பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 01, 2025

புத்தாண்டில் புதிய தொடர்

 


புத்தாண்டின் புதிய உற்சாகம் என சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்...

நடுகல்.காம் இணைய இதழுக்கு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற மதாந்திர தொடரை எழுதுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னமே என் வலைப்பூவிலும் முகநூலிலும் இந்தத் தலைப்பில் எழுத தொடங்கி;  தொடராமல் போன தொடர் இது... 

அதற்கான குறிப்புகளையும் புத்தகங்களை மீள்வாசிப்பு செய்வதற்கான நேரம் இப்போது அமைந்துள்ளது.

இம்முறை இத்தொடரை எழுதுவதற்கான தகுந்த இடம் கிடைத்திருக்கிறது. இனி திட்டமிட்டபடி இதனை முழுமையாக்கலாம்.

நான் வாசித்த/வாசிக்கும் மலேசிய புத்தகங்கள் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை இனி ஒவ்வொரு மாதமும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

இதுதான் இப்புத்தாண்டில் உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு. அதனை வாசிப்பதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. இவ்வாண்டு முழுக்க நாம் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளவிருக்கின்றோம். மகிழ்ந்திருப்போம்


அன்புடன் தயாஜி.

வாசிக்க இணைப்பு 👉

https://nadukal.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae/

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்