- காற்புள்ளிகள் காயம் கொடுப்பவை -
நாம் ரொம்பவும் ஆசைப்படுவது, நாம் அதற்காகத்தான் பிறந்தோம் என நம்புவது நம் கண்முன்னே இருக்கும். பலர் அதன் தகுதி தெரியாமல் அதனை அனுபவிப்பார்கள். ஆனால் நாம் அதை நெருங்க நெருங்க அது நம்மைவிட்டு நகர்ந்தபடி இருக்கும்.
அதை அனுபவித்தவர்கள் கொஞ்ச நாளில் அதனை ஒரு பொருட்டாக நினைக்காமல் உதாசினம் செய்வார்கள். அதையும் நாம் பார்த்து மனம் நொந்து இப்போதாவது என்னிடம் வருவாயா என அதனருகில் செல்வோம்.
அப்போதும்கூட அது நம்மைவிட்டு நகர்ந்து கொண்டே நம்மை அதன் பின்னால் அழைத்து கொண்டே இருக்கும்.
என்றாவது ஒருநாள். நாம் வாழும் நாட்களின் கடைசி நாளில் அதுவே நம்மிடம் வரும்.
அதை நாம் துரத்தி துரத்தியே பல ஆண்டுகளாக அதனை ஓட வைத்து ஓட வைத்து உயிர்ப்புடன் வைத்திருந்த கருணைக்கு நம் கால்களுக்கு முத்தமிட்டு நன்றி சொல்லும்.
அந்த முத்த ஈரம் போதும் நம் இத்தனை கால தேடுதலுக்கு. நாம் வந்த நோக்கம் நிறைவடைந்து நம் கண்களை மூட அதுவே நமக்கொரு தியானமாக, நம் மூச்சு காற்று இந்தக் காற்றின் மூச்சாக மாறிக்கொண்டிருக்கும்.
நாம் துரத்தி துரத்தி உயிர்ப்புடன் வாழ வைத்ததுதான் நம்மையுமே இதுவரையில் உயிருடன் வைத்திருக்கிறது. நம்மை தொடர்ந்து நடமாடவும் வைத்திருக்கிறது.
அந்த ஒன்று எந்தவொன்றாகவும் இருக்கலாம்.
காதலாக, காமமாக, அங்கிகாரமாக, ஆசையா, பணமாக, பாசமாக, மன்னிப்பாக, மனிதமாக, எழுத்தாக, எழுந்து நிற்பதாக, சொந்த வீடாக, சோகமற்ற வாழ்வாக...... இப்படி பலப்பல.
சிலருக்கு அது மாபெரும் ராஜ்ஜியமாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதிகாலை ஐந்து மணிக்கான சுடு தேநீராகவும் இருக்கலாம்...
முற்றுப்புள்ளிகள் முடிவானவை முடிந்துவிட்டவை. காற்புள்ளிகள் காயம் கொடுப்பவை ஆனால் காலத்திற்கும் முடிந்துவிடாதவை.

0 comments:
கருத்துரையிடுக