பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 28, 2026

நன்றி மலர்கள்





மஇகா 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு.....
தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.


மருத்துவ முகாமுக்கு அருகிலேயே நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனைக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார்கள்.

என்னிடம் குடை இல்லாததால் வெயில் மேஜை நாற்காலியோடு புத்தகங்களுடன் அமர்ந்திருந்தேன். இதனை கவனித்த இயக்கத்தினர் என்னை கூடாரத்திற்குள் வந்துவிட சொன்னார்கள்.


மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்தவர்களில் சிலர் புத்தகங்களை வாங்கினார்கள். சிலர் புத்தகங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

திரு.மணிமாறன் என்பவர், அங்கு வந்திருந்த ஐந்து பேருக்கு புத்தகங்களை ஸ்பான்சர் செய்தார்.


இவ்வட்டார இயக்கத்தினர் இன்றைய மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தி முடித்தார்கள். பல புதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இவ்வட்டார மஇகா உறுப்பினருக்கும் தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலய நிர்வாகத்தினருக்கும் என் அன்பும் நன்றியும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்