பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 15, 2026

- இரு கோடுகள் -


- இரு கோடுகள் - 

குழந்தையின்
கையைப் பிடித்து 
ஒருவர் நடந்தும் ஓடியும்
வருகின்றார்

குழந்தை என்னமோ
தைரியமாகத்தான் வருகிறது

அவர் முகத்தில்தான்
அவ்வளவு பயம்

சின்னதாய் 
ஒரு பெரிய கோடும்
பெரியதாய் 
ஒரு சின்ன கோடும் போல...

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்