வழி தப்பிய பறவைகள்
தீபத்திற்காய்ச்
சுடருக்கு நன்றி சொல்வாய்.
தீபம் கையேந்தித்
திரை மறைவில் பொறை வடிவாய்
தாங்கி நிற்பான்,
நினைந்திரு...
- ரவீந்திரநாத தாகூர்.
வாசிப்பில் 'வழி தப்பிய பறவைகள்'.
நவீந்திரநாத தாகூர் குறுங்கவிதைகள்.
பட்டு எம்.பூபதி தமிழாக்கம் செய்திருக்கிறார். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.
1998-ல் வெளியீடு கண்ட முதல் பிரதி.
பல ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு பழைய புத்தகக்கடையில் வாங்கி வைத்ததாய் நினைவு. சில நாட்களாக புத்தக அலமாரியை சுத்தம் செய்யும் போது கண்ணில் பட்டது.
சில வீடுகள் மாறியும் பல அட்டைபெட்டிகளில் ஏறி இறங்கியும் தப்பி பிழைத்து இன்னமும் எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் தனக்கென ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தது.
இனியும் தாமதிக்கக் கூடாது என்று, உடனே வாசிக்க தொடங்கிவிட்டேன்.
வாசிக்க வாசிக்க தன்னுள் நம்மை ஈர்க்கின்றன கவிதைகள். சிலவற்றை மீண்டும் மீண்டும் வாசிக்கின்றேன்...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக