் அங்குமிங்கும் மருந்துகளை வைத்திருக்கிறோம்.
எங்களின் பாக்கெட்டிலும் சிலத்திக் கொல்லி மருந்து எப்போதும் இருக்கும். கரப்பான் பூச்சிகளால்
எங்களுக்கு ஒரு போதும் தொல்லை இருந்ததில்லை. செத்த சிலந்திகளை தின்பது இந்த கரப்பான்
பூச்சிகள்தான். என் மனைவி சொல்வதை கரப்பான் பூச்சி கெட்கிறதோ என்று கூட எனக்கு சந்தேகம்
ஏற்படும். அது அவ்வளவு பெரிய அதிசயம் இல்லாததால் அதுபற்றி இதுவரை கேட்டதில்லை. கேட்டிருக்கலாம்.
 
 வெலைக்கு சென்ற பின்னும் நாங்கள் குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு
ஒரு முறையாவது குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்வோம். பேசிக்கொள்வோம். இன்னும் சொல்லப்போனால்,
அலுவலகத்தில் இருக்கும் அழகானவர்கள் குறித்தும் சிலாகித்துக் கொள்வோம்.
 
    பெண்களின் குறித்து நான் பேசும் ஒவ்வொரு முறையும்
ஆண்களைக் குறித்து அவள் பேசுவாள். நிஜத்தில் நாங்கள் இருவருமே பொய் சொல்கிறோம் என்பது
எங்களுக்கு தெரியும். இருந்தும் அப்படியாக ஒரு விளையாட்டும் எங்களிடம் உண்டு. ஏனெனில்
அலுவலகத்தில் சகஜத்தில் நாங்கள் யாருடனும் பழுகுவதில்லை. மூன்றாம் தரப்பினர் யாரும்
எங்களுக்கு ஊடலை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்புவதில்லை. அலுவலகம் என்பது வேலை செய்யவே.
அதற்கு மட்டுமே அங்கு செல்வோம். இருவருக்கும் இதில் ஒரே சிந்தனை இருப்பது இன்னும் மகிழ்ச்சிதான்.
இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். ஒன்றை தவிர.
 
    எல்லாம் சரியாக இருந்தால் அதில் என்னவிருக்கிறது
சுவாரஸ்யம் என்று எவன் சொன்னானோ தெரியவில்லை. எங்களில் இருந்த ஒரே முரன் அந்த ஒன்றுதான்.
இந்த விபத்துக்கும் அதுதான் காரணமாக அமைந்து விட்டிடுந்தது.
 
   இரவு. எத்தனை நட்ச்சத்திரங்களை காட்டிக்கொடுக்கிறது.
எத்தனை அழகை அடக்கி வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியாது. ஏனோ எனக்கு அது
தெரிந்திருக்கிறது.
 
   இருள் மட்டும்தானே இவ்வுலகில் நிரந்தரமான ஒன்று.
வந்து போகும் சூரியனில் ஒளி குறித்தெல்லாம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலையில்
வருகிறது மாலையில் மறைகிறது. அவ்வளவுதான். என்னமோ வெளிச்சம் தருகிறது. உயிர்கள் வாழ
சூரிய வெளிச்சம் தருகிறது என்பதெல்லாம் விஞ்ஞானிகளின் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கவேண்டும்.
அதைவிடுங்கள் நாம் பேச வேண்டியது இரவை குறித்து, இரவின் அழகை அழிக்கும் சூரிய ஒளியைக்
குறித்தல்ல.
 
   இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதுதுதான் முதன்
முதலாக எனக்கும் எனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு உருவானது. மறுநாள் நண்பரின் திருமணத்திற்கு
செல்லவேண்டும். இரவில் பயணிக்கலாம் என்று இரவை குறித்து பேச்செடுத்த சமயம்தான் எனக்கே
அவளுக்கு இரவின் மீது இருந்த ஏதோ பயம் பிடிபட்டது.
 
   பகலில் வெயிலில் வெறுப்பு இருந்தாலும் காரணம்  சொல்லலாம். 
இதத்தை கூட்டும் இரவில் ஏற்பட்ட வெறுப்பின் காரணம் அவளுக்கு சொல்ல தெரியவில்லை.
அதனை தொடர்ந்து ஏதோ இருக்கிறது என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. இவள் எதையாவது மறைக்கிறாளோ
என்று என் ஆள்மனதில் ஒரு குரல் கேட்டது.
 
  சட்டென திருமணத்திற்கு முந்திய எந்த நாளிலும் நாங்கள்
இரவுகளில் சந்தித்ததில்லை என்பது பிடிபட்டது. ஏன் இதுவரை எனக்கு அது குறித்து தெரிந்திருக்கவில்லை
எனற குழப்பம் என்னை கோவப்படுத்தியது. இன்னமும் ஆழமாக பழைய நினைவுகளில் மூழ்க முயன்றேன்
. நனைந்தேனே தவிர நினைவுக்கு எதுவும் வரவில்லை.
 
   அவளுக்கு பேய்கள் என்றால் பயமாக இருக்கலாம் என்று
என்னை நானே சமாதானம் செய்துக் கொண்டேன். எனக்கு நானே பேசிக்கொண்டேன். ஆனால் அது என்
குரல் அல்ல என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் அது சொல்வதை நான் கேட்டேன். அந்த
குரல் வழக்கமான எனது ஆழ்மனதில் இருந்துதான் வந்தது.
 
   என் நினைவுகளை ஏமாற்றி ஏதோ ஒன்று எனக்குள் புகுந்திருப்பதை
உணர்ந்த நொடி. வேர்வை என் கால் வேர் வாரை மொட்டுவிட தொடங்கியது. வெளியேரு என சொல்வதாய்
இருந்தாலும் யார் அது என தெரிய வேண்டுமே. ஊர் பேர் தெரியாதவரை எப்படி விரட்டுவது எப்படி
போரிடுவது. இதென்ன பேஸ்புக்கா ஊர் பேர் தெரியாதவர்களோடு சும்மாவேணும் சண்டையிட்டு கூத்தடிப்பதற்கு.
 
   இத்தனை குழப்பத்திற்கு மத்தியிலும் என்னை பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கும் மனைவிக்கு என்னமோ தெரிந்திருக்கிறது. அவளின் சிரிப்புக்கு
நானும் கூட சிரித்தேன். பெரிய வித்தியாசம் இல்லாத சிரிப்பு அது. ஒரே மாதிரியான ஒலி,
ஒரே மாதிரியான பற்கள், ஒரே மாதிரியான தொனி.
 
   பல கேள்விகளுடன்தான் பயணிக்கலானோம். என்னுடைய கணிப்புப்படி
மதியம் கிளம்பி இரவு வரை நெருங்கிக் கொண்டிருந்தது பயணம்.
 
   சாலை கொஞ்சம் கொஞ்சமாக இருளால் சூழத்தொடங்கியது.
மனைவியின் கண்களில் இருந்த வசீகரம் பீதியாக தன்னை மாற்றியிருந்தது.
 
    நண்பனின் வீட்டுக்கு செல்ல வேண்டிய பயணத்தில்தான்
விபத்தும் அதையடுத்து விபரீதமும் ஏற்பட்டது. மனைவியின் பேச்சில் இருந்திருந்த காரணத்தையும்
பயத்தையும் புரிந்துக் கொள்ள இத்தனை தாமதமாகியிருக்கவேண்டாம்.    
 
   இவ்விபத்துக்கு பிறரை காரணம் காட்டுவதைவிட நாங்களேதான்
முதன்மையான காரணமாக இருக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
 
   சாலையில் உடன் வந்துக் கொண்டிருந்த இதர வாகனங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. இப்போது இருள் சூழ ஒற்றைவழி நெடுஞ்சாலையில் நாங்கள் மட்டுமே
பயணித்துக் கொண்டிருந்தோம்.
 
   இந்த வழியை பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும்  வழியில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாததை
நண்பன் முன்னமே சொல்லியிருந்தான். ஜீ.பி.எஸ் போன்ற பாதை காட்டி துணையில்லாமல் போய்க்கொண்டிருந்தேன்.
 
   தூரப்பயணம் வருகிறதென்றால் காரை ஒரு முறை பரிசோதனை
செய்துக் கொள்வது எனது பழக்கம். இந்த முறை என்னமோ கோளாரால் கார் வேகமெடுத்தால் குதித்து
குதித்து செல்வது போல தோன்றியது. குதிக்கிறதா என கவனமெடுத்து கூர்ந்தால் அப்படியொன்றும்
இல்லை.  இல்லையென்பதை உறுதி செய்த்த பிறகு கார்
குதித்த குதியில் என் தலை மேலே முட்டிவிட்டு வந்தது. மனைவியின் கண்கள் கொஞ்சமும் அசராமல்
இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
 
    அவளின் கண்கள் தூரத்தில் எதையோ கண்டுவிட்டதை அவளின்
செயல்களில் இருந்து தெரிந்துக் கொண்டேன். உண்மையில் எனக்கு முன்னதாகவே அவள் கவனித்திருப்பது
குறித்த கேள்விகள் இல்லை.
 
   குழந்தையோடு ஒருத்தி நின்றுக் கொண்டிருந்தாள்.
 
   பல கதைகளில் இப்படி பேய்கள்தான் பெண்களாகவும் குழந்தையாகவும்
வந்து நிற்பதாக படித்தும் கேட்டும் இருக்கிறோம். இப்படியான பேய்கள் எல்லாம் இப்போதும்
இருக்குமோ என்ற பயத்தில்  எனக்கும் பீதியானது.
மனைவியும் நானும் ஒருவரை ஒரு பார்த்துக்கொண்டோம். கார் நேராக அந்த பெண்ணுக்கு அருகிள்
நின்றது.
 
   கார் இப்போது வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.
 
நானும் மனைவியும்
பேச்சு மூச்சற்று முன் இரு இருக்கையில் இருந்தோம். பின்னால் கைக்குழந்தையுடன் அந்த
பெண். அவள் கார் கண்ணாடியையே வெறுத்துக் கொண்டிருந்தாள். அவள் குழந்தையிடமிருந்து எந்த
அசைவும் இன்னமும் வரவில்லை. அது குழந்தைதானா. கையில் கொண்டிருக்கும் அந்த பெண்ணும்
பெண்தானா.
 
   சாலையின் இருள்கள் காரினை நிறைத்துக்கொண்டிருந்தது.
காருக்குள் சூன்யம் சூழ்ந்துவிட்டதாய்ப்பட்டது. சுழ்ச்சியில் சுழலில் சுற்றிகொண்டதாக
படபடத்தது.
 
    காரின் சத்தம் மட்டுமே இப்போது காதுகளை அடைத்தது.
அடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விளகிக்கொண்டிருக்கிறது. அடையாளம் காட்டாத இரைச்சலில் நாங்கள்
ஆட்பட்டோம்.
 
   குழந்தையின் அழுகுரல் எங்களை சுய பிரக்ஞைக்கு கொண்டுவந்தது.
குழந்தை அவளின் கைகளில் அசைந்தது. குழந்தைகளுக்கே உரிய அசைவாக இருக்கவில்லை. நெழிந்தது.
அந்த பெண் இன்னமும் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியையேதான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
 
   அடுத்ததாய் நடந்துவிட்டதை நாங்கள் கனவிலும் கண்டிருக்கவில்லை.
அந்த பெண்ணின் கண்களில் இருந்து வந்த ரத்தம் வளைந்து மூக்கினுள் போனது. அவளின் பற்கள்
தெரிய  எங்களை நோக்கி வாயை திறந்தாள். தொண்டைக்குழி
பாதாளம் போல நீண்டிருந்தது. ஒட்டடைகள் காற்றில் அசைய எக்கச்சகமான சிலந்திகள்  அங்குமிங்கும் ஓடின. அவளின் கண்களின் தெரிந்த பசி
எங்களின் வயிற்றில் அமிலத்தை ஊற்றியதாய் செய்தது. கையிலிருந்த குழந்தையை பாதள வாய்க்கும்
கொஞ்சம் கொஞ்சமாக நுழைத்தாள்.
 
   அடுத்ததாக அவளது பாதாள வாய்க்கும் நாங்கள் இருவரும்தான்
செல்லப்போவது உறுதியானது. விபத்து அப்போதுதான் நடந்தது.
 
  காரின் முன்னே கவனிக்காமல் நான் என் மனைவியை பார்க்க
அவளும் சொல்லி வைத்தார் போல என்னை பார்த்தாள். இருவரும் ஒரே மாதிரி சிரித்தோம். ஒரே
மாதிரியான ஒலி வந்தது.
 
   இருவரும் சத்தமாக சிரிக்கத்தொடங்கினோம். சட்டென
இருவரும் பின்னால் பாய்ந்தோம். எப்படித்தான் இருவரின் உடலும் பின்னால் போனதோ தெரியவில்லை.
பயங்கர அலறல் சத்தம்.
 
  கார் இன்னமும் நேராக சென்றுக் கொண்டிருந்தது. முன்
இரு இருக்கைகளும் காலியாக இருக்க நானும் மனைவியும் பின்னால் அந்த பெண்ணை கடித்து தின்றுக்
கொண்டிருந்தோம். கார் முழுக்க சிலந்திகள் கதறிக் கொண்டு ஓடின. வழக்கம் போல கரப்பான்
பூச்சிகள் வழக்கத்திற்கு மாறாக ஓடிக்கொண்டிருக்கும் சிலந்திகளை பிடித்து தின்றுக்கொண்டிருக்கின்றன.
 
    விடியப்போகிறது நானும் பெட்டிக்குள் செல்லவேண்டும்.
இரவு வந்ததும் வாருங்கள் இன்னும் சொல்லவேண்டியவை உள்ளன.
 
    பெட்டிக்குள்ளே போனேன். என்மேல் கரப்பான் பூச்சிகள்
போர்வைபோல போர்த்திக் கொண்டிருந்தன. பக்கத்து பெட்டியில் உள்ளது போலவே என் முகத்தையும்
விட்டுவிட்டு உடல் முழுவதும் கரப்பான்கள் நிறைந்து வழிந்தன. சட்டென மூடி தானாக வந்து
மூடியது. சூரியன் வருவதற்கு முன்பாக வீடு இடிந்து மண்ணுக்குள் போனது.
 
    இரவில் வீடு மீண்டும் முளைக்கும். பசிக்கும்.  நாங்கள் வருவோம். .
 
   
 -தயாஜி-
நன்றி மலைகள்.காம்
2014

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்