பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 02, 2026

- அதனால் என்ன ? -


எதார்த்தமாக இருக்கிறது
அதனால் என்ன?
நன்றாக இருக்கிறது
அதனால் என்ன?

ஆழமாக இருக்கிறது
அதனால் என்ன?
கண்ணீர்விட வைக்கிறது
அதனால் என்ன?

நினைவை எங்கோ அழைக்கிறது
அதனால் என்ன?
சின்னதாய் சிரிக்கிறோம்
அதனால் என்ன?

மொழி இனிமையாக இருக்கிறது
அதனால் என்ன?
அத்தனையும் உண்மை
அதனால் என்ன?

மறக்கவே முடியாது
அதனால் என்ன?
அதுவொரு ஆன்மீக அனுபவம்
அதனால் என்ன?

ஒருவகையில் அது கண்ணாடி
அதனால் என்ன?
வலியின் அடையாளம்
அதனால் என்ன?

யாருக்காவது
புரியாமல் இருந்தால்தான்
அதை கவிதையென ஒத்துக்கொள்வோம்

அதுவரை எங்களுக்கு
அதனால் என்ன?

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்