பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு
சமீபத்தில் நடந்த பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக புத்தகங்களை விற்பனை செய்யும் வாய்ப்பினைக் கொடுத்திருந்தார்கள். என்னுடன் மேலும் சில மலேசிய எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
பலரை சந்திக்கவும் பேசவும் வாய்ப்பு கிடைத்தது.
நிகழ்ச்சி முடிந்து புறப்படும் போது வழக்கம் போல, PSM கட்சி அலுவலக நூல்நிலையத்திற்கு எனது புத்தகங்களைக் கொடுத்தேன்.
எங்கெல்லாம் நூல்நிலையங்களும் வாசிக்கும் மனங்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் என் புத்தகங்களும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் எழுதுவதும் அதற்காகத்தான்.
இவ்வாய்ப்பை எனக்கு எற்படுத்தி கொடுத்த தோழர்கள் அனைவருக்கும் குறிப்பாக தோழர் நாகேந்திரன் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும்...
0 comments:
கருத்துரையிடுக