- ஜாலி,கூலி,காலி -
- ஜாலி, கூலி, காலி -
கைப்பேசியில் தமிழ் தட்டச்சு வந்த காலகட்டத்தில், தனக்கு தெரிந்த பொன்மொழிகள் பழமொழிகள் சினிமா பாடல் வரிகளை எழுதி அதற்கு கீழ் காலை வணக்கம் மதிய வணக்கம் இரவு வணக்கம் என எழுதி பகிர்வார்கள்.
பிறகு அதையே பூக்கள், இயற்கை காட்சிகள், அழகான பெண்களின் பின்னணி கொண்ட ஓவியங்களிலும் புகைப்படங்களிலும் எழுதி படங்களாக பகிர்ந்தார்கள்.
இப்போது கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் அதே மாதிரி அல்லது அதையே கவிதைகள் என்று நம்பிக்கொண்டு புத்தகங்களாக அச்சடித்துக் கொள்கிறார்கள்.
அப்படியும் அவர்களின் கவிதைகளின் கீழ், 'காலை வணக்கம்', 'மதிய, 'இரவு வணக்கம்' என்பதை போட்டுக்கொள்ளும் தைரியம் இன்னும் வரவில்லை.
அதுவரைக்குமாவது அவர்களைப் பாராட்டலாம்.
***********
எழுதினவன் ஜாலி
அச்சடிச்சவனுக்கு கூலி
வாசிக்கிறவன் காலி...!
காலை/மாலை/மதிய/இரவு
வணக்கம் நண்பர்களே.....
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக