சந்தேகம் கொள்ளாதே...
கண்கள்
இதயத்தின் நுழைவாயில் அல்லவா
ஏன் அதை
மூடி வைத்திருக்கிறாய்
திற
முதலில் உள்ளிருக்கும்
கசப்புகளும் கசடுகளும்
கண்ணீரால் கழுவி விடப்படட்டும்
பின்
எங்கிருந்தாவது ஓரொளி
உன் விழியை
வந்தடையும்
காலியிடங்களே நிரப்பபடும்
இதுதானே இயற்கை
சந்தேகம் கொள்ளாதே
கண்ணீர் விடவும்
காலி செய்யவும்
கொஞ்சமாய்த் தேவை
துணிச்சல்
அவ்வளவேதான்..
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக