- காயப்பெட்டகம் -
எல்லாம் முடிந்துவிட்டது
என்பதாக
வட்சப்பில் செய்தி அனுப்பி
ப்ளாக் செய்துவிட்டவளிடம்
ஒரேயொரு கேள்வி
கேட்க வேண்டியுள்ளது
அவள் சொன்ன
'எல்லாம் முடிந்ததில்'
எதையெல்லாம்
சேர்த்து வைத்திருக்கிறாள்
எதையெல்லாம்
சேராமல் வைத்திருக்கிறாள்
எதையெல்லாம்
விட்டு வைத்திருக்கிறாள்
எதையெல்லாம்
விடாமல் வைத்திருக்கிறாள்
என்பதைதான்
எல்லாம் என்பது
எங்கள் இருவருக்குமே
வெவ்வேறு என இன்றுதான்
புரிந்தது
எனக்கு எல்லாம் என்பதும்
எல்லாமுமாக இருந்ததும்
அவள் மட்டும்தான்
அவளுக்கு எல்லாம் என்பது
இனி
என்னைத்தவிர்த்தது
ஒரே இடத்தில் நின்றாலும்
என் பக்கத்தில் பூ இருக்கிறது
அவள் பக்கத்தில் தலை இருக்கிறது
இடையில் சிக்கிய உடலோ
சிதைந்துகொண்டே போகிறது
அதனால்தான் கேட்க வேண்டும்
அவள் சொன்ன
'எல்லாம் முடிந்ததில்'
எதையெல்லாம் சேர்த்திருப்பாள்
0 comments:
கருத்துரையிடுக