- தீ பற்றும் கைகள் -
ஏதோ ஒன்றை
இறுக்கமாக பிடிக்கத்தான்
வேண்டுமா?
இல்லையென்றால்
விழுந்துவிடுவோமா
அல்லது
தள்ளிவிடுவார்களா
தள்ளப்படுவதைவிட
தானே விழுவதில்
பெரிய பாதகமில்லை
ஆனாலும் பாதுகாப்பு அவசியம்
யாரின் கைகளை
நாம் பிடித்துக்கொண்டால்
தப்பிக்கலாம்
எவனொருவன் நம்
வீழ்ச்சியில் சிரிப்பானோ
நாம் விழுந்தால் ரசிப்பானோ
நம் இயலாமையை ருசிப்பானோ
அவன் கைகளைத்தான்
முதலில் பிடிக்கவேண்டும்
ரொம்பவும் இறுக்கமாக
பிடிக்க வேண்டும்
அந்தக் கைகள்
இனியெப்போதும் அசையாதபடிக்கு
அழுத்தி பிடிக்க வேண்டும்
நாம் நினைத்தாலன்றி
அந்தக் கைகள்
சிறிதேனும் அசையக்கூடாது...
0 comments:
கருத்துரையிடுக