என் 'லக்கி பேம்பூக்கள்' - 2
நேற்று வாங்கிய செடிகளை விளையாடியபடி பூஜாடியில் வைத்து அசதியில் பொம்மி தூங்கிவிட்டாள். காலையில் எழுந்ததும் பால்கனிக்குச் சென்று பார்த்து மீண்டும் விளையாட ஆரம்பித்தால். விபரீதம் அப்போதுதான் என தொடங்கியது.
பால்கனியில் இருந்து அழுதபடி என்னிடம் ஓடி வந்தாள். அவளுடைய செடிகளைக் காணவில்லை என்றாள். எல்லாம் அங்குதான் இருக்கின்றன என நாங்கள் சொன்னோம். இல்லை என்று பொம்மியும் சொன்னாள்.
நாங்கள் சொல்வதை நிரூபிக்க பால்கனிக்கு அவளைக் கூட்டிச்சென்றோம். நாங்கள் காட்டுவதற்கு முன்பாக பொம்மி காட்டினாள்.
நான்கு பூஜாடிகள் காலியாக கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. பொம்மி சொல்வது உண்மைதான் என மண்டையில் சுருக்கென்றது. இல்லாள் நங்கென்று கொட்டியிருந்தாள். தலையைத் தேய்த்தபடி என்னவென்று கேட்டேன்.
பால்கனி தோட்டத்தை நேற்று சுத்தம் செய்யும் போது ரொம்பவும் பழைய பூஜாடிகள் சிலவற்றை வீச சொல்லியிருந்தார். நேற்றிருந்த அசதியில் இன்று காலையில் வீசலாம் என்றிருந்தேன்.
அதைத்தான் பொம்மி பார்த்து அவளுடைய செடிகளைக் காணவில்லை என்று அழுகிறாள். அவளுக்கு வாங்கிய செடிகளை அவள் அதன் பூஜாடிகளோடு கணக்கிட்டு வைத்திருப்பாள் என எங்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவற்றை கருப்பு பையில் கட்டியிருப்பேன்.
பொம்மிக்கு புரியவைக்கப் பார்த்தோம். அவள் புரியாத மாதிரி பார்க்கிறாள்.
எனக்கு சுருக்கென்று கோவம் வந்துவிட்டது,
"இப்போ என்ன.. இன்னிக்கும் செடி கடைக்கு உன்னை கூட்டிட்டு போகனுமா..?" என்றேன்.
என்னைவிட கோவமாக "யெஸ்.. இன்னிக்கும் செடி கடைக்கு போறோம்..." என்று முடிவாகச் சொன்னாள்.
இல்லாள் காலை உணவைத் தயார் செய்தார். நான் காலி பூஜாடிகளை கருப்பு பையில் போட்டு கட்டி கொண்டிருந்தேன். பொம்மி அவளது பொம்மைகளைக் கொண்டு வந்து செடிகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு முடித்து நாங்கள் செடி கடைக்கு கிளம்பினோம். மனைவி சட்டென இன்னொரு கடைக்கு போகலாம் என அந்தக கடைக்குச் செல்லும் வழியை எனக்கு வட்சப் செய்தார்.
ஏன் புதிய கடைக்கு போகவேண்டும் என கேட்டேன்.
இந்தக் கடை நம் வீட்டு பக்கத்தில்தான் இருக்கிறது. விலையும் குறைவாக கிடைக்கிறது. இல்லாள் வாங்க வேண்டிய செடிகளும் அங்கு இருப்பதாக சொன்னார்.
ஓ அப்படியென்றாள் அம்மாவும் பொம்மியும் சேர்ந்து போட்ட திட்டம்தானா இது.
ஒன்றாகத்தான் இருக்கிறோம். இம்மாதிரி திட்டங்களைத் தாயும் சேயும் எப்போதுதான் போடுகிறார்கள் என பிடிபட மாட்டேன் என்கிறது.
எல்லாம் சரிதான், இதற்கு ஏன் தலையில் கொட்டினாய் என கேட்டேன். இல்லாள் யோசிக்கவில்லை. அப்போதுதான் நாடகம் தத்ரூபமாக இருக்கும் என்று இருவரும் காருக்குள் ஏறிவிட்டார்கள்.
இவர்களின் தத்ரூபத்திற்கு என் தலைதான் கிடைத்தது என நினைத்து கொண்டு கைபேசியில் இருந்த முகவரிக்குச் சென்றேன்.
உண்மையிலேயே நிறைய செடி கொடிகளை வைத்திருந்தார். அதில் ஒரு செடியைப் பார்க்க பல பட்டாம்பூச்சிகள் ஒன்றாய்ப் பறப்பது போலவே இருந்தன. பார்த்ததும் பிடித்துவிட்டது. அருகில் சென்றேன் ஒவ்வொன்றாக தொட்டேன். இல்லாளையும் அழைத்து காட்டினேன். அவருக்கும் பிடித்திருந்தது.
கடைக்காரரிடம் விலையைக் கேட்டேன். எங்கள் பட்ஜெட்டிற்கு ஒத்துவரவில்லை. அந்த ஒரு பூச்செடியை வாங்குவதற்கு பதில் வேறு சில ஜெடிகளை வாங்கிவிடலாம் என்றே யோசித்தோம்.
நடுத்தர குடும்பத்தில் இது ஒரு சிக்கல்தான் இல்லையா. செடி வளர்க்க ஆசைப்படுவோம். அதற்கான இடவசதி இருக்காது. இடம் இருந்தால் அதற்கு ஏற்ற பூச்செடிகள் அமையாது. பூச்செடிகள் அமைந்தால் பூஜாடிகள் சரிதாக இருக்காது. எல்லாமே அமைந்துவிட்டால் நம் பட்ஜெட்டில் பங்கிருக்காது. எல்லாவற்றையும் ஒரு கட்டத்திற்குள் அமுக்கியும் அடுக்கியும் வைக்க வேண்டும்.
இம்முறை பொம்மி அவளது மம்மியும் 'மணி ப்ளாண்ட்' செடிகளையும் நான் எனக்கு ஒரு சின்ன 'ஸ்னேக் ப்ளாண்ட்' செடியையும் வாங்கி கொண்டு கிளம்பினோம்.
வீட்டிற்கு வந்ததும் நேற்று போல் அல்லாமல் ரொம்பவும் சுத்தமாக மீண்டும் ஒருமுறை பால்கனி தோட்டத்தை மேம்படுத்தினோம்.
இல்லாள் சற்றே கிரியேட்டிவிட்டியாக
வீட்டு கொடிக்கம்பியில் தொங்கும் தோட்டத்தை உருவாக்கி கொண்டிருந்தார்.
வீட்டில் என்னைத் தவிர, யார் அங்கு நடந்தாலும் யார் தலையிலும் அது இடிக்காது. இனி நான் மட்டுமே குனிந்து மரியாதை செய்தபடி அங்கு சென்று வரவேண்டும். அந்த அளவிற்கு தாம் தொங்கி கொண்டிருக்கிறது தோட்டம்.
இதுவரை இல்லாளில் அடிக்கெல்லாம் பணிந்து நடந்து பழகியிருந்தேன். இனி அவர் நட்ட செடிகளுக்கெல்லாம் குனிந்து நடக்கப் பழக வேண்டும்.
இதற்கு இடையில் நாளை காலை, எந்தச் செடியும் காணாமல் போகவில்லை என பொம்மியை நம்ப வைக்க வேண்டும்.
இவ்வளவுக்கு மத்தியில் பொம்மி மீன்குஞ்சுகள் வாங்கினாள், வாய்ப்பு இருப்பின் அந்தக் கதையையும் சொல்கிறேன். உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்.
எங்களுக்கு நீங்கள்தானே இருக்கிறீர்கள்....

0 comments:
கருத்துரையிடுக