- காலாவதி காப்பீடு -
எதையும்
வேண்டுமென்றுதான்
எல்லோரும்
செய்வார்கள்
நீங்களும்தான்;
வேண்டுமென்று செய்கிறீர்கள்
அதன் உள்ளடுக்கோ
என்னை வேண்டாம் என்றே
விலக்குகிறது
அதனைப் புரிந்து
கொள்ளும் அனுபவப்பாடம்
முன்னமே
எனக்கு நடந்துவிட்டது
சரி
செய்யுங்கள்.
என் பெயரை அழித்துவிடுங்கள்
என் கைப்பேசி எண்
இல்லையென்றே சொல்லுங்கள்
அடிக்கடி கோவப்படுவேன்
என்றும் பரப்புங்கள்
விண்ணப்பித்த வேலைக்கு
நான் லாய்க்கற்றவன் என்றும்கூட
நிறுவுங்கள்
அதுதான் உங்களுக்கு
ஆனந்தம் என்றால்
நாம் சேர்ந்தே கொண்டாடுவோம்
பட்டாசுகள் வெடிப்போம்
உங்கள் செய்கை
உங்களின்
ஆயுளை நீடிக்குமென்றால்
எனக்கும் மகிழ்ச்சிதான்
ஆனால்
உங்களைச் சுற்றி
எல்லாமும் தொலைந்து
எல்லாமும் இழந்து
எல்லாமும் விலகி
நீங்கள் மட்டும்
நீண்ட ஆயுளில்
என்னதான் செய்வீர்கள்
என்பதை மட்டும்
எனக்கு விளக்கிவிடுங்களேன்
உடனே பட்டாசுகள்
வாங்கி வருகிறேன்..
0 comments:
கருத்துரையிடுக