அதன் பெயர் முகமல்ல !
சூது வாது
தெரியா முகங்கள்
கொண்டவர்கள் பாக்கியசாலிகள்
அவர்களின் முகங்களே
அவர்களுக்கான பாதுகாப்பு கவசம்
கையும் களவுமாக
பிடித்தாலும்
கண்முன்னே எதுவும்
நடந்தாலும்
அவர்கள் மீது
துளியும் சந்தேகம் எழுவதில்லை
அவர்கள் செய்யும்
அயோக்கியத்தனத்திற்கும்
அடையாளமே இருப்பதில்லை
ஊரை ஏமாற்றும்
முகத்தைத்தான்
தினம் தினம் பார்க்கிறார்கள்
என்றாவது ஒருநாள்
கண்ணாடியே காரி துப்பும்தானே
அப்போதுகூட
கண்ணாடிதான் வெட்கி
தலை கவிழும்
விழுந்தொடியும்...
0 comments:
கருத்துரையிடுக