- பாழாய்ப்போன பழக்கம் -
பெரிதாக அலட்டிக்கொள்ள
அவசியம் உண்டா
சொல்லுங்கள்
எப்படியும் நம்மை
ஏமாற்றத்தான் போகிறார்கள்
அல்லது
நாமே சென்று
ஏமாறத்தான் போகிறோம்
வேறென்ன செய்ய
நமக்கு பழகிவிட்டது
இந்த ஏமாற்றங்கள் எல்லாம்
எங்கே
எப்போது
தொடங்கியது
என நமக்குதான் தெரியவில்லை
அவர்களுக்கு
மிகத்துள்ளியமாகத் தெரிந்திருக்கிறது
நம்மை காட்டிலும்
அதிகமாய் நம்மை கவனிப்பவர்கள்
அவர்கள்தான்
இவ்வளவு நெருக்கமாக கவனித்து
பின் தொடர்ந்த
நம்மையே அவர்களால்
ஏமாற்ற முடியுமெனில்
நம்மை போல ஏமாளி
யாராவது இருப்பார்களா
இப்போது கூட பாருங்களேன்
அவர்களை திட்டுவதற்கு பதில்
நம்மையே நாம் திட்டி கொள்கிறோம்
பாழக்கதோஷத்தில்
எமாற்றியவர்கள் எவ்வளவு
தூரம் செல்கிறார்களோ
செல்லட்டும்
என விட்டுவிடுவதுதானே
நம் இயல்பு
எப்படியும் திரும்ப வருவார்கள்
ஏமாற்றுவார்கள்
நம் மீது பழி சுமத்தி
அவர்கள் அழுவார்கள்
நாம் ஏமாறுவோம்
நாம்தான் தவறோ என
கண் கலங்குவோம்
அவர்களுக்கு ஆறுதல் சொல்லியே
அலுத்துப்போவோம்
அப்போது கூட
நமக்கெல்லாம் புத்திவராது
பழகிவிட்டது நமக்கு
பாழாய்ப்போக.....
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக