பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 19, 2020

அடங்கா நினைவு



     எஸ்.ராவின் 'வாசக பர்வம்' வாசித்துக் கொண்டிருக்கிறேன். 'அடங்க மறுக்கும் நினைவு' என்ற தலைப்பில் ப.சிங்காரம் குறித்த தன் அனுபவத்தை எழுதிதுள்ளார். புத்தகத்தில் நான் முதலில் படித்தது இந்த கட்டுரையைத்தான். 

     வாசித்து முடிக்கையில் மனதில் துக்கம் தொற்றிக்கொண்டது. காலத்தால் அழியாத 'கடலுக்கு அப்பால்' , 'புயலிலே ஒரு தோணி' போன்ற படைப்புகளைக் கொடுத்த ப.சிங்காரம் எத்தனை துயரங்களைச் சுமந்திருக்கிறார். உள்ளுக்குள் எத்தனை பெரிய தனிமை தீயால் தன்னைத்தானே எரித்துக் கொண்டிருந்தார் என நினைக்கையில் வருத்தமே எஞ்சுகிறது.

    எஸ்.ராமகிருஷ்ணனும் கோணங்கியும் தான் ப.சிங்காரத்தைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அப்போது உரையாடலில் கோணங்கி கேட்கிறார்,

   "ஒரு எழுத்தாளர் இங்கிருக்கிறார் என்பது இங்குள்ளவர்களுக்கு தெரியுமா.?".

அதற்கு ப.சிங்காரம், 

    "அதெல்லாம் ஒரு ஆளுக்கும் தெரியாது. அப்படி நான் சொல்றதும் இல்லை. சொல்ற மாதிரி என்ன எழுதியிருக்கேன்" என்று கேட்டுள்ளார்.

    இது வெறுமனே ஏதோ உரையாடல் போல தெரியலாம். ஆனால், 'கடலுக்கு அப்பால்', 'புயலிலே ஒரு தோணி' போன்ற நாவல்களை வாசித்தவர்களுக்கு ப.சிங்காரத்தின் அந்த வார்த்தைகளில் மறைந்திருக்கும் வலியும் புறக்கணிப்பும் நிச்சயம் தெரியும்.

  ஒரு வாசகனாக ப.சிங்காரத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பது தான் என் நன்றியாக எண்ணுகிறேன்.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்