நாம் நம்பும் வார்த்தைகள் என்ன செய்யவேண்டும்....?
இப்போதுதான் நவீனின் ‘கண்ணீரை பின் தொடர்கிறேன்’ http://vallinam.com.my/navin/?p=2279#more-2279 கட்டுரையை வாசித்து முடித்தேன். சிறையில், தூக்கு தண்டனை கைதியை சந்திக்க சென்றிருக்கின்றார். சிறையிலேயே தான் சில நாவல்களை எழுதியிருப்பதாக அந்த கைதி பேச\த் தொடங்கியிருக்கிறார். வல்லினம் குறித்தும், வானொலியில் நவீன் கொடுத்த நேர்காணல் குறித்தும் அவர் தெரிந்து வைத்திருக்கின்றார். அவரிடம் இருந்து நல்லதொரு படைப்பாகம் வெளியவரவிருப்பதை அவர்களின் உரையாடல் வழி புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர்களின் உரையாடலில் நானும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும் கண்ணீரையும் கொடுக்கின்றன.
“தயாஜி
எனக்கு பிடிச்சமான அறிவிப்பாளர். மண்டையில நல்ல விசயம் இருக்கு அவருக்கு……..”
என்று என்னை குறித்து அந்த கைதி பேசியிருக்கிறார்.
ஐந்தாண்டுகால வானொலி அறிவிப்பு பணியில் பணத்தையும் பெயரையும் சம்பாதித்தேனோ இல்லையோ
, ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மனிதனின் நினைவில் நான் இருக்கிறேன் என்பதே எனக்கு போதுமானதாக
இருக்கிறது. மீண்டும் ஒரு நாள் வானொலி அறிவிப்பாளராக வருவேனா இல்லையா என்பதை விட நான்
விட்டுச்சென்ற இடத்தை வேறு யாராலும் பூர்த்தி செய்ய முடியாது. நானின்றி அவ்விடம் காலியாகவே
இருக்கும்.
நாம் நம்பும்
வார்த்தைகள் என் சக மனிதனின் துயரத்தை துடைத்திட வேண்டும். நாம் நம்பும் பாடல்கள் என்
சக மனிதனை நடனமாட வைக்க வேண்டும். நாம் சொல்லும் கவிதைகள் என் சக மனிதனுக்கு வெளிச்சத்தை
கொடுக்க வேண்டும்.
என் வாழ்வானதும் சரி என் வார்த்தைகளானதும் சரி என் சக உயிரை இன்னல்களில்
இருந்து விடுவிப்பதே, எழுந்து நடக்க வைப்பதே, வாழ்வென்னும் பெருந்துயரத்தை சிரித்த
முகமாய் கடக்க வைப்பதே…
என்றும்
அன்புடன் தயாஜி,…
ம.நவீனின் கட்டுரையை இங்கு வாசிக்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக