தீரா காதல்
ஒரு நீண்ட கவிதை
யாரோ ஒருவரால்
நினைக்கப்பட்டு
யாரோ ஒருவரால்
தொடங்கப்பட்டு
யாரோ ஒருவரால்
வாசிக்கப்பட்டு
ரசித்து
சிரித்து
அழுது
புலம்பி
ஆறுதல் தேடி
தோள் தட்டி
கண்ணீர் துடைத்து
மீண்டெழுந்து பின்
யாரோ ஒருவரால்
தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கிறது
இவ்வுலகில் எண்களுக்கு
வேண்டுமெனில்
முடிவின்மை இருக்கலாம்
ஆனால்
எவ்வுலகிலும் முற்றுபெறாமல்
தொடர்ந்து எழுதப்படுவது
தன்னைத்தானே வார்த்தெடுப்பது
எப்போழுதும் கவிதைகளே
தீரா நதியாய்ப்
பாய்ந்தோடும்
தீரா கவிதையை
யாரால்தான் நிறுத்திவிட முடியும்
சுரக்கும் தாய்ப்பாலை
எந்தக் குழந்தைதான் மறுக்கும்....
0 comments:
கருத்துரையிடுக