நிறுவு
குற்றம் சொல்வதற்கு
எந்தவொறு ஆதாரக்கூறுகளும்
அவசியமற்றவை
சொல்லிக்கொண்டே
அடுக்கிக்கொண்டே
போய்க்கொண்டே இருக்கலாம்
ஆனால் அவற்றை
இல்லையென்று நிரூபிக்கத்தான்
இங்கு
படாதபாடு படவேண்டியுள்ளது
யோசித்துப்பார்த்தால்
குற்றம் சொல்லிச் சென்றவர்களைவிடவும்
அதை
இல்லையென்று நிரூபிக்கச் சொல்லி
காத்திருக்கும்
சமூகம்தான் எத்துணை
மோசமானது....
0 comments:
கருத்துரையிடுக