பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 26, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 9


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 9' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் வார தொடரில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதி.இராஜகுமாரனின் 'ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்' புத்தகத்தை குறித்து எழுதியுள்ளேன்.
கட்டுரையின் முதல் பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவரின் சிறுகதைகளைக் குறித்து பேசுகிறேன். எழுத வந்த புதிய எழுத்தாளர்களுக்கு அவர் கொடுத்த வாய்ப்பு இன்றியமையாதது. எனது பதின்ம வயதில் நானுமே அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டேன்.

மலேசிய இலக்கிய உலகில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக இருந்த, அமரர் ஆதி.இராஜகுமாரன் அவர்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறதுதானே.

தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்..
நேசிப்போம்..
வளர்வோம்..

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்