- வெறும் முதலைகள் -
சகாவே
சமீபத்திய செய்தி
பார்த்தாயா?
இந்தோனேசியாவில் ஒரு முதலை இருக்கிறதாம்
மனிதர் போலவே
கைகளை மட்டும் காட்டி
தூரத்தில் நமக்கு
உதவிக்கான
தோற்றத்தை கொடுக்குமாம்
கடலில் தெரிந்த கையை
காப்பாற்ற சென்ற
மனிதர்களே
அன்றைக்கான உணவாம்
எவ்வளவு சாமர்த்தியசாலி
அந்த முதலை
இந்தோனேசியாவில் மட்டுமா
அந்த முதலைகள் இருக்கின்றன
சகாவே
நன்றாக யோசித்துப்பார்
அப்படி உதவி கேட்டு
நம்மை உணவாக்கிக் கொள்வது
வெறும் முதலைகள்
மட்டும்தானா...
0 comments:
கருத்துரையிடுக