பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 28, 2026

- சும்மாவா -

நடுகல்.காமின் ஏப்ரல் மாத தொடர்களை எழுதி சரிபார்த்து கொண்டிருக்கும் போது 'ஹெண்ட் மேட் ஐஸ் கிரீமென' இதனை இல்லாள் கொடுத்துவிட்டு போனார்.

போனவர் சும்மா போகவில்லை. இந்த ஐஸ்கிரீமில் என்னென்ன சேர்த்திருக்கிறார் என சொல்ல வேண்டும் என்றார்.

ஒருமுறை ஆரஞ்சு போலவும், மறுமுறை மாங்காய்ப் போலவும் இன்னொரு முறை புளிப்பாகவும் இருக்கிறது. எதைச் சொன்னாலும் 'இதுகூட தெரியலயா...!?' என திட்டத்தான் போகிறார்.

"என்ன ருசியா இருந்தா என்ன... நீ சமைச்சா எல்லாமே ருசிதானே.." அப்படின்னு சொல்லி வழக்கம் போல சமாளிச்சாதான் உண்டு போல.

பின்ன, சும்மாவா நாங்கல்லாம் ஊருக்குள்ள எழுத்தாளர்களா இருக்கோம்....?

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்