பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 11, 2026

- நமக்கான தித்திப்பு -


சமீபத்தில் அமெரிக்க, நியூயார்க் நகரில் நடந்த 'வாழும் தமிழ் இலக்கிய விழாவிற்கு',மலேசியாவில் இருந்து சென்றிருந்த எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் ஜெ.அரவின் குமாரை சந்தித்தேன்.

அங்கு சென்றுவந்த நினைவாக நண்பர்களுக்கு சாக்லெட்டுகள், டீ தூள்களுடன் ஃபிரிஜ் மேக்னட்டையும் கொடுத்தார்.

பொம்மிக்கும் கொடுக்கச் சொல்லி மேலும் சில சாக்லெட்டுகளைக் கொடுத்தார். நான் இந்தப் படத்தை எடுப்பதற்கு முன், பொம்மி இதிலிருந்து சில சாக்லெட்டுகளை எடுத்துவிட்டாள். சாப்பிட்ட அமெரிக்க சாக்லெட் தித்திப்பதாக சொன்னாள்.

ஜெ.அரவின் குமார், விரைவிலேயே அவரது பயண அனுபவத்தை எழுத உள்ளதையும் சொன்னார். அவர் கொடுத்த சாக்லெட்டுகளைவிடவும் இந்தச் செய்திதான் எனக்கு தித்திப்பாக இருந்தது.

அந்தப் பயண அனுபவத்தை அவர் எழுதிவிட்டால், அந்தத்
தித்திப்பை நாம் அனைவருமே அனுபவிக்கலாம்.


'எழுத்து உங்களை எங்கே அழைத்துச் செல்லும்...?" என யாராவது இனி கேட்டால் அதற்கு பதில் கொடுப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்ததற்கு எழுத்தாளர் அரவினுக்கும் இந்நேரத்தில் தாராளமாக வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்ளலாம்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்