ஆர்.சூடாமணி 2
சிறகுகளின் கதை நேரம்; 52வது சிறுகதைக் கலந்துரையாடல் திங்கட்கிழமை சிறப்பாய் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.சூடாமணியின் 'பூமாலை' சிறுகதை குறித்து உரையாடினோம். ஏறக்குறைய பதினொரு பேர் இணைய கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவருமே சிறுகதையை வாசித்து பேசியதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
சிலருக்கு முதன் முதலாக ஆர்.சூடாமணியின் எழுத்துலகின் வாசல் இன்று திறந்ததாகவும் சொன்னார்கள்.
விரைவிலேயே ஆர்.சூடாமணி படைப்புலகம் குறித்த முழுமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோம்.
அடுத்த வார சிறுகதைக் கலந்துரையாடலுக்கான சிறுகதையை சில தினங்களில் பகிர்வோம். வாசிப்போம், உரையாடுவோம், கலந்துரையாடுவோம்...
கலந்து கொண்ட நண்பர்களுக்கு சிறகுகள் குழுவின் அன்பும் நன்றியும்...
#சிறகுகளின்_கதை_நேரம்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக